Author: லிங்கேஷ்

  • Mesha Rasi Palan June 2026 | Aries Monthly Horoscope Predictions

    கிரகநிலை:
    ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில்  புதன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில்  சனி என கிரக நிலைகள் உள்ளன.
    கிரகமாற்றங்கள்:

    09-06-2026  அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    14-06-2026 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    19-06-2026 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    வீரத்தின் விளைநிலமான தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் அவசிய செலவுகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்திற்கு தளபதியாக விளங்குவீர்கள். நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம்.
            
    தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

    உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். 

    அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.

    கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.

    பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

    அஸ்வினி:
    இந்த மாதம் காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். 

    பரணி:
    இந்த மாதம் புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும். என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும். 

    கார்த்திகை:
    இந்த மாதம் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். 

    பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

  • Are you suffering from a debt crisis? You can get relief from it with simple spiritual remedies.

    கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறீர்களா? எளிய ஆன்மீக பரிகாரங்கள் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் பின்பற்றினால், செல்வ வளம் பெருகும்.

    1. பசுவுக்கு பாசிப்பருப்பு தானம்: பாசிப்பருப்பையும் வெல்லத்தையும் கலந்து, முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பசுவுக்கு (கோமாதா) அளிக்கவும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாக ஐதீகம். வாரம் ஒருமுறை இதை செய்தால், கடன் படிப்படியாகக் குறையும்.

    2. புதன் கிழமை தானம்: புதன்கிழமை புதன் ஹோரையில் பாசிப்பருப்பை அருகிலுள்ள கோவிலில் அல்லது ஏழைகளுக்கு தானமாக வழங்கவும். இது செல்வத்தை பெருக்கி, கடனை அகற்றும்.

    3. பாசிப்பருப்பு பிரசாதம்: பாசிப்பருப்பு சுண்டல் செய்து, கோவிலில் கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கவும். பிரதோஷ நாளில் இதை செய்வது சிறப்பு. இதனால் பணம் தேடி வரும்.

    4. குலதெய்வ வழிபாடு: குலதெய்வத்தை வணங்குவது மிக முக்கியம். பௌர்ணமி அன்று கோவிலில் பாசிப்பருப்பு பிரசாதம் படைத்து, கடன் தீர வேண்டவும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் வழிபாடு செய்யலாம். பிரசாதத்தை காகத்திற்கு சிறிது வைத்து, பின்னர் குடும்பத்தினருக்கு வழங்கவும்.

    இந்த நான்கு எளிய பரிகாரங்களையும் அல்லது இயன்றவற்றை முழு நம்பிக்கையுடன் செய்யவும். கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் வாழலாம்.

  • The Divine Curse of Lord Shiva on Brahma,The Sacred Lesson of Humility

     

    இந்து புராணங்கள் வெறும் கதைகள் அல்ல; நீதி, நேர்மை, பணிவு ஆகியவற்றைப் போதிக்கும் ஆழமான ஆன்மிகப் பாடங்கள்.

    பிரம்மாவின் ஐந்தாவது தலை அகந்தையின் அடையாளம் பிரம்மாவுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தன. ஐந்தாவது தலை அகந்தையின் சின்னமாக மேலே நோக்கியிருந்தது. சிவன்பார்வதி திருமணத்தில் புரோகிதராக இருந்த பிரம்மா, “என் ஐந்தாவது தலைக்கு தட்சணை எங்கே?” என அகந்தையுடன் கேட்டார். கோபமடைந்த சிவபெருமான் அந்தத் தலையைத் துண்டித்தார். அதனால் பிரம்மாவுக்கு நான்கு தலைகளே மீதமாயின. அகந்தை அழிக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

    பிரம்மா-விஷ்ணு மோதலும் சிவலிங்க சத்தியமும் “நானே மேலானவன்” என பிரம்மாவும் விஷ்ணுவும் தர்க்கித்தனர். அவர்களுக்கு சத்தியத்தை உணர்த்த சிவன் அளவற்ற நெருப்புத் தூணாக (சிவலிங்கமாக) தோன்றினார். விஷ்ணு அடியைத் தேடி தோற்று உண்மையை ஒப்புக்கொண்டார். பிரம்மா உச்சியைக் கண்டதாகப் பொய் சொல்லி, தாழம்பூவை சாட்சியாகக் காட்டினார். சிவன் பொய்யை அறிந்து சாபமளித்தார்: “பிரம்மாவுக்கு பூமியில் கோவில் இருக்கக் கூடாது; தாழம்பூ பூஜைக்கு உதவாது.”

    பாடம்: அகந்தையும் பொய்யும் எவ்வளவு உயர்ந்தவரையும் வீழ்த்தும். பணிவும் சத்தியமும் மட்டுமே நிலைத்து நிற்கும்.

  • November 08 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  செலவு
    ரிஷபம்         – துணிவு
    மிதுனம்     –  முயற்சி  
    கடகம்         –   பயணம்
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –     லாபம்  
    துலாம்         –  கவனம்  
    விருச்சிகம்     –  கீர்த்தி
    தனுசு         –   பயம்
    மகரம்         –   பொறுமை
    கும்பம்         –      ஆக்கம்
    மீனம்         –    நிம்மதி
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை

  • November 08 2024 Subamuhurthanaal

    நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஐப்பசி 22
    நவம்பர் 08 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 8.22
    நட்சத்திரம் :  உத்திராடம் கா 9.37
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Palani soorasamharam

    பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

     அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி,  மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார்.

    தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.  

    300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில்குமார் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • Pazhamuthir solai soorasamharam

    முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹாரம்: கொட்டும் மழையில் வெள்ளி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வை திரளான பக்தர்கள் "அரோகரா, வெற்றிவேல் வீரவேல்" என்ற கோஷத்துடன் கண்டும்  சுவாமியை மலர்தூவி வரவேற்று தரிசனம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு..:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீடாக போற்றப்படக் கூடிய பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாக்கூடிய கந்தசஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சமேதராக வீற்றிருக்கும் சோலைமலை உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் தொடர்ந்து அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்று வருகின்றது.

    தொடர்ந்து, சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக
    சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று, ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு  பால், பன்னீர். இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, மாலை வெள்ளி மயில் வானத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோயிலின் அருகேயுள்ள நாவல் மரத்தடி ஈசான திக்கில் "வெள்ளி வேல் கொண்டு"  கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், சம்ஹாரம் செய்து, தொடர்ந்து பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல் கோஷமும்" விண்னை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, நாளை ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. நடைபெறுகிறது.

  • Siruvapuri soorasamharam

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது.  

    முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார்.

    தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.

  • Thiruvarur Soorasamharam vizha

    சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய உபகோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா: உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

    சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களில் ஒன்றான ஆலயத்தின் வடக்குபகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இவ்வாலயத்தில் கடந்த  2ம் தேதி முதல் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹார விழா உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் திருவாரூர் வடக்குராஜ வீதியில் விமர்சையாக நடைபெற்றது.

    இவ்விழாவில் சூரபத்மன் பல்வேறு உருவங்களில் அதாவது கஜமுகாசுரனாகவும், சிங்கமுகாசுரனாகவும், சூரபத்மனாகவும் ஸ்ரீமுருகப்பெருமானை எதிர்கொண்டு போரிட்டபோது ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகப்பெருமான் தன்னிடம் உள்ள வெற்றிவேலைக்கொண்டு சூரபத்மன் தலையை கொய்து  வதம் செய்தார்.

    பிரசித்திபெற்ற இச்சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி பரவச கோஷத்துடன் முருகப்பெருமானை மனமுருக வழிபட்டனர். இதனை தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் மண்டியிட்டு பிரகாரத்தினை வலம்வந்து 6 நாள் சஷ்டி விரதத்தை நிறைவுசெய்தனர். இவ்விழாவில் கார்த்திகை வழிபாட்டுச்ங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சௌரிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

  • Thiruthani Kanthasasti puspanjali

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.

    இன்று ஆறாம் நாள் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு பத்து டன் வண்ண மலர்களால் சிறப்பு பூஜை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை சண்முகப் பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது.

    திரளான பக்தர்கள் மூன்று மணி நேரம் பூஜையில் கலந்து கொண்டு சாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலியை அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.