Author: லிங்கேஷ்

  • Thiruthani murugan kandha sasti vizha

    திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி நிகழ்ச்சி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. நவம்பர் 8-ஆம் தேதி உற்சவர் முருகப் பெருமானுக்கு பக்தர்களுக்கு முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில், இந்த ஆண்டு இன்று 02-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

     தினமும் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும்,  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவா் சண்முகருக்கு மலைக்கோயில் காவடி மண்டபத்தில் லட்சாா்ச்சனையும் நடைபெற்று. வெள்ளி கவச அலங்காரத்தில் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மலைப்பகுதியில் உற்சவர் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும்  நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு மலைக் கோவிலின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது  இந்நிகழ்ச்சியில் கந்த சஷ்டி விரதம் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  • Ilanchi kumarar koil kodiyetram

    தென்காசி மாவட்டம் இலஞ்சி குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இலஞ்சி குமாரர் கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்ச்சை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழாவானது இன்று அதிகாலை காலை 5 மணி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சுவாமிக்கு பலவேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து சிவாச்சாரியர்களின் முன்னிலையில் வேதமந்திரங்கள் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி அளவில் சூரசம்கார விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் பத்தாம் தேதி தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • November 03 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  கவனம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     –  நற்செயல்
    கடகம்         –   போட்டி
    சிம்மம்         –   பக்தி  
    கன்னி         –     இரக்கம்
    துலாம்         –  வரவு
    விருச்சிகம்     –  சுபம்  
    தனுசு         –   உற்சாகம்   
    மகரம்         –   உழைப்பு
    கும்பம்         –      மறதி
    மீனம்         –    சினம்  
    சந்திராஷ்டமம்    –        அசுபதி

     

  • November 03 2024 Chandra dharisanam

    நவம்பர் 03 – சந்திர தரிசன நாள்…
    குரோதி வருடம் – ஐப்பசி 17
    நவம்பர் 03 – 2024
    ஞாயிறு
    சந்திர தரிசன நாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 9.30
    நட்சத்திரம் :  விசாகம் கா 6.14
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   அசுவினி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • November 02 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         – முயற்சி
    மிதுனம்     –  நன்மை
    கடகம்         –   பக்தி
    சிம்மம்         –   மேன்மை
    கன்னி         –     பாராட்டு
    துலாம்         –  நலம்    
    விருச்சிகம்     –  சிக்கல்
    தனுசு         –   சினம்  
    மகரம்         –   செலவு
    கும்பம்         –      பாசம்
    மீனம்         –    பணிவு
    சந்திராஷ்டமம்    –        ரேவதி

  • November 02 2024 Sasti

    நவம்பர் 02 – கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
    குரோதி வருடம் – ஐப்பசி 16
    நவம்பர் 02 – 2024
    சனி
    கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்,
    கல்லறை திருநாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பிரதமை இ 8.06
    நட்சத்திரம் :  சுவாதி அ.கா 4.18
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • yoga lalithambigai maha abishegam

    புதுச்சேரி ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு ஒன்பது வகையான வாசனை திரவியங்களால்  மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை.

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், குங்குமம், கலச நீர் என பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச  தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா  லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

  • Prithyakara devi homam

    அரியலூர்- பிரித்தியங்கரா தேவிக்கு ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தீபாவளிக்கு மறுநாள் என்பதால் இனிப்பு வகைகள் கார வகைகள் யாகத்தில் இடப்பட்டன.

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்.இந்த ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டியாகம் நடைபெறுவது வழக்கம்.ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.

    யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு 108 வகையிலான மூலிகைகள் சேலைகள் யாகத்தில் இடப்பட்டன.

    பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில்  மதுரை, சேலம், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர்   உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தீபாராதனைக்கு பின்பு  அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Gowri amma oorvalam

    ஆம்பூர் அடுத்த  மின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கௌரி அம்மன் ஊர்வலமாக சென்று நீரோடையில் கரைத்த கிராம மக்கள் தாரை தப்பட்டை மானாட்டம் மயிலாட்டம் முழங்க பட்டாசு வெடித்து இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகை நாளில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள கௌரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு நோன்பு படைத்தல் நிகழ்ச்சி வருடா வருடம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பெண்கள் அதிரசம் பழங்கள் பூஜை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர் பின்னர் ஆலயத்தின் முன்பு ஒன்றாக இணைந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளி கலசத்தில் கௌரி அம்மன் முகம் பொருத்தி புத்தாடை மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வழிபட்டனர் பின்னர் தாரை தப்பட்டை , மானாட்டம்  மயிலாட்டம் கோலாட்டத்துடன் இளைஞர்கள் பட்டாசு வெடித்து அம்மனை  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நீரோடையில் கரைத்து வழிபட்டனர்.

  • October 31 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பாராட்டு    
    ரிஷபம்         – பெருமை
    மிதுனம்     – போட்டி
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   நற்செயல்  
    கன்னி         –    சுகம்  
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –    பேராசை
    மகரம்         –   புகழ்
    கும்பம்         –     உயர்வு
    மீனம்         –    ஆதரவு
    சந்திராஷ்டமம்    –        சதயம், பூரட்டாதி