Author: லிங்கேஷ்

  • November 07 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  துணிவு
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     –  இன்பம்
    கடகம்         –   லாபம்
    சிம்மம்         –   யோகம்
    கன்னி         –     துன்பம்
    துலாம்         –  உற்சாகம்
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –   பயணம்
    மகரம்         –   சாந்தம்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –    உயர்வு
    சந்திராஷ்டமம்    –        மிருகசீருஷம்

     

  • November 07 soorasamharam

    நவம்பர் 07 – சூரசம்ஹாரம்…
    குரோதி வருடம் – ஐப்பசி 21
    நவம்பர் 07 – 2024
    வியாழன்
    சூரசம்ஹாரம்,
    கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்
    கந்தசஷ்டி விரதம் முடிவு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி இ 9.32
    நட்சத்திரம் :  பூராடம் கா 9.55
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   மிருகசீரிடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • Kariyapatti kanda sasti vizha

    காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாள் யாகசாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 5-ம் நாளான இன்று வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி,தெய்வனை, சுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், மஞ்சள், அரிசிமாவு, தேன், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்துடன் முருகனுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்பு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Thiruparankundram vel vangum vizha

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில்  வேல் வாங்கும் விழா – பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கோவர்தானாம்பிகையிடமிருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கினார்.

    நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா நடைபெற்றது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகையிடமிருந்து வேல் வாங்கினார்.

    அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகார்ச்சனை நடைபெற்று வந்தது.

    உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    விழாவின் உச்ச நிகழ்ச்சியான  சூரசம்காரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிக்கையிடமிருந்து வேல் வாங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.

    கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவர்த்தனாம்பிகை சுப்ரமணிய சுவாமி மலர் மாலைகளாலும் தங்க வைர நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினர் தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருந்து கோவில் ஸ்தானிகபட்டர் வைர கற்கள் பதிக்கப்பட்ட வேலை பக்தர்களின் அரோக கோஷம் முழங்க சகல பரிவாரங்களோடு கையில் ஏந்தி வந்தார்.

    பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தாய் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகிழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் நடைபெறும்.

  • Om thiruthani murugan

    திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி ஐந்தாம் நாள் நிகழ்வில் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஓம் என்று வருவது போல் காட்சி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.

    இன்று ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் மூலவர் முருகப்பெருமானுக்கு இரண்டு மணி நேரம் சிறப்பு பூஜை, அபிஷேகம், பக்தர்கள், இன்று நடைபெற்றது கோவில் கதவுகள் மூடப்பட்டது. தனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகப் பெருமான் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய அவருக்கு  இலட்சார்ச்சனை வில்வ இலை அர்ச்சனை நடைபெற்றது.

    சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஓம் என்ற வடிவில் புஷ்ப மாலை அணிவிக்கப்பட்டு ரம்மியமான முறையில் பக்தர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை ஆறாம் நாள் கந்தசஷ்டி நாளில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி வண்ண மலர்களால் 3 டன் மலர்களைக் கொண்டு நிகழ்ச்சி திருக்கோயிலில் காவடி மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • Sarva alangarathi pazhamudir cholai murugan

    பழமுதிர் சோலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழா: நான்காவது நாள் விழாவாக சர்வ அலங்காரத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபாடு…

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திபெற்ற அழகர்மலை உச்சியில்,  முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில், ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய சஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று வருகின்றது.

    இந்நிலையில், நான்காம் நாள் நிகழ்ச்சியாக இன்று. சோலைமலை மண்டபத்தில் சமேதராக  உள்ள சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

    இதனையடுத்து ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி எழுந்தருளப்பட்டு, திருக்கோவிலைச் சுற்றியுள்ள மண்டப வீதிகளில், சிவ வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நாளை 5ஆம் நாள் நிகழ்ச்சியாக சண்முகா அர்ச்சனையும், சப்பர வீதி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து 6ஆம் நாள் நிகழ்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், திருக்கோவில் அருகேயுள்ள நாவல்மரத்தடி விநாயகர் கோவில் முன்பு நடைபெற உள்ளது.

    இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை 07ஆம் நாள் விழாவாக திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் சஷ்டி விழா நிறைவடைய உள்ளதையடுத்து. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்  குழு தலைவர் வெங்கடாசலம், அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், முருகன் திருகோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • Thiruparmkundram shanmugar

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது விழாவினை முன்னிட்டு தினமும் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல தினமும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு காலையிலும் மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும் விழாவின் நான்காம் நாளான இன்று சண்முகர் சன்னதியில் சண்முகா அர்ச்சனை நடைபெற்றது.

    சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்கள் சமகாலத்தில் தீபாராதனைகள் செய்யப்படும் தொடர்ந்து சுவாமிக்கு புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், தேங்காய் சாதம், வடை ஆகியவை சுவாமிக்கு பிரசாதமாக வைக்கப்பட்டது. தொடர்ந்து சண்முகர் மயில்மேல் அமர்ந்த அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

    வழக்கமாக சண்முகர் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் வைகாசி விசாகத்தின்போது சண்முக சன்னதியில் இருந்து புறப்பாடாகி விசாக கொரடு மண்டபத்தில் எழுந்தருளும் சண்முகர் நின்ற கோலத்திலேயே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவார்.

    கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாள் மட்டும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை ஆறாம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் ஏழாம் தேதி சூரசம்கார லீலையும் எட்டாம் தேதி கந்தசஷ்டி தேரோட்டமும் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • November 06 2024 Indrayanaal

    நவம்பர் 06 – சிக்கல் சிங்காரவேலன் தேர்…
    குரோதி வருடம் – ஐப்பசி 20
    நவம்பர் 06 – 2024
    புதன்
    சிக்கல் சிங்காரவேலன் தேர்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி இ 10.15
    நட்சத்திரம் :  மூலம் கா 9.46
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் :   ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • November 06 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     –  ஓய்வு
    கடகம்         –   பரிவு
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –     நட்பு
    துலாம்         –  நன்மை
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –   ஆதரவு
    மகரம்         –   வெற்றி
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –    பொறாமை
    சந்திராஷ்டமம்    –        ரோகிணி

  • Siruvapuri Murugan Temple Kandha Sasti Vizha

    பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். 7ஆம் தேதி சூரசம்ஹாரம், 8ஆம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சகட்டமாக வரும் 7ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.