Blog

  • Thiruchendur Senthil Andavar Sirappugal

    சகல வாஸ்து லட்சணங்களுடனும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செந்திலாண்டவன் ஆலயம் திருச்செந்தூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

    முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘புட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

    ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.

    கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை உணர்த்தவே!

    முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

     இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.

    மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

    மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

    இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.

    உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராக செந்திலாண்டவர் காட்சி தருகிறார்.

    ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
    ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
     

  • Thirumana thadai neenga

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது. 

    ஓம் ஷண்முக பதயே நமோ நம!
    ஓம் ஷண்மத பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
    ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
    ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
    ஓம் நவநிதி  பதயே நமோ நம!
    ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
    ஓம் நரபதி பதயே நமோ நம!
    ஓம் சுரபதி பதயே நமோ நம!
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
    ஓம் ஷடஷர பதயே நமோ நம!
    ஓம் கவிராஜ பதயே நமோ நம!
    ஓம் தபராஜ பதயே நமோ நம!
    ஓம் இகபர பதயே நமோ நம!
    ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
    ஓம் ஜயஜய பதயே நமோ நம!
    ஓம் நயநய பதயே நமோ நம!
    ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
    ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
    ஓம் வல்லீ பதயே நமோ நம!
    ஓம் மல்ல பதயே நமோ நம!
    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
    ஓம் இஷ்டி பதயே நமோ நம!
    ஓம் அபேத பதயே நமோ நம!
    ஓம் கபோத பதயே நமோ நம!
    ஓம் வியூஹ பதயே நமோ நம!
    ஓம் மயூர பதயே நமோ நம!
    ஓம் பூத பதயே நமோ நம!
    ஓம் வேத பதயே நமோ நம!
    ஓம் புராண பதயே நமோ நம!
    ஓம் ப்ராண பதயே நமோ நம!
    ஓம் பக்த பதயே நமோ நம!
    ஓம் முக்த பதயே நமோ நம!
    ஓம் அகார பதயே நமோ நம!
    ஓம் உகார பதயே நமோ நம!
    ஓம் மகார பதயே நமோ நம!
    ஓம் விகாச பதயே நமோ நம!
    ஓம் ஆதி பதயே நமோ நம!
    ஓம் பூதி பதயே நமோ நம!
    ஓம் அமார பதயே நமோ நம!
    ஓம் குமார பதயே நமோ நம!

    ஓம் சரவண பவ 
     

  • Thiruvarur Thyagarajar Temple Teporchavam

    திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்த தெப்பத்திருவிழா நிறைவடைந்தது.


    வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர்  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மூன்று நாட்களாக  கோலாகலமாக நடைப்பெற்று வந்த தெப்பத்திருவிழா நிறைவடைந்த்து.தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப்பெருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்றது. 

    இவ்விழாவின் முக்கிய விழாவான ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடைப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவுத்திருவிழாவான புகழ் பெற்ற தெப்பத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்தது. 

    கமலாலயத்திருக்குளத்தில் பிரமண்டமாக வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்மிகு பார்வதி சமேத கல்யாணசுந்தர்ர் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் ஏழுந்தருள செய்யப்பட்டு  தினமும் மூன்றுமூறை கமலாலயத்திருக்குளத்தில்  தெப்பம் பவனி வந்த்து. 

    இந்த தெப்பத்திருவிழாவை தினமும் பல்லாயிரக்கணக்கானோர் விடிய விடிய கண்டுகளித்தனர். கோலாகலமாக நடைப்பெற்றத்தெப்பத்திருவிழா நேற்று 16.6.19நிறைவடைந்த்து. இதைத்தொடர்ந்து சுவாமி ஆலயத்திற்கு திரும்பியது.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவனம் 
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – வெற்றி
    கடனம் – மேன்மை 
    சிம்மம் – நன்மை 
    கன்னி –  பயம் 
    துலாம் –  பாசம் 
    விருச்சிகம் – ஏமாற்றம் 
    தனுசு – வரவு
    மகரம் –   தடங்கல்
    கும்பம் – ஆக்கம் 
    மீனம் –     லாபம்
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை,ரோகிணி
     

  • June 17 – Full moon Day

    ஜூன் 17 –  பவுர்ணமி
    விகாரி வருடம் – ஆனி 2
     பவுர்ணமி
    17-ஜூன்-2019 திங்கள்  ஷவ்வால்13
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    பவுர்ணமி    ம    2.49
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    11.44
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thirupathy Jestabishegam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் சிலையை பாதிக்காமல் இருப்பதற்காக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது.

     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் நடைபெற்ற அபிஷேக ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு  அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 

    இதனால்  சுவாமி  சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் உற்சவத்தை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். இந்த உற்சவம் ஒவ்வொரு  ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். 

    அதன்படி இந்தாண்டு  3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. 

    முதல் நாள் வைர கவசமும் , இரண்டாவது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டு சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாவது நாளான இன்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. 

    இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீண்டும் தங்க கவசம்  அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர் .  
     

  • Agni Vasandha vizha

    காட்பாடி அடுத்த அம்முண்டி கிராமத்தில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவை முன்னிட்டு இன்று தபசு மரம் ஏறும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை காண சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.

     

  • Thirupathy Muthu Kavasa vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தில் முத்து கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மலையப்ப சுவாமி .

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர  ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில்  2-வது நாளான இன்று கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில்  11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

    மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளையொட்டி கோவிலில் இன்று  வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான நாளை ஞாயிறன்று உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இந்த தங்க கவசம் அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட உள்ளது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – விருப்பம் 
    ரிஷபம் – நற்செயல் 
    மிதுனம் – துணிவு
    கடனம் – பயம்
    சிம்மம் – செலவு  
    கன்னி –  புகழ்
    துலாம் –  ஆதாயம்  
    விருச்சிகம் – நஷ்டம் 
    தனுசு – துணிச்சல்
    மகரம் –   பெருமை
    கும்பம் – பொறுமை 
    மீனம் –     கவலை
    சந்திராஷ்டமம்    – பரணி, கார்த்திகை
     

  • June 16 – Indraya Naal Eppadi

    ஜூன் 16 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆனி 1
    16-ஜூன்-2019 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    2.56
    நட்சத்திரம்    :    அனுஷம்    கா    11.10
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    : பரணி, கார்த்திகை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்