Blog

  • Tuesday do’s & dont’s

    செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

    செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

  • Thiruparankundram gold car

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த தங்கத்தேரை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  பக்தர்கள்  நேர்த்தி கடனாக தங்கத்தேர்  இழுப்பது வழக்கம் கோயில் நிர்வாகத்தின்  சார்பில்  தேர் இழுக்க கட்டணமாக  ரூ 2000/- வசூலிக்கப்படுகின்றது.  

    கடந்த 2 ஆண்டுகளாக பரமரிப்பு பணி காரணமாக இழுக்கப்படாமல் இருந்த தங்க தேர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

    தங்கத்தேரின் இயக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தங்கத் தேரை நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். 

    தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • Death sentence for cutting trees

    உலகின் முதன்மை மொழி, இலக்கணம் வகுக்கப்பட்ட மொழி, வாழ்வியலை செம்மைப்படுத்திக் கட்டமைத்த மொழி தமிழ். தமிழர்களின் கட்டுமான மற்றும் அடையாளச் சின்னங்களாக இன்றும் நிலைத்து நிற்பவை கற்களால் கட்டப்பட்ட கோவில்கள். இக்கோவில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு மையங்களாக இல்லாமல், பாடல், ஆடல், இசைக் கலைக்கான அரங்கங்களாகவும், ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான ஒரு கண்காட்சியாகவும் விளங்கியிருக்கின்றன. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களைக் காக்கும் அரணாகவும், கோபுரக் கலசங்களில் தானியங்களைப் பராமரித்ததன் அடிப்படையில் வேளாண்மைக்கு உதவியதாகவும் எனப் பலப் பயன்பாடுகள் கோவில்களில் இருந்துள்ளன. 

    கோவில்களைச் சுற்றியுள்ள வேளாண் நிலம், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களின் பல்வேறு காய் கனிகளின் வளர் தோட்டங்களாகவும் இருந்திருக்கின்றன. கோவிலுக்கு முன்னர் வெட்டப்பட்ட குளம் நீர்தேக்கும் நீர் ஆதாரமாக விளங்கியிருக்கிறது.

    இதேபோல,  மக்கள் உடல்நலன் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கும் பொது இடமாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக துளசி தீர்த்தம் அளிக்கப்படும் கோவில் பகுதிகளில் காய்ச்சல், சளித் தொல்லை குறைவாக இருப்பதையும், தொற்று வியாதிகள் சில தொற்றாததையும் கடந்த காலங்களில் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    அந்த வகையில் கோவில்கள் தமிழர்கள் நூலகங்களாகவும் செயல்பட்டுள்ள என்கிறார் தஞ்சை சரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதரும், சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் கோவில்கள் ஆய்வறிருமான முனைவர். மணிமாறன்.

    பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை, தென்புலத்தார், ஐயை உலகத் தமிழ் மகளிர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னையில் ஓலைச்சுவடியியல் மற்றும் தமிழ்த் தொன்ம ஆய்வியல் பயிலரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

    சூன் 7 மற்றும் 8 ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக, முனைவர்.மணி.மாறன், பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி.கோ.ஜெயலட்சுமி, சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வளார் ஒரிஸா பாலு ஆகியோர் பயிலரங்கில் பங்கு பெற்றனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேந்தவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் சுவடிகள் பற்றிய அடிப்படை, கிரந்த எழுத்து முறைகள், சுவடிகளில் நாட்டுப்புற வாழ்வியல், சுவடிகள் படிக்கும் முறை, பாதுகாக்கும் முறை உள்ளிட்ட அடிப்படையான பல ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன, பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

    பயிலரங்கில் ஆய்வுரை மற்றும் பயிற்சி அளித்த முனைவர் மணி.மாறன் பேசும்போது, தமிழர்களின் கோவில்கள் வெறும் கட்டடக்கலைக்கான சான்றுகளாக மட்டுமே நிற்கவில்லை, அவை தமிழர்களின் வாழ்வியல் சான்றாக நிற்கின்றன என்று கூறினார். தமிழக கோவில்களில் நூலகங்கள் செயல்பட்டன என்று குறிப்பிட்ட அவர், தமிழர்கள் முழுமையான முற்போக்கு அறிவு பெற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்று கூறினார். சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிட்ட அவர் மரங்களை வெட்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட தகவல்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளதாகக் கூறினார்.

    தொடர்ந்து பயிற்சி அளித்த தஞ்சை பாபநாசம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையும், சுவடியியல் ஆய்வாளருமான கோ. ஜெயலட்சுமி, கிரந்த எழுத்துக்கள் என்பவற்றை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழர்களே என்று உறதிபடக்கூறினார். சமஸ்கிருதத்தைப் படிக்கப் பயன்டுத்தவேண்டிய நிலை வந்தபோது தமிழ் முழுமையாகச் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, சமஸ்கிருதத்தைப் படிப்பதற்காகவே தமிழர்களால் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே கிரந்த மொழி வடிவம் என்று தரவுகளோடு எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய, சென்னைத் தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் மற்றும் தமிழிலக்கியத் துறை உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், தமிழர்கள் வணங்கும் குல தெய்வம் என்பர்கள் அனைவருமே பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகின்றனர், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகிறார்கள் என்று ஒவ்வொரு குல தெய்வத்தின் பின்னணி வரலாற்றையும் விளக்கினார். மேலும், முருகனுக்கு ஒரே மனைவிதான் என்று குறிப்பிட்ட தாமரைப்பாண்டியன், தெய்வயானை என்பதெல்லாம் பின்னர் திணிக்கப்பட்ட கற்பனைக் கதை என்று கூறினார்.

    பயிலரங்கில் பேசிய கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிஸா பாலு, தமிழர்களின் கடல்சார் அறிவியல் உலகின் தலைசிறந்த அறிவு என்று கூறினார். உலகின் 190 நாடுகளில் தமிழர்களின் வேர்கள் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்கூறிய அவர் ஓலைச் சுவடிகளில் தமிழர்களின் கடல்கடந்த வணிகம் பற்றிய பல குறிப்புகள் இருக்கவேண்டும் என்றும் அதுபற்றி முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

    தொன்ம ஆய்வுகள் எப்படிச் செய்யப்படவேண்டும் என்று உரையாற்றிய அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர்கள் ஒரு இலக்கை நோக்கி குறித்த ஆய்வுமேற்கொள்ளாமல் பரந்து பட்ட விரிவான, எதையும் விவாதத்திற்குள்ளாக்கி முடிவுக்கு வரும்வகையில் உறுதியாகவும், தெளிவாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்றார். யாரோ சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்ந்தறிந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக, பயிலரங்கை சென்னை எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அரங்கமல்லிகா தொடங்கி வைத்து உரையாற்றியதுடன், மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கினார். பயிலரங்கின் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து ஐயை மகளிர் குழுவைச் சேர்ந்த திருமகள், போதிதர்மர் அறக்கட்டளை இயக்குநர் உமா பாலு, பத்திரிகையாளர் பா.ஏகலைவன், விழுப்புரம் ஐயை இஸ்மத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்

  • June 10 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நலம் 
    ரிஷபம் – ஏமாற்றம் 
    மிதுனம் – பாராட்டு 
    கடனம் – நன்மை 
    சிம்மம் – வரவு
    கன்னி –  ஓய்வு
    துலாம் –  யோகம் 
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – வெற்றி
    மகரம் –   ஆக்கம் 
    கும்பம் – அசதி
    மீனம் –     உதவி
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம்
     

  • June 10 Indraya Nalla Neram

    ஜூன் 10 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 27
    10-ஜூன்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    12.09
    நட்சத்திரம்    :    பூரம்    மா    4.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : அவிட்டம், சதயம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Kungumam Vaipadhin Magimaigal

    பொதுவாகவே நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது அறிதாகவே இருக்கிறது. இப்போது எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு தான். ஆனால் குங்குமம் வைப்பதன் மகிமை குறித்து தெரியாதவர்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். குங்குமம் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்னகளை பார்ப்பதற்கு முன் குங்குமம் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்போம்.

    படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துத்தான் குங்குமம் செய்ய வேண்டும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச்சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி  நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட  நோய்கள் வராது. தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது. மூளைக்குச் செல்லும் நாம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்தக் கூடிய இடம் நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் சூடு தணிகிறது.

    இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய சக்தி கிடைக்கிறது. குங்குமம் முறையாக தயாரித்திருந்தால்தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்னைகள் வரலாம்.

    ஆன்மிகத்தில் முக்கிய இடம் வகிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களைப் பார்க்கும்போது லக்ஷ்மிகரமாக தோன்றுவதைக் காணலாம்.

    நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் தனிப்பலன் கிடைகும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.
     

  • Dyanam Endral enna

    பதஞ்சலி முனிவரின் கருத்துப்படி “குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்திவைக்கும் நிலையில் சிறிது நேரம் நிலைத்திருத்தல்” தியானம் எனப்படும்.

    பலர் தாம் தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டு தாரணையே செய்கின்றனர். இது தியானத்தின் முதற்படியாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் மனம் அசைவற்று நிறுத்தப்படுகின்றது. அசைவற்று நிற்கும் மனம் அப்படியே நிலைத்து நிற்கும் போது தியானமாக மாறுகின்றது.  இதனையே பதஞ்சலி முனிவர் “தத்ர ப்ரத்யயைகதானத த்யானம்” என யோகசூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

    மனம் தான் வேறு நினைக்கின்ற பொருள்வேறு, என்றில்லாமல் அதுவாகவே அது மாறுதல் தியானத்தின் ஆரம்பம் உதாரணம், தாமரைப்பூவை நினைத்துத் தியானம் செய்பவர் தானே தாமரை மலராகி அதன் மணம், குணம் போன்ற அனைத்துத் தன்மைகளையும் அறிந்தவராவார். மனத்திற்கு அப்பாற்பட்டது தியானம்.

    தியானம் ஆரம்பத்தில் மனதின் செயற்பாடாக இருந்த போதிலும் இறுதியில் அதன் செயற்பாடு அற்றுப் போகின்றது.

    தியானம் செய்பவர் தன்னை மறந்தவராகின்றார். இது தூக்க நிலைபோன்று இருக்கும். ஆனால் வழமையான நித்திரைக்கும் தியானத்திற்கும் வேறுபாடு உண்டு. நித்திரை சாதாரண உணர்வு நிலை, தியானமோ உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது மனதைக் கடந்து உணர்வு பிரிந்து உள்முகப்படும் நிலை. இந்நிலையில் புதுவித அனுபவங்களையும் இன்பங்களையும் பெறலாம்.

    தியானத்தில் ஈடுபடும் ஒருவர் கவனத்தில் எடுக்க வேண்டியவை.,,,

    முடிந்தவரை தனி அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் வேண்டும். அறையில் முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், தேவர்கள் முதலியோரின் படங்கள் தொங்கவிடப்படலாம். சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி மலர்களால் அலங்கரித்து அறையைத் தூய்மையுடையதாகவும், வாசனையுடையதாகவும் வைத்துக்கொள்ளலாம். 

    கோபம், பயம், தீய எண்ணங்கள் அற்று நல்ல எண்ணங்களுடன் அறையில் நுழைதல், தீயவர்களை அறையினுள் அழைத்துச் செல்லாதிருத்தல், அறையினுள் விதண்டா வாதம் பேசுதல், நித்திரை செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

  • Atthi Varadhar

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம்,  ஜூலை 1 ஆம் தேதி துவங்குவதை அடுத்து குளத்துநீர் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. 

    கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கையில் இதுவும் ஒன்று. குளத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிழக்கு கோபுரம் அருகில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது. மேலும், குளத்தில் உள்ள மீன்களையும் பிடித்து அந்த குளத்தில் விட இருக்கிறது. 

    அனந்த சரஸ் குளத்தின் தண்ணீர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. முழுவதும் வரும், 20ம் தேதிக்கு மேல் எடுக்கப்படும். அதன் பின். குளத்தில் அடியில் தேங்கியுள்ள சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. 

    இம்மாத இறுதிக்குள் முழுதும் சுத்தம் செய்து, குளத்தில், மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வெளியில் எடுக்கப்படுவார். பின், அதற்கான ஆகம விதிபடி பூஜைகள் முடிந்து, ஜூலை, 1 முதல் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் அத்தி வரதர் எழுந்தருள்வார்.

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் – நிம்மதி
    மிதுனம் – புகழ் 
    கடனம் – பயம் 
    சிம்மம் – அன்பு
    கன்னி – லாபம் 
    துலாம் –  உற்சாகம் 
    விருச்சிகம் – கவனம் 
    தனுசு – ஆக்கம் 
    மகரம் –   எதிர்ப்பு 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     பக்தி 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • June 9 Indraya Naal Eppadi

    ஜூன் 9 – சூரிய வழிபாடு நன்று
    விகாரி வருடம் – வைகாசி 26
    09-ஜூன்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    2.33
    நட்சத்திரம்    :    மகம்    மா    5.53
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்