Blog

  • June 7 Indraya Nalla Neram

    ஜூன் 7 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 24
    07-ஜூன்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    9.42
    நட்சத்திரம்    :    பூசம்    இ    9.05
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நற்செயல்
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – வெற்றி 
    கடனம் – சுகம் 
    சிம்மம் – நலம் 
    கன்னி – வருத்தம்  
    துலாம் –  நன்மை  
    விருச்சிகம் – நட்பு
    தனுசு – அமைதி
    மகரம் –   வரவு
    கும்பம் – பாராட்டு
    மீனம் – முயற்சி
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  •  June 6 _ subamugurthanaal 

    ஜூன் 6 – சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – வைகாசி 23
    06-ஜூன்-2019 வியாழன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    11.48
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    இ    10.29
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Kokkulam Erudhu kattu thiruvizha

    23 ஆண்டுகளுக்கு பின் ஆறு கரை மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் கொக்குளம் எருதுகட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    பெக்காமன் கருப்பசாமி, அய்யனார், ஆதிசிவன், முத்தையா சுவாமி, பேச்சியம்மன்,  காமாட்சியம்மன் என்ற ஆறு தெய்வங்களின் எல்லை பகுதிகளை உள்ளடக்கி, இந்த தெய்வங்களில் பேக்காமன் கருப்பசாமி, அய்யனார், ஆதிசிவன், முத்தையா சுவாமிகளுக்கு சிலை வடிவமைக்கப்பட்டு, அந்த அந்த கோவில்களுக்கு கொண்டு சென்று கிடாவெட்டி படையல் செய்து வழிபாடு செய்யும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

    முதல்நாள் திருவிழாவாக குதிரை எடுப்பு திருவிழாவில் பாறைப்பட்டி எனும் இடத்திலிருந்து அந்த அந்த கோவில்களுக்கு கொண்டு செல்லப்படும் குதிரைகளை எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது… சுவாமி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்து பூஜைகள் செய்தனர்..

    மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடியுள்ள மக்களை பாதுகாக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்…

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உற்சாகம் 
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – நன்மை 
    கடனம் – செலவு
    சிம்மம் – பாராட்டு  
    கன்னி – எதிர்ப்பு 
    துலாம் –  நற்செயல் 
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – வருத்தம் 
    மகரம் –   சுகம் 
    கும்பம் – பொறுமை 
    மீனம் – சிக்கல்
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்
     

  • June 5 Indraya Naal Eppadi

    ஜூன் 5 – மாதவி விரதம்
    விகாரி வருடம் – வைகாசி 22
    05-ஜூன்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    துவிதியை    ம    1.38
    நட்சத்திரம்    :    திருவாதிரை    இ    11.41
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • muruga peruman

    முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

    முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

    பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

    முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

     தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

    மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

     முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

    முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

     கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

    முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு
    ரிஷபம் – சினம் 
    மிதுனம் – உதவி
    கடனம் – பாராட்டு
    சிம்மம் – நன்மை 
    கன்னி – புகழ் 
    துலாம் –  உயர்வு
    விருச்சிகம் – பெருமை
    தனுசு – கோபம் 
    மகரம் –   பரிசு
    கும்பம் – ஆக்கம்  
    மீனம் – அமைதி
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை
     

  • June 4 Vasthu Naal

    ஜூன் 4 – வாஸ்து நாள்
    விகாரி வருடம் – வைகாசி 21
    04-ஜூன்-2019 செவ்வாய்  
    வாஸ்து நாள்(காலை 9.58 – 10.34)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    3.10
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    12.35
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Gayathri Mandirathinai Japipadhan Payangal

    மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

    ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

    11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

    31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

    62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.