Blog

  • putlur amman temple

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூரில் உள்ளது பூங்காவனத்தம்மன் கோயில். நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக மட்டுமின்றி, எல்லா விதமான வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள் மக்கள்.

    கோயிலின் சிறப்புகள் ….. 

    புட்லூர் அம்மன் கோயிலில் மூலவராக அங்களபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். தல விருக்ஷமாக வேப்பமரம் உள்ளது .

    ராமபுரம் எனும் கிராமம், பசுமை நிறைந்த வயல் வெளியாக இருந்தது. மேல்மலையனூரில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை அழைத்துக் கொண்டு காடு-மேடுகளைக் கடந்து நடந்து வந்தார் ஒருவர். 

    இடுப்பில் கூடையை ஏந்தி, சூலத்தை ஊன்றுகோலாக பயன்படுத்தி மெள்ள நடந்து வந்த அந்தப் பெண்ணுக்கு, கடும் தாகம்! நா வறண்டு, நடக்க இயலாமல், அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தாள். ”அப்படியே படுத்துக் கொள்ள தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, கணவர் தண்ணீரைத் தேடி ஓடினார்.

    வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்! ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம்.

    நேரம் ஆக ஆக நீர் வரத்து மெள்ள குறைந்தது கரை கடக்க வழியும் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், தண்ணீருடன் கரையைக் கடந்து மனைவி அமர்ந்திருந்த மரத்தடிக்கு ஓடினார். அங்கே… அந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போனார். அவரின் நிறைமாத கர்ப்பிணி, புற்றுருவமாகக் கிடந்தாள்.

    அங்காள பரமேஸ்வரி, மனித உருவில் தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்து மெய்சிலிர்த்தனர் ஊர்மக்கள் புற்றுருவாக தோன்றியவளுக்கு அங்கு கோயில் எழுப்பினர்.

    மரம், செடி, கொடிகளுடன் பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத்தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர். அங்காள பரமேஸ்வரி  என்ற பழைய பெயரும் இவளுக்கு உண்டு!

    புட்லூர் அம்மன் கோயில்  பிராத்தனை

    புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும்  திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம் . 

    திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் ரயில் நிலையம் அருகில் இருக்கிறது இந்த கோயில். சென்னையில் இருந்து ரயில் மூலமாக இந்த கோயிலுக்கு செல்லலாம். அதேபோல ராமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு செல்ல முடியும். 

  • Siddhargal vazhndha Sekkar giri

    தோவாளையில் மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்ந்த மலை தான் செக்கர் கிரி. இந்த மலையில் தான் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் முருகபெருமான் அமைந்திருக்கும் கருவரை பாறை குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இருந்தும் சித்தர்கள் மலையில் தங்கி சுவாமிக்கு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் உள்ளது. கோவிலில் லாடசுவாமி என்ற சித்தரின் சிலை உள்ளது. இதில் அவர் ஜடாமுடியுடன், கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் உத்திராட்சை மாலைகளுடனும் காட்சியளிக்கிறார். 

    மலைக்கோவிலில் பால் கிணறு ஒன்று உள்ளது. இதில் உள்ள தண்ணீர் பால் போன்று சுவையாக இருக்குமாம். எந்த கோடையிலும் கிணறு வற்றியது கிடையாதாம். ஆகவே பக்தர்கள் கிணற்று தண்ணீரை தீர்த்தமாக கருதி அருந்துகின்றனர். நோய் வாய்பட்டவர்கள் அருந்தினால் நோய் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது. இதே போல் கோவிலில் கஞ்சி வழங்குவது விஷேசமாக கூறப்படுகிறது. 

    பிரசாத கஞ்சியை அருந்துகின்ற கர்ப்பிணிகளுக்கு பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறதாம். சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு சற்று மேற்பகுதியில் ஒரு பாறை குகையில் ராமர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கோவிலுக்கு முன் பகுதியில் ஆவுடையம்மாள் சன்னதிக்கு முன்பாக காளி கோவில் உள்ளது. செக்கர்கரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி மற்றும் சூரசம்கார விழா, வைகாசி விசாக விழா, மலர் முழுக்கு விழா, மாசி விழா நடக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அன்னதானமான கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சுற்றுலா வருகின்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து செல்கின்றனர். 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி 
    ரிஷபம் – தனம் 
    மிதுனம் – லாபம்  
    கடனம் – ஆக்கம் 
    சிம்மம் – வெற்றி
    கன்னி – சினம் 
    துலாம் –  போட்டி 
    விருச்சிகம் – உயர்வு
    தனுசு – பெருமை 
    மகரம் –   குழப்பம் 
    கும்பம் – அன்பு  
    மீனம் – பரிசு
    சந்திராஷ்டமம்    – சித்திரை,சுவாதி
     

  • June 1 Sivarathiri

    ஜூன் 1 – மாத சிவராத்திரி
    விகாரி வருடம் – வைகாசி 18
    01-ஜூன்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    மா    5.14
    நட்சத்திரம்    :    பரணி    இ    12.55
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thirupathy Heavy Rush

    திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிகிக்க கட்டுக்கடங்கா பக்தர்கள் கூட்டம் இருப்பதால் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆனது.

    வார விடுமுறை, பள்ளிகள் கோடை விடுமுறை முடிய உள்ளது போன்ற காரணங்களால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கம் எங்கும் மனித தலைகளாகவே காணப்பட்டன.

    இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலுள்ள அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.

    இதனால் சுமார் 30 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து உள்ளே அனுப்ப தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.  எனவே 300 ரூபாய் டிக்கட், திவ்ய தரிசனம் டோக்கன்கள்,  இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை வாங்கி சென்ற  பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சற்று அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
     

  • Palani Dhandayudhapani Abishegam

    தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

    அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

    ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

    விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

    அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

    இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

    அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

    போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

    கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

    தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

    பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி 
    ரிஷபம் – சிரமம்
    மிதுனம் – பாசம் 
    கடனம் – நற்செயல் 
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – வெற்றி
    துலாம் –  சலனம் 
    விருச்சிகம் – ஆர்வம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   நலம் 
    கும்பம் – பிரயாசை  
    மீனம் – கீர்த்தி
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை
     

  • May 31 – Pradhosham

    மே 31 – பிரதோஷம்
    விகாரி வருடம் – வைகாசி 17
     பிரதோஷம் 
    31-மே-2019 வெள்ளி
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    4.52
    நட்சத்திரம்    :    அசுவினி    இ    12.03
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Kasi Hindus worship place

    காசிக்குப் போறேன் என்று நீங்கள் சொல்லியவுடன், ஏன் என்னாச்சி…. அதுக் கெல்லாம் இன்னும் வயசு இருக்கு, ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா? என விமர்சனக் கேள்விகள் தான் காத்திருக்கும். உண்மையில் ‘காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டதல்ல வாழ்வை ஆழமாக உணருவதற்காக எனும் உண்மை பலருக்கு தெரியாது.

    இந்த பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் மற்ற இடங்களைவிட சக்தி மிக்க அதிர்வுகளைக் கொண்டும் மனித விழிப்புணர்வை உயர்த்தும் வகையிலும் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடமாக காசி உள்ளது.

    காசி நகரம் அமைந்துள்ள இடத்தின் சிறப்பு என்ன?
    காசி இந்துக்களின் நகரமாக போற்றப்படுவது ஏன்?

    காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.

    வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

    சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.

    நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.

    நம் உடலில் இருக்கும் சக்தி

    சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

    காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.

    இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

    இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.

    இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

    இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.

    அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.

    அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

    இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

    இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.
     

  • thiruchedur koil hundiyal kanikkai

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்தது.  

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் மண்டபத்தில் இன்று நடந்தது.  இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில் இன்று நடந்தது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். 

    மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கையில் இரண்டு கோடியே 47லட்சத்து 8ஆயிரத்தி 274 ரூபாய் மொத்தம் கிடைத்தது. இதில் தற்கால உண்டியலில்24,443ம் கோசாலை உண்டியலில் ரூ.1இலட்சத்து 81ஆயிரத்து 355ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.73 ஆயிரத்து 571 ரூபாவும் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 79ஆயிரத்து 713ம், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10 ஆயிரத்து 011ம் அடங்கும். 

    மேலும் தங்கம் 3,035 கிராம், வெள்ளி 20, 855 கிராம் கிடைத்தது. இதில் வெளிநாட்டு கரன்சி தாள்கள் 306 காணிக்கையாக கிடைத்தன.