Blog

  • Thirupathyil June 14 Jestabisegam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவர் சிலைக்கு தினமும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சிலைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாதத்தில் சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

    அது போல், இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 14-ம் தேதியில் இருந்து 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாளான 14-ம் தேதி உற்சவர் மலையப்ப சுவாமி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும் வைர கவசம் அணிவிக்கப்படுகிறது. 

    வைர கவசத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 2-வது நாளான 15-ம் தேதி முத்துக்கவசமும், 3-வது நாளான 16-ம் தேதி மலையப்ப சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் உற்சவர் மீது அணிவிக்கப்பட்ட கவசம் அகற்றப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 14-ம் தேதி நிஜபாத தரிசனம், 15-ம் தேதி வசந்த உற்சவம், 16-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த 3 நாட்களிலும் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமாலை சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Nellai Kailasanadhar car festival

    நெல்லை கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஜூன் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கைலாசநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டதும், கொடிமரத்திற்கு பதினாறுவகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜைகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பூங்கோயில், சப்பரங்களில் மலர் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    7-ம் திருநாளான இம் மாதம் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு செப்புச் சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிவப்பு சாத்தி திருவீதியுலா வர உள்ளார். 9-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். மாலையில் சந்திரசேகரர் பரிவேட்டையும், கங்காளநாதர் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

    விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 7 மணிக்கு சுவாமி-அம்பளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர், மலர் அலங்காரத்துடன் தேருக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரியும், 10.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளன.
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நற்செயல்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – சாந்தம்  
    கடனம் – போட்டி 
    சிம்மம் – லாபம் 
    கன்னி – பெருமை 
    துலாம் –  சிக்கல்
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – பக்தி
    மகரம் –   பணிவு
    கும்பம் – லாபம் 
    மீனம் – தனம் 
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்
     

  • June 3 Amavasai

    ஜூன் 3 – அமாவாசை
    விகாரி வருடம் – வைகாசி 20
    03-ஜூன்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    மா    4.19
    நட்சத்திரம்    :    ரோகிணி    இ    1.08
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Homathil podappadu porutkalin palangal

    எந்த  ஒரு நற்காரியங்கள் செய்யும் முன்பும்  கணபதி ஹோமம் , உடல் ஆரோக்கியத்திற்கு  மிருத்யுஞ்ச ஹோமம் , பொருள் நலம் சேர மகாலட்சுமி ஹோமம் , எதிரிகள் பலமற்று  போக சண்டி யாகம் என ஹோம தீ வளர்த்து  பிரார்த்தனை செய்வது நம் முன்னோர் வழி வந்த மரபு . ஹோமங்கள்  என்பது நீண்ட நெடிய  மந்திரங்களுடன் கூடிய வழிபாட்டு முறையாகும் . அதில் போடப்படும் பொருட்களுக்கும் காரண காரியங்களை தொகுத்துள்ளனர்  நம் முன்னோர்கள் . அப்படி ஹோம குண்டத்தில் போடப்படும் பொருட்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களை பற்றியும் நாம் இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம் .

     அவ்வாறு நடத்தப்படும் ஹோமங்களில் விதவிதமான பொருட்கள் போடப்படுகிறது .   ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் சமித்து எனப்படும் குச்சிகளின் பலன்களும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்ப அமையும் .  

    விக்கினங்களை நீக்கும் விநாயகருக்கும், ராகுவுக்கும் பிடித்தது அருகம் புல். இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

     வில்வ சமித்து ருத்ர மூர்த்தியான  சிவனுக்கும், செல்வத்தை அள்ளித்தருபவளான  மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது .  வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

    துளசி சமித்து ஸ்ரீமன் நாராயணனுக்குப் பிடித்தது . துளசி சமித்தைக் கொண்டு  ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

     அத்தி சமித்து  சுக்கிரனுக்கு உகந்தது .  பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

     நாயுருவி சமித்து புதனுக்குப் பிடித்தது . இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது

    சந்திரனுக்கு பலாமர சமித்து ப்ரீத்தியானது . பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

    அரசரமர சமித்து குருவிற்குப் விசேஷமானது . அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

    தர்ம நெறி தவறாமல் பலனை தரும் சனீஸ்வரனுக்குப் பிடித்தது வன்னிமர சமித்து . இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

    சர்வமங்களங்களையும்  வேண்டுவோர்  உபயோகிக்க வேண்டியது  மாமர சமித்து  .

    தாமரை புஷ்பமானது லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது .

    அழகான வடிவமும்,வசீகரமும் வேண்டுவோர் மாதுளை மர சமித்தை  தேர்ந்தெடுக்கலாம் .

    இது தவிர

    கொடிக்கள்ளி எனப்படும் சோமவல்லிக் கொடியின்   ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

    வெள்ளை எருக்கு சமித்து  சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

    செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்

    அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

    தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

    கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

    ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

    எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

    புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

    இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

    தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

    வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

    சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

    வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

    மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

    பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

    நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

     மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

    இத்தகைய  ஹோமங்களில் பங்கேற்க  வாய்ப்புக் கிடைத்தால்  தவறாமல் கலந்துக்கொண்டு  பயன் பெறலாம் .

  • Varuvaai Adhikarikka Sevvai Mandiram

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. 

    பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். 

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
     

  • Vaigasi kiruthigai

    வைகாசி  கிருத்திகையை அடுத்து முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருத்தணி முருகன் கோயிலில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

    முருகனின் ஐந்தாம் படை வீடாக விலங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை ஞாயிற்றுக்கிழமை வந்ததாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இன்றுடன் முடிய உள்ள நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பங்களுடன் முருகப்பெருமானை தரிசிக்க மலைக் கோயிலில் குவிந்தனர். 

    மலைக் கோயில் மாட வீதிகளில் காலை 8 மணிக்கே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரூ.150  சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்களில் ஏராளமானோர் குவிந்ததால், மாட வீதியில் பொது தரிசன வரிசைகளில்  சிறுவர்கள் முதல் முதியவர், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து  முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

    இதேபோல ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பாராட்டு 
    ரிஷபம் – ஊக்கம் 
    மிதுனம் – உறுதி  
    கடனம் – லாபம்  
    சிம்மம் – பணிவு
    கன்னி – பெருமை 
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நற்செயல்
    மகரம் –   நலம்  
    கும்பம் – பொறுமை   
    மீனம் – நிம்மதி
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • June 2 – Karthigai

    ஜூன் 2 – கார்த்திகை
    விகாரி வருடம் – வைகாசி 19
     கார்த்திகை 
    02-ஜூன்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    மா    5.00
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    1.19
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    : சுவாதி, விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Kruthigai Viradham

    ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும். அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். 

    கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி முருகப்பெருமானின் மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம் கோயில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். 

    அன்றைய தினம் முழுவதும் முருகப்பெருமானை மனதார பூஜித்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  கிருத்திகை நட்சத்திரத்தன்று தானம் செய்தால், அவருடை பரம்பரையினர் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்பது உறுதி.