Blog

  • Nanmaigal pozhiyum Perumal Slogam

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • Sasti Viradham Irukkum Murai

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது நிச்சயம்.

    சஷ்டி விரதம் இருப்பது எப்படி என்பதை பார்ப்போம்….

    அதிகாலை 4.30 – 6.00 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிடலாம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம்.

    முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வரலாம். திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முக கவசம் ஆகிய பாடல்களில் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை, அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. விரதமிருக்கும் போது மயில்வாகனனை நினைத்தே இருக்க வேண்டும். வேறு எந்தச் சிந்தனையிலும் மூழ்க கூடாது. விரதம் இருந்ததன் பலன் கிடைக்கப் பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெற வாழ்வில் அனைத்துச் செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிந்தனை 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – செலவு 
    கடனம் – எதிர்ப்பு
    சிம்மம் – உழைப்பு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  ஆசை
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு – லாபம் 
    மகரம் –   பரிசு
    கும்பம் – நலம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்
     

  • June 8 Sasti Viradham

    ஜூன் 8 – சஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – வைகாசி 25
    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    08-ஜூன்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    கா    7.24
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    7.30
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thirupathy Pooringala…. Pls note

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சர்க்கார் சகஸ்ர கலசாபிஷேகம் சேவை நடைபெற உள்ளதால் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்துள்ள தேவஸ்தான நிர்வாகம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோடை விடுமுறை மற்றும் வாராந்திர வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை மூன்று மணி நேரம் சர்க்கார் சகஸ்கர கலச அபிஷேகம் ( தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் பங்கேற்கக்கூடிய சேவை ) நடைபெற உள்ளது. 

    எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டையின் மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் அன்று ஒரு நாளைக்கு ரத்து செய்யப்படுகிறது.  எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலவச தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Argitha Sevai Tickets

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியீடப்பட்டுள்ளது. 

    ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 70,918 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  

    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,618 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7,898
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 180
    நிஜபாத தரிசனம் – 2, 300
    பொது கோட்டா  60,300 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,775
    ஊஞ்சல் சேவை – 4,350
    விசேஷ பூஜை – 2,000
    ஆர்ஜித பிரம்மோற்சவம் – 7,975
    வசந்த உற்சவம் – 15,400
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இந்த டிக்கெட்   www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
     

  • Thirupathy 26 lakhs people dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம்  25.89 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் 1 கோடியே 11 லட்சத்து 63 ஆயிரத்து 665 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12 லட்சத்து 66 ஆயிரத்து 432 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 89.02 கோடி ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு அறைகள் வாடகைக்கு விட்டதன் மூலமாக 7.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Mudi Kaanikkai

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ. 3.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது ஐதீகம். தினமும் சுமார் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு, அவை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒவ்வொரு  மாதமும் முதல் வியாழக்கிழமை  ஏலம் விடப்படுகிறது. 

    இதன்படி இன்று 3,700 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 3.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
     

  • Narashimma Avadharam

    ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.

    நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.

    நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.

    ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.

    சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.

    நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.

    ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.

    கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பொறுமை 
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – முயற்சி 
    கடனம் – நிறைவு
    சிம்மம் – மேன்மை 
    கன்னி – ஆதரவு
    துலாம் –  சிந்தனை   
    விருச்சிகம் – உயர்வு
    தனுசு – உதவி
    மகரம் –   கவலை
    கும்பம் – பயணம்
    மீனம் – நற்சொல்
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்