Blog

  • Rama Linga Pradistai thiruvizha

    ராமலிங்க பிரதிஷ்ட்டை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்  ராமர் விபிஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்யும்  நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

      ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திசென்று இலங்கையில் சிறை வைத்த போது ராமர் ராவணனிடம் போரிட்டு ராவணனை கொன்று சீதையை மீட்டு வருகிறார். இதில் ராவணன் பிராமணன் என்பதால் ராமர்க்குபிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்தியர் மூலம் ராமர் இராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து அதற்கு பூஜைகள் செய்து வழிப்பட்டு தம்மிடம் உள்ள தோஷத்தை நீக்கி கொள்கிறார். அத்துடன் ராவணன் தம்பி விபிஷ்ணர் ராமரிடம் தஞ்சம் அடைந்த உடன் ராமர் விபிஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்துவைக்கிறார். அதன் நிகழ்வாக வருடம் தோறும்; ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்று வருகிறது.

    முன்னதாக இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்ய  3 மணியிளவில் கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும் அதனை தொடரந்து 6 பால நடைபெற்று பின் கோவில் நடை அடைக்கப்பட்டு ராமர் புறப்பாடாகி தனுஸ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றது.

     ஆதன் பின்னர் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று கோதண்டராமர் கோவிலில் ராமருக்கு 16 வகையான சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது.  முடிந்து அதன் பின் ராமர் கோவில் எதிரே கோதண்டராமர் கோவில் குருக்கள் சஞ்சீவி அவர்களால் விபீஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணைகளும் நடைபெற்றது. பட்டாபிசேம் செய்த பின் இராமரை விபிஷ்னர் மூன்று முறை சுற்றி வந்தார். அதனை தொடரந்து சவாமி அங்கிருந்து புற்பாடாகி கோவிலை வந்தடைந்து. 
     

  • Srisailam Koil Hundiyal Kanikkai

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் புகழ்பெற்ற சைவ திருத்தலமான மல்லிகார்ஜுன சாமி, பிரனராம்பிகா தேவி  கோவில்களில் கடந்த 27 நாட்களில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்  உண்டியலில்  காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம்,வெள்ளி  உள்ளிட்ட பொருட்கள் கணக்கிடப்பட்டண.

     சி.சி டி.வி. கேமரா கண்காணிப்புக்கு மத்தியில் கோவில் பணியாளர்கள்,  தன்னார்வலர்கள், சிவ பக்தர்கள் என400 க்கும் மேற்பட்டோர்  கோவில் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை உண்டியல் காணிக்கை வருமானத்தை கணக்கிட்டனர். 

    அப்போது கடந்த 27 நாட்களில் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரத்து 397 ரூபாய் பணம், இதில் 758 அமரிக்க டாலர்கள், 120 ஆஸ்திரேலிய டாலர்கள், 30 சவுதி ரியால்கள்,10 இங்கிலாந்து நாட்டு பவுண்ட், 5 குவைத் தினார்,4 கத்தார் ரியால்,சிங்கப்பூர் டாலர்கள் 5,ஓமன் ரியால் 2,மலேசிய ரிங்கிட்ஸ் 2 ஆகியவற்றை பக்தர்கள் மல்லிகார்ஜூன சாமி, பிரம்மராம்பிகா தேவிக்கு  காணிக்கையாக சமர்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். .
     

  • Sivakasi Kuthu vilakku Poojai

    சிவகாசியிலுள்ள ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

    மக்களிடையே பண பற்றாக்குறை தீரவும், மக்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சுபிட்ஷமாக வாழவும், இக்கோயிலில் சகல ஐஸ்வர்ய அலங்காரத்தில் எழுந்தருளிய பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

     
     கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஐஸ்வர்ய அலங்காரத்தை கண்டு அம்மனை வணங்கி வழிபட்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 குத்துவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர். 
    முன்னதாக பேச்சியம்மன் வழிபாடு பாடலுக்கான ஆலய வழிபாட்டு மலர் வெளியிடப்பட்டது.
     

  • Atthi Varadharai Kaana Sirappu Erpadu

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீஆதி அத்தி வரதர் நிகழ்வில் பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் ரூ50 ரூபாயில் கட்டண தரிசனத்தில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    புகழ்பெற்ற ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை ஒன்றாம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்காக  திருக்குளத்திலிருந்து வெளியே  கொண்டுவரப்பட உள்ளார்.

     இந்த நிகழ்வுக்காக இந்து சமய அறநிலையத் துறையும் காஞ்சி மாவட்ட நிர்வாகமும் பல்வேறு பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றது.  இதில் பொதுமக்கள் பக்தர்கள் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வரும் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் நிகழ்வு இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பாக நடத்தப்படும் எனவும் இதற்காக மாவட்டம் சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் 4 சிற்றுந்து நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் மட்டுமில்லாமல் 2 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் எனவும் நகர் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை அமைத்து பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்வுக்காக 12.8 ஒன்பது கோடி ரூபாய் இந்து சமய அறநிலையத் துறையால் செலவிடப்பட்டு வருவதாகவும் திருக்கோயில் வளாகத்தில் மட்டும் புனரமைக்கும் பணிகளில் 2.50 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவாக தற்போது நடந்து வருவதாகும் இந்த வைபவத்தை காண பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச தரிசனமும் அனுமதிக்கப்படும் கட்டணம் தரிசனமாக ரூபாய் 50 செலுத்தியும் எம்பெருமானை தரிசிக்கலாம் எனவும் இந்த அனைத்து வசதிகளும் சிறப்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அனைத்து பல் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்வார்கள் எனவும் பொதுமக்கள் எம்பெருமானை சிறப்பாக தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி 
    ரிஷபம் – இன்பம் 
    மிதுனம் – சுகம்  
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – அன்பு
    கன்னி –  சுகம் 
    துலாம் –  வரவு 
    விருச்சிகம் – ஊக்கம் 
    தனுசு – லாபம் 
    மகரம் –   அமைதி 
    கும்பம் – போட்டி 
    மீனம் –     விவேகம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • June 12 – Indraya Naal Eppadi

    ஜூன் 12 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – வைகாசி 29
    12-ஜூன்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.51
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    1.24
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Karikal Mariamman koil thiruvizha

    காரைக்கால் மகாமாரியம்மன் ஆலய  தீமிதி திருவிழாவில்   200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    காரைக்கால் மாவட்டம் சேத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 03-ம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜையும் அதனை தொடர்ந்து  கொடியேற்றப் பட்டும் வழக்கமான  உற்சாகத்துடன் துவங்கியது.  

    அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் முக்கியநாளான மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்நது, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் அன்ன வாகனத்தில் வலம் வந்து தீக்குழிக்கு அருகில் எழுந்தருளியதையடுத்து,  பூமிதித்தல் எனப்படும் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. 

    இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவார கால விரதமிருந்து தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமா பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ் 
    ரிஷபம் – இன்பம் 
    மிதுனம் – நன்மை 
    கடனம் – பரிவு 
    சிம்மம் – நிம்மதி
    கன்னி –  தனம் 
    துலாம் –  வெற்றி
    விருச்சிகம் – ஏமாற்றம் 
    தனுசு – தடங்கல்
    மகரம் –   சுகம்  
    கும்பம் – நலம் 
    மீனம் –     பிரயாணம் 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • June 11 Indraya Naal Eppadi

    ஜூன் 11 – சிவகாசி சிவன் தேர்
    விகாரி வருடம் – வைகாசி 28
    11-ஜூன்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    9.54
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    2.45
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Maduraiyil Ulaga siddhargal manadu

    உலக சித்தர்கள் ஞானபீடம்  நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு 2019 வருகின்ற ஜூன் மாதம் 22 சனி மற்றும் 23 ஞாயிறு இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

    இதில் 100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, சித்தர்கள் முறைப்படி 108 யாக வேள்வி, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன.

    இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் 640 பக்கம் கொண்ட மாநாடு மலர் வெளியீட படவுள்ளது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அனுமதி இலவசம். 2 நாட்களும அன்னதானம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.