Blog

  • Saneeswaran koil bramorchava kodi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்து கோயில் உள்ளது . நவகிரகங்களில் பரிகார ஸ்தலமான இக்கோவிலில்  ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

    முன்னதாக பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ,மங்கள இசையுடன்  காலை 6.45 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது . இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தேரோட்டமும் , 13ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .   

    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான்  திருவீதி உலாவை ஆண்டுக்கு ஒரு முறை  பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காண முடியும் . இதை தொடர்ந்து தெப் போற்சவம் , சண்டிகேசுவரர் உற்சவம் நடைபெற்று ஜீன் மாதம் 16ம் தேதி  விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது

  • Rasi Palangal

    இன்று இந்த ராசிக்கு வெற்றி 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – பக்தி 
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – பரிசு
    சிம்மம் – வெற்றி 
    கன்னி – நன்மை 
    துலாம் –  இன்பம் 
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு – ஆர்வம் 
    மகரம் –   பேராசை
    கும்பம் – சிரமம் 
    மீனம் – மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    – உத்திரம்,அஸ்தம்
     

  • May 30 Indraya Naal Eppadi

    மே 30 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 16
    30-மே-2019 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    4.03
    நட்சத்திரம்    :    ரேவதி    இ    10.41
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Kanchi Kamakodi Special Prathanai

    மழை வேண்டியும் உலக நன்மைகாகவும் ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் 64  சிவாச்சாரிய தம்பதிகள்,  சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அடுத்த மதுரவாயலில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மழை வேண்டியும்,உலக நன்மைகாகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் கணபதி பூஜை,ருத்ர பாராயணம்,வருணஜபம் மற்றும் 64 சிவாச்சாரியர்கள் தங்கள் துணைவியுடன் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜையில் ஈடுபட்டனர்.  

    இதனை தொடர்ந்து பைரவர் பூஜையும் நடைபெற்றது.இந்த பூஜைக்காக 26 தலைகள் மற்றும் 48 கரங்கள் கொண்ட சிவன் பார்வதியின் பிரமாண்ட உருவம்  அமைக்கப்பட்டு இருந்தன. பூஜையில் சிவாச்சாரியார்கள் மட்டுமல்லாமல் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

  • yagam for rain

    சென்னை போரூரில் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் காளி பகவதி அம்மன் ஆலயத்தில் பால் அபிஷேகம்  நடைபெற்றது.

    சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்காக  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த நிலையில் உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.

    இந்த ஆலயத்தின் பூசாரி கூறுகையில் இன்னும் பதினைந்து நாட்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று அருள் வாக்கு கூறி உள்ளார்.இதற்காக தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருவதாகவும்,கடும் தவம்  இருப்பதாகவும் தெரிவித்தார்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சினம்
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – உறுதி
    சிம்மம் – கோபம் 
    கன்னி – தனம் 
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – இன்பம் 
    தனுசு – போட்டி
    மகரம் –   பெருமை 
    கும்பம் – தாமதம் 
    மீனம் – வரவு
    சந்திராஷ்டமம்    – பூரம்,உத்திரம்
     

  • May 29 subamugurthanaal

    மே 29 அக்னி நட்சத்திரம் காலை 7.43 முடிவு
    விகாரி வருடம் – வைகாசி 15
    அக்னி நட்சத்திரம் காலை 7.43 முடிவு
    29-மே-2019 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    ம    2.48
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    இ    8.53
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Udambil Katthi Podum Thiruvizha

    திருப்பரங்குன்றம் மீனாட்சி நகரில் உள்ள அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்த பக்தர்களின் உடம்பில் கத்தி போடும் வினோத திருவிழா நடைபெற்றது.

    மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம்  மீனாட்சி நகரில் அமைந்துள்ள தேவாங்கர் மகாஜன அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 20 ஆண்டு மகா உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான இன்று கத்தி போடும் திருவிழாவை முன்னிட்டு கோவிலிலிருந்து சாமி பெட்டியை எடுத்து வைகை ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கிருந்து கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் அம்மனை வரவழைக்கும் நிகழ்வாக  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு வினோதமாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் வில்லாபுரம்.  ஜெய்ஹிந்புரம். செல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலரும் பக்தி பரவசத்துடன் ஓம்சக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
     

  • Sivan koil Nandhi

    சிவன் கோயிலில் நந்தி சிலையின் குறுக்கே செல்லக்கூடாது ஏன் என்று தெரியுமா?
    ஒவ்வொரு சிவன் கோயில் வாசலிலும் நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியத்துவம் கொடுப்பர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என பலரும் கூறுவர்.

    இதற்கு காரணம் நந்தி கர்ப்பகிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். நந்தி சிவனின் வாகனமாகும். வாகனம் எதுவாக இருந்தாலும் அது ஜீவ ஆத்துமாவை குறிக்கும். ஜீவ ஆத்துமா கருவறையில் உள்ள பரம ஆத்துமாவை (இறைவன்) குறிக்கும். 

    ஜீவாத்துமாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். இதனால் கருவறையில் உள்ள இறைவனை பார்த்த வண்ணம் உள்ளது. நந்தியின் குறுக்கே செல்ல தடை விதிக்க காரணம் கடவுளை அடைய  நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்பதால் தான். சன்னதியை மறைத்து நிற்க வேண்டாம் என்பதற்கு காரணமும் இதுதான். 

    கடவுள்களுக்கெல்லாம் முதல்வன் எப்படி விநாயகரோ அதே போல் கோயில்களுக்கெல்லாம் முதல்வன் நந்தீஸ்வரர் தான். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது. 

  • Rasi palanagal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உறுதி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – நிறைவு
    கடனம் – தணம் 
    சிம்மம் – கோபம்     
    கன்னி – பயம் 
    துலாம் –  இன்பம் 
    விருச்சிகம் – போட்டி 
    தனுசு – பெருமை 
    மகரம் –   செலவு 
    கும்பம் – தடங்கல் 
    மீனம் – வெற்றி
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்