Blog

  • May 28 Indray Naal Eppadi

    மே 28 இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 14
    28-மே-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    நவமி    ம    1.08
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    மா    6.41
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • 3 min dhyanam

    இதனைச் செய்ய ஒரு நாளோ நேரமோ அவசியமில்லை. ஆரம்பித்த பின் தேவைக்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். உடல் நேராக இருக்க வேண்டும் கையிலுள்ள பெருவிரலும் அதனை அடுத்த விரலும் இணைந்திருப்பது முக்கியமானதாகும். அதனை “சின்முத்திரா” என அழைப்பர். சின் முத்திரையில் மனதைச் செலுத்துவ.

    நடக்கும் போதோ, இருக்கும் போதோ, உரையாடும் போதோ, குளிக்கும் போதோ அதனைப் பயன்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு பயிற்சி மனதை ஒருநிலைப்படுத்த உதவும். அது எதுவாகவும் இருக்கலாம். பழக்கத்தில் வந்துவிட்டால் எங்கும் எதிலும் நாம் பயன்படுத்திப்பழகி வெற்றி பெறலாம்.

    மூக்கு நுனியில் தியானம் செய்தல்

    நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு மூக்கின் நுனியில் பார்வையை நிலை நிறுத்துக. மூக்கு நுனியினை உற்றுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூக்கின் நுனிபற்றிச் சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் அமைதியாக எதையும் நினையாமல் இருக்கலாம அல்லது ஏதாவது விருப்பத்திற்குரிய இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து இதனைச் செய்வதால் மனம் பழக்கப்பட்டு அமைதியடைந்து லயப்படும்.
     

  • Gayathri Manthiram

    * கம்பீரத் தோற்றம்
    * தரமான பேச்சு
    * வறுமை, குறை நீங்குதல்
    * பாதுகாப்பு வட்டம்
    * கண்ணில் அறிவு தெரிதல்
    * அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
    * நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்
    * அமைதியாய் இருப்பர்
    * நற்செயல்களில் ஈடுபடுவர்
    * காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
    * வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
    * மூளையை பிரகாசிக்கச் செய்யும்
    * உள்ளுணர்வினை தெளி வாக்கும்
    * உயர் உண்மைகள் தெரிய வரும்
     

  • Lakshmi Narasimhar viradham

    விழுப்புரம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால்கடன் தொல்லை நீங்கும்.

    விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஊரில் உள்ளது அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி ஆலயம். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், உற்சவராக பிரகலாத வரதனும் உள்ளனர். தாயாராக அமிர்தவல்லி இருந்து அருள்பாலிக்கிறார். பொதுவாக லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி இருக்கும். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டம் தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றனர். 

    கடன் தொல்லை உள்ளவர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இங்கு பூவரசன்குப்பம் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும். 

    இந்த கோவிலில் தாயாருக்கும் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. அமிர்தத்துக்கு இணையாக இங்குள்ள தாயார் உள்ளதால், இவர் அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகிறார்.
     

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்பம் 
    ரிஷபம் – நிறைவு
    மிதுனம் – தனம் 
    கடனம் – பயம்    
    சிம்மம் – கோபம் 
    கன்னி – போட்டி 
    துலாம் –  பெருமை 
    விருச்சிகம் – செலவு
    தனுசு – சுகம் 
    மகரம் –   நன்மை  
    கும்பம் – வெற்றி 
    மீனம் – ஆதரவு
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்
     

  • May 27 Indraya Naal Eppadi

    மே 27 இன்றைய நாள் எப்படி 
    விகாரி வருடம் – வைகாசி 13
    27-மே-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    11.16
    நட்சத்திரம்    :    சதயம்    மா    4.14
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Abishegam Seiya Ugandha Dinam

    எந்த சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டு நாகங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் – மனைவி  இடையே ஒற்றுமை பெருகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும், செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.
     
    வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும் .

    தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
     

  • Pradhosham Milk Abishegam

    பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிரதோஷ கால அபிஷேக முறையில் 'பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும். 

    நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும். 

    அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும்போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம்கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும். சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும்.

    அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – குழப்பம் 
    ரிஷபம் – இரக்கம் 
    மிதுனம் – சோர்வு
    கடனம் – கவலை   
    சிம்மம் – இன்பம் 
    கன்னி – துயரம் 
    துலாம் –  வேதனை
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு – அனுகூலம் 
    மகரம் –   சினம் 
    கும்பம் – நன்மை
    மீனம் – சுகம்
    சந்திராஷ்டமம்    – பூசம், ஆயில்யம்
     

  • May 26 Indraya Nalla Neram

    மே 26 . இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 12
    26-மே-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    9.16
    நட்சத்திரம்    :    அவிட்டம்    ம    1.40
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்