Blog

  • God worship

    நமது பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நமது பிரச்சனைகளுக்கு உடனடி பலன்  கிடைக்கும் என்று பல்வேறு ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

    ஒருசில மகான்களிடம் நாம் நமது பிரச்சனையை கூறும்போது, அதற்கு சில தீர்வாக சில தெய்வ வழிபாட்டு முறையை கூறுவார்கள். அதன்படி நாம் வழிபடும்போது நமது பிரச்சனை எளிதாக தீர்வதை கண்கூடாக கண்டிருக்கிறோம். அந்த வகையில் பொதுவாக சில  தெய்வங்களை வணங்கினால் ஒரு சில பொதுவான பிரச்சனைகள் தீரும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
     
    ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
     
    விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர். 
    செல்வம் சேர – ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர். 
    அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி. 
    கல்வியில் சிறந்து விளங்க – சரஸ்வதி. 
    திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை. 
    மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி. 
    புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி. 
    தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கடாசலபதி. 
    வீடும், நிலமும் பெற – ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான். 
    பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர் 
    நோய் தீர – ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தி. 
    ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன். 
    மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர். 
    விவசாயம் தழைக்க – ஸ்ரீதான்யலட்சுமி. 
    உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீஅன்னபூரணி. 
    பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன். 

  • May 23 subamugurthanaal

    மே 23 சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – வைகாசி 9
     subamugurthanaal 
    23-மே-2019 வியாழன் 
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    அ.கா    5.34
    நட்சத்திரம்    :    பூராடம்    கா    6.45
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நட்பு
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – செலவு
    கடனம் – கோபம் 
    சிம்மம் – அமைதி
    கன்னி – வெற்றி
    துலாம் –  போட்டி 
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு – புகழ்
    மகரம் –   சுகம் 
    கும்பம் – பயம் 
    மீனம் – நிறைவு
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை
     

  • Rudhratchai Palangal

    11 முக ருத்ராட்சம் பகவான் அனுமானைக் குறிக்கும். விபத்தில்லா மரணத்தை உண்டாக்கும் இந்த ருத்ராட்சம் தியானம் செய்ய விரும்பும் ஆன்மிக ஈடுபாடு உடையவர்களுக்கு உகந்தது. யோக, ஆன்மிக, தியான வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். 

    குறிப்பாக இதை அணிந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனையும், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் இது தருவதாக கூறப்படுகிறது. ஏகாதசி ருத்திரர்களின் அம்சமாக இது விளங்குவதால் மறுபிறவி இல்லாத நிலையை அடைய விரும்புவர்களுக்கேற்ற ருத்ராட்சம் இது. 

    இவற்றைத் தலைப்பகுதியில் அணிவது சிறந்தது. மோட்சத்தைத் தரக்கூடிய இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் –ஓம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ…

    12 முக ருத்ரட்சம் சூரியனின் அம்சமாக கருதப்படுகிறது.  இந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம். இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டது. 

    இதை அணிபவர்கள் சூரியனின் பிரகாசம் போல் வாழ்க்கையில் வறுமையின் பிடியை உணரமாட்டார்கள். பிற உயிர்களைக் கொன்ற  பாவங்களைப் போக்கும் இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் – சூர்யாய நமஹ.. ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ… 

    13 முகருத்ராட்சம் ருத்ர என்று அழைக்கப்படுகிறது.விஸ்வதேவர்களுக்கு பிரியமானதாக இவை சொல்லப்படுகிறது. வாழ்வில் அதிர்ஷ்டங்கள் விலகாமல் இருக்க இந்த வகை ருத்ராட்சம் அணியப்படுகிறது. மேலும் 6 முக ருத்ராசத்துரிய பலன்களை இவை கொடுக்கும். இதற்கான மந்திரம் –ஓம் ஹரீம் நமஹ…

    14 முக ருத்ராட்சம் தேவமணி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானைக் குறிக்கும். சீகாந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படும் 14 முக ருத்ராட்சம் அணிந்தவர்கள் தேவர்களும் வணங்கும் பெருமையைப் பெறுவார்கள். 

    இதை நெற்றியைத் தொடுமாறு அணிய வேண்டும். இது விலைமதிப்புள்ளது. தெய்விக மணி என்றும் சொல்லலாம். இதை அணிந்தால் மனிதனின் ஐம்புலன்களிலிருந்து ஆறாவது புலனையும் விழிக்கச் செய்யும் என்பது ஐதிகம். இதை அணிபவர் எடுத்த முடிவுகளிலிருந்து வெற்றிகளை மட்டுமே பெறுவார். இதற்கான மந்திரம் –ஓம் நமஹ…

    15 மற்றும் 16 முக ருத்ராட்சம் பொதுவாக மனிதர்கள் 1 முதல் 14 வரையிலான முகம் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே அணிய வேண்டும். 15 முக ருத்ராட்சமானது இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன்  போன்றோரின் இறைசக்திகளின் துணையோடு வாழலாம். 16 முக ருத்ராட்சம் சிவ சாயுஜ்ய என்று அழைக்கப்படுகிறது. 

    அதாவது சிவ லோக பதவியைத் தருவதாக சொல்லப்படுகிறது.எனினும் 14,15,16 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் கிடைப்பது சற்றுகடினம் என்றே சொல்ல வேண்டும்.15 முதல் 21 வரையிலான முகம் உள்ள ருத்ராட்சம் மணிகளை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும் என்று முனிவர்களும், ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள்.
     

  • Thirupathy Perumal Adhisaya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
     

  • Thirunallaru Nandhi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை தோறும் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

     கடந்த ஓரிரு மாதங்களாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். சாலைகளில் வீசும் அனல் காற்று வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 

     இந்நிலையில் மழை வேண்டியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தியை சுற்றிலும் தொட்டி கட்டி , அதனுள் நீரூற்றி நந்தி குளிர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் ஓதி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

    இதை தொடர்ந்து பல்வேறு  திரவியங்களைக் கொண்டு நந்திக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்காலில் கடந்த சில மாதங்களாக ஒரு துளி மழை கூட விழாத நிலையில் மழை வரும் வரை இந்த வழிபாடு தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

  • Kotthattai Koothandaavar thiruvizha

    சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. பழனியைச் சேர்ந்த திருநங்கை தேன்மொழி மிஸ் கொத்தட்டையாக தேர்வு செய்யப்பட்டார். 

    சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் வழக்கமாக வைகாசி மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் பங்கேற்கும் திருநங்கைகள் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். 

    ஆனால் இந்த ஆண்டு முதன் முறையாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா சற்று வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 40 ஆண்டுகளில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற திருநங்கைகள் சிலர் நாட்டுப்புறப் பாடல்களை பாடினார். இதில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. பிரபல திரைப்பட நடிகை ரேகா இந்நிகழ்ச்சியில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். பின்னர் திருநங்கைகளுக்கான மிஸ் கொத்தட்டை  அழகிப் போட்டி நடந்தது. இதில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். அப்போது திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒய்யாரமாக, நளினமாக நடந்து வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    இதையடுத்து போட்டியின் முடிவில் நடுவர் குழுவினர் மிஸ் கொத்தட்டையை தேர்வு செய்தனர். அப்போது அவர் திருநங்கைகளுக்கான பரிசுகளை அறிவித்தனர்.

    பழனியைச் சேர்ந்த திருநங்கை தேன்மொழி மிஸ் கொத்தட்டையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் திருநங்கை அழகிக்கான முதல் பரிசையும் இவர் தட்டிச் சென்றார். நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த ரஃபியா இரண்டாவது இடத்தையும், தஞ்சாவூரைச் சேர்ந்த சந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற திருநங்கைகளுக்கு விழாக்குழுவினர் சார்பில் சிதம்பரம் தொகுதி அதிமுக  எம்எல்ஏ பாண்டியன் பரிசுகளை வழங்கினர்.
     

  • May 22 Sankadahara chadurthi

    மே 22 சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – வைகாசி 8
     சங்கடஹர சதுர்த்தி 
    22-மே-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    அ.கா    4.16
    நட்சத்திரம்    :    பூராடம்    முழுவதும்    0.00
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – எதிர்ப்பு 
    ரிஷபம் – களிப்பு
    மிதுனம் – சுகம் 
    கடனம் – திடம்  
    சிம்மம் – நட்பு 
    கன்னி – சிக்கல்
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – வரவு
    மகரம் –   கவலை
    கும்பம் – தாமதம் 
    மீனம் – தடங்கல்
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம்
     

  • Dhosham Neekum Narasimar

    நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

    நரசிம்ம ஜெயந்தி அன்று வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

    வீட்டில் வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து  நரசிம்மரை வழிபடுவது மிகவும் நல்லது.

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. 

    நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

    தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

    நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

    நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.