Blog

  • Siradi Saibaba Viradha Muraigal

    விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

    இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள்உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரத நிறைவு விதிமுறைகள்

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 
     

  • Dyanathin Palangal

    மனித வாழ்க்கை நிரந்தரமற்றது. இன்ப துன்பம் நிறைந்தது. மன மகிழ்ச்சியும் உண்டு. மனக் குழப்பமும் உண்டு. நெருக்கடியான உலகுக்கு முகம் கொடுக்கும் மனிதன் பல்வேறுபட்ட விடயங்களை ஒரே நேரத்தில் விரைவாக செயல்படுத்துகின்ற போது அல்லது முனைகிற போது மனநெருக்கடி ஏற்படுகின்றது. 

    இதனால் அவன் மன அழுத்தத்திற்கு ஆளாகி அநேக நோய்களுக்குள் சிக்கித் தவிக்கின்றான். குறிப்பாக நீரிழிவு, மாரடைப்பு, இரத்த அழுத்தம், அஸ்மா, கோபம், நித்திரையின்மை போன்றவைகளைக் குறிப்பிடலாம். விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின் படி தியானம் ஏழாவது உறுப்பு ஆகிறது. அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும்.. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

    மனஅமைதி கிடைக்கும்.  
    படபடப்பு குறையும்
    நினைவாற்றல் அதிகரிக்கும்.
    நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
    வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
    ரத்த அழுத்தம் குறையும்.
    ஆஸ்துமா குணமாகும்.
    அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
    ஆயுள் அதிகரிக்கும்.
     

  • Gayathri mandiram

    இந்த பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின் ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக நம் முன்னோர் கருதுகின்றனர் . அதனால் தான் அவரவர் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    சூரியன்
    ( கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சந்திரன்
    ( ஞானம் வளர)

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே
    ஹேமரூபாய தீமஹி
    தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

    அங்காரகன்
    ( செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

    புதன்
    ( படிப்பும் , அறிவும் பெற)

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

    குரு
    ( நல்ல மனைவி அமைய)

    ஓம் குருதேவாய வித்மஹே
    பரப்ரஹ்மாய தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    சுக்கிரன்
    ( தடைபட்ட திருமணம் நடக்க)

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    தனு ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

    சனி பகவான்
    ( வீடு , மனை வாங்க)

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ராகு
    ( நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

    ஓம் நகத்வஜாய வித்மஹே
    பத்மஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

    கேது
    ( துஷ்ட சக்திகளை விரட்டிட)

    ஓம் அம்வத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரசோதயாத்

    நமக்கு வரும் வினைகளை முற்றிலும் தவிர்க்க இயலாத போதிலும் , அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் . நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜபிப்பதினால் நற் பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – உயர்வு
    கடனம் – நன்மை 
    சிம்மம் – கவலை 
    கன்னி – ஆதரவு
    துலாம் –  அமைதி  
    விருச்சிகம் – சிரமம்   
    தனுசு – ஏமாற்றம் 
    மகரம் –   செலவு
    கும்பம் – தாமதம் 
    மீனம் – வரவு
    சந்திராஷ்டமம்    – ரோகிணி

  • May 21 – Indraya Naal Eppadi

    மே 21 – இன்றைய நாள் எப்படி 
    விகாரி வருடம் – வைகாசி 7
    காரைக்குடி கொப்புடையம்மன் தேர்
    21-மே-2019 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    3.19
    நட்சத்திரம்    :    மூலம்    அ.கா    5.01
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Kollimalai Arapalliswarar

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது கொல்லிமலை. இயற்கை எழில் கொஞ்சும் மலையான இங்கு ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் கலந்த இம்மலையில் 18 சித்தர்களும் சூட்சுமமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அறப்பளீஸ்வரரை வணங்கினால் அனைத்தும் சிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 

    அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு கீழே 1200 படிகளை கடந்து கீழிறங்கி சென்று இங்குள்ள புனித அருவியான ஆகாய கங்கை அருவியில் நீராடவேண்டும். வானில் இருந்து கொட்டுவதுபோல இருக்கும் ஆகாயகங்கை அருவியை பார்த்துக்கொண்டே இருப்பது கொள்ளை அழகு அவ்வளவு பிரமாண்டமான அருவி அது. 

    இந்த ஆகாயகங்கையில் நீராடிவிட்டு 1200 படிகள் கடந்து மீண்டும் மேலேறி சென்று இங்குள்ள அறப்பளீஸ்வரரை வணங்கவேண்டும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

    அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திப்பது சிறப்பு. குடும்பப் பிரச்சனையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனஸ்தாபம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் ஒற்றுமையாக இருப்பர் என்பது நம்பிக்கை.

    உயிர்களின் வாழ்க்கை ஒளிபெற இறை வழிபாட்டில் இருந்த சித்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக, இருந்ததுதான் கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்து விட்டது.

    விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பட்டது. இந்த கோவில் சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும் பெற்றது.

  • Siddhargal Ariya Thagavalgal

    சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள் குறித்த சில அறிய தகவல்களை பார்க்கலாம்.

    பதஞ்சலி சித்தர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

    அகஸ்தியர் – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

    கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

    திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.

    குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

    கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

    தன்வந்திரி சித்தர் – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

    சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

    கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

    சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

    வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

    ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

    நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

    இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

    மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

    கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

    போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

    பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்….
     

  • Kanchi varadharaja Perumal Garuda sevai

    101 பஜனை கோஷ்டிகள் பாடி வர பல லட்சக்கணக்கான பக்தர்கள் காண  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்  தங்க கருட வாகனத்தில் வீதியுலா.

    வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாள்  முக்கிய உற்சவமான கருட சேவை  உற்சவம்   நடைபெற்றது.

    கருட சேவை உற்சவத்தை யொட்டி விடியற்காலை முதலே  கோவில் வளாகத்தில்  குவிந்த பக்தர்கள்  காணும் வகையில் வரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் வந்து நின்று   பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என கோஷமிட்டு பக்தியுடன் வணங்கினர்.

    இதனை தொடர்ந்து உள்ளூர்,வெளியூர்களிலிருந்து  வருகை தந்த  101 பஜனை கோஷ்டிகள் பாடிவர கருட வாகனத்தின் முன்னும் பின்னும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க காஞ்சிபுரம் நகரின்  முக்கிய வீதிகளில் வலம் வந்து பல லட்ச கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கருடசேவையை காண வந்த மக்களுககு பக்தர்கள் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கினார்கள்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் கருட சேவை உற்சவத்தை காண தமிழகம் மட்டும் இல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கானோர்  வந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Agasteeswarar Koil thirukalyanam

    பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் வைகாசி  விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிவபெருமான், பார்வதி தாயார் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அகத்திய மகரிஷிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவின் முதல் நிகழ்வாக மாலை மாற்றுதலும் ஒய்யாளி சேவையும் நடந்தேறியது. 

    இதனை தொடர்ந்து சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் ஓத மேளதாளம் முழங்க சிவபெருமான் பார்வதி தேவி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து மாமுனி அகத்திய மகரிஷிக்கும் லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தேறியது. திருக்கல்யாணம் முடிவுற்றதும் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் அகத்திய மகரிஷிக்கு காட்சியளித்தது சிறப்பம்சமாக அமைந்தது. 

    திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மண விருந்து வழங்கப்பட்டது. வைகாசி விசாகத்தன்று சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடத்தப்படும் திருக்கல்யாணத்தை மாமுனி அகத்திய மகரிஷி நேரில் கண்டு மகிழ்வதாகவும் இத்திருக்கல்யாணத்தை காணும் பக்தர்களின் வாழ்வில் அமைதியும் வளமும் நிரம்பி நிற்கும் எனவும் சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஏமாற்றம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – லாபம் 
    கடனம் – செலவு
    சிம்மம் – தடங்கல்
    கன்னி – கவலை
    துலாம் –  வெற்றி  
    விருச்சிகம் – நன்மை  
    தனுசு – பயம் 
    மகரம் –   சிரமம் 
    கும்பம் – சிக்கல்
    மீனம் – ஆதரவு
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை