மே 18 – வைகாசி விசாகம்
விகாரி வருடம் – வைகாசி 4
பவுர்ணமி
புத்த பூர்ணிமா,
வைகாசி விசாகம்,
பழநி,
திருமோகூரில் தேர்
18-மே-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி இ 3.24
நட்சத்திரம் : விசாகம் இ 3.05
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Blog
-
May 18 Vaigasi visagam
-
Dhosham Pokkum Narasimmar
நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
நரசிம்ம ஜெயந்தி அன்று வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.
வீட்டில் வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து நரசிம்மரை வழிபடுவது மிகவும் நல்லது.
நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.
நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.
நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் 7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
-
Narasimmar Jayanth Viradha Vazhipadu
இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சுகம்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – பயம்
கடனம் – ஆதரவு
சிம்மம் – உயர்வு
கன்னி – போட்டி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – புகழ்
தனுசு – செலவு
மகரம் – அமைதி
கும்பம் – சினம்
மீனம் – நிறைவு
சந்திராஷ்டமம் – ரேவதி
-
May 17 Narashimar Jayanthi
விகாரி வருடம் – வைகாசி 3
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
நரசிம்ம ஜெயந்தி,
பழநியில் திருக்கல்யாணம்,
திருப்புத்தூர் திருத்தளிநாதர்,
காளையார் கோவில் சிவன் தேர்
17-மே-2019 வெள்ளி
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 4.25
நட்சத்திரம் : சுவாதி இ 3.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Narasimmar thuthi
நாராயாண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே!
லட்சுமியின் நாயகனே!
அசுரன் ஹிரன்யனை வதம் செய்தவரே!
மிகப் பெரிய வீரரே!
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே!
உம்மைத் துதிக்கின்றேன்.
கடன்களிலிருந்தும், சுமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக!
கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே!
நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்!
-
Sai baba Gayathri Mandiram
மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..
சச்சிதானந்தாய தீமஹி..
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.
-
Pradhosha Valam
சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும்.
சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை 'பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும்.
நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும்.
நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது 'சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.
-
Rudratcham Anvadhal Payanagal
மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது. தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.
வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.
ருத்ராட்சத்தின் வகைகள்:
பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன், பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலர் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவதுதான் சிறந்த நன்மைகளைத் தரும்.
-
Rasi palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – சுகம்
கடனம் – உயர்வு
சிம்மம் – நட்பு
கன்னி – புகழ்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – வெற்றி
தனுசு – நிறைவு
மகரம் – கவலை
கும்பம் – செலவு
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி