Blog

  • May 20 Indraya Naal Eppadi

    மே 20 – சித்த யோக நாள்
    விகாரி வருடம் – வைகாசி 6
    20-மே-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    2.53
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    3.58
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sholingur Lakshmi Narasimar Koil Garuda Sevai

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில் கருட சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

    சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் ஆகம விதிகளை உருவாக்கிய  தொட்டையாச்சாரியார் என்ற வைணவப் பெரியார் ஒருவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.அவர் பெருமாளின் கருடோற்சவத்தைப் போற்றி சுலோகங்கள் எழுதியவர்.ஒவ்வொரு ஆண்டும் அவர் தவறாமல் காஞ்சீபுரம் சென்று கருடோற்சவத்தைக் கண்டு தரிசிப்பார். 

    ஒரு வருடம்  உடல்நிலை இயலாமை  காரணமாக கருடசேவையைத் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை.கருடசேவை அன்று அதிகாலையில் சோளிங்கர் தக்கான் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கிய இவர் கருடோற்சவத்தைக் காண இயலவில்லை என்று ஏங்கி வேண்டினார். 

    பெருமாள் தன் கருடசேவைக் காட்சியை அவர் இருந்த இடத்திலேயே காட்சி தந்து அருளினார்.என்பது ஐதீகம் இதனால்தான் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை உற்சவத்தின் போது கருடசேவை கோபுர வாயிலை அடைந்ததும்  குடையைச் சற்று சாய்த்துப் மறைத்து பிடிப்பது வழக்கமாக உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு கருட சேவை உற்சவம் இன்று நடந்தது.இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் எழுந்தருளி நான்கு மாடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என சுவாமியை தரிசனம் செய்தனர்…..
     

  • Kanchi Maha Periyavar Jayanthi Vizha

    சென்னையை அடுத்த பம்மலில் இருக்கும சிவா விஷ்ணு அலையத்தில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்த்திரசேகரேந்திர ஸ்ரஸ்வதி சுவாமிகள் 126வது ஜெயந்தி மாஹோத்ஸவம் நடைபெற்றது. 

    காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கிய மகா பெரியவரின் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், நவகிரஹ, ஆயுஷ்ய, கலஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகாபெரிவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது, 

    அதனையடுத்து கோவிலில் உள்ள விநாயகர், வள்ளி தேவானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஐய்யப்பன், தட்ணாமூர்த்தி, விஷ்ணு துர்கை,கோதண்டராமர், அஞ்னேயர் உள்ளிட்ட நவகிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

    சுற்றுவட்டத்தில் இருந்து  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், மதியம் அன்னதாமனம் வழங்கப்பட்டது. 
     

  • Padmavathi thayar car festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வசந்த உற்சவத்தின்  இரண்டாவது நாளையொட்டி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவதின் இரண்டாவது நாளான இன்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி  நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 

    கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது .அவ்வாறு இன்று மதியம் பத்மாவதி தாயார் உற்சவருக்கு பால், மஞ்சள்,  குங்குமம், பால் ,தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது . 

    மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அன்னமாச்சாரியார் திட்டத்தின் சார்பில் ஆன்மிக சங்கீர்த்தனைகள் நடைபெற்றது. இரவு ஏழு முப்பது மணிக்கு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – நிறைவு
    மிதுனம் – நட்பு
    கடனம் – புகழ்
    சிம்மம் – அமைதி
    கன்னி -பிரீதி
    துலாம் –  நன்மை 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு – அன்பு
    மகரம் –   உயர்வு
    கும்பம் – கவலை
    மீனம் – தடங்கல்
    சந்திராஷ்டமம்    – பரணி

  • May 19 Indraya Naal Eppadi

    மே 19  – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – வைகாசி 5
    மதுரை கூடலழகர் தேர்
    19-மே-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    2.57
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    3.20
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thiruparankundram Murugan palabishegam

    தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல்படை விமான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் வைகாசி மாத வசந்த விழா கடந்த 9ம் தேதி துவங்கியது விழாவின் நிறைவாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்தனர்.

    ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா முக்கியமானதாகும்.

    இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா,கடந்த 9ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்துக்கு முருகன் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    காலை 5 மணிக்கு சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும்,பாலாபிஷேகமும் நடைபெற்றது.பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டப்த்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு காலை முதல் மாலை வரை,பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பால் காவடி,பன்னீர் காவடி,இளநீர் காவடி,புஷ்ப காவடி எடுத்தும்,அலகு குத்தியும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர்.விழாவையொட்டி,மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம்  எழுப்பினர்.
     

  • Dharapurm Anjaneyar koil car festival

    தாராபுரத்தில் 700 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் . 700 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த இன்றைய தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார், இதில் 89 ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர். 

      பொதுவாக சீதாராமர் திருக்கோவில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம், ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் தனி சிறப்பு. 

    அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே, இக் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சார்த்தி ஆஞ்சநேயப் பெருமானே உள்ளம் உருக வேண்டிக் கொண்டாள் திருமணத்தடை உள்ளவர்களுக்கு சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பதும், கல்வி கேள்விகளில் அவர்கள் சிறந்து சிறந்து விளங்குவார்கள் என்பதும், தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது சுபிட்சம் அடையும் என்பதும் தனிச்சிறப்பு.
     
    வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வருடாந்திர தேர்வடம் பிடிப்பு நிகழ்ச்சி கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது ஆஞ்சநேய சுவாமிகளுடன் உற்சவ மூர்த்திகளான சீதாராமர் சிலைகள் பக்தர்கள் புடைசூழ திருத்தேருக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் நிறுத்தப்பட்டது தொடர்ந்து நாளை காலை ஏழு மணிக்கு திருத்தேர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நிலையை அடையும்
       
    புகழ்பெற்ற தாராபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய திருக்கோவிலில் நடைபெற்ற தேர்வடம் பிடித்து நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
     

  • muruga peruman avadaritha vaigasi visagam

    வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். 

    வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான்  என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம் பிக்கை. 

    வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று  சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

    வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நிறைவு
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – பயம்  
    கடனம் – வெற்றி
    சிம்மம் – உயர்வு
    கன்னி – கவலை
    துலாம் –  ஆதரவு
    விருச்சிகம் – அன்பு
    தனுசு – கோபம் 
    மகரம் –   புகழ்
    கும்பம் – போட்டி
    மீனம் – நிறைவு
    சந்திராஷ்டமம்    – அசுவினி