இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – நட்பு
கடனம் – வெற்றி
சிம்மம் – அன்பு
கன்னி – சுகம்
துலாம் – பொறுமை
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – லாபம்
மகரம் – உயர்வு
கும்பம் – அமைதி
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – சதயம்
Blog
-
Rasi Palangal
-
May 14 – Indraya Naal Eppadi
மே 14 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – சித்திரை 31
14-மே-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 12.03
நட்சத்திரம் : பூரம் கா 8.02
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Thiruchendur Murugan Koil Vaigasi thiruvizha
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி வைகாசி திருவிழா தொடங்குகிறது.
மே 17 – அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு,
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது.மே 18 – அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு,
1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம்,
சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்,
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.மே 19 – அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு,
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,
மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம்திருவிழாவை கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
-
1955 thirupathy Vedio
திருப்பதி ஏழுமலையானை தரிக்க தற்போது இருக்கும் சூழலில் 10 மணி நேரமாவது காத்து இருக்க வேண்டும். ஆனால் 64 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1955 இருக்கும் திருப்பதி எப்படி இருந்திருக்கும்.
1955 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகள் இதோ…
-
Alwar thirunagari swamy car fest
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நவதிருப்பதி கோயில்களில் ஒன்பதாவது கோயிலாகவும் குரு ஸ்தலமாகவும் உள்ள ஆழ்வார்திருநகரி சுவாமி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி பொலிந்துநின்றபிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது.
9ம் திருவிழாவான மே 13ம் தேதி திங்கள் கிழமை காலையில்விஸ்வரூபம், திருமஞ்சணம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. சுவாமி ஸ்ரீ பொலிந்துநின்றபிரான் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினர். தீபாராதனைக்குப் பின்னர் திரளான பக்தர்கள் தேரை கோவிந்தா… கோவிந்தா.. கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த தேரானது மதியம் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Thanthonri Eswarar Koil Mazhai Vendi Yagam
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர சாந்தி மற்றும் மழை வேண்டி 108 கலச அபிஷேகம் நடைபெற்றது.
திருவேள்வியூர் என்று அழைக்கக்கூடிய பேளூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பெருமானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் அக்னி நட்சத்திர சாந்தி ஹோமமும் மழை வேண்டியும் உலக நன்மையின் பொருட்டு நிகழும் விகாரி வருடம் சித்திரை மாதமான நேற்று 108 கலச அபிஷேகம் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் அங்குள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், 108 கலச ஆவாஹனம் வேத பாராயணம் பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் 108 கலச அபிஷேகம் பூஜை நடைபெற்றது, பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பூஜை சிறப்பாக நடத்தினர்.
இதில் 108 கலசங்களை வைத்து அக்னி ஹோமம் நடத்தப்பட்டு மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்துவது மிகவும் எதிர்பார்ப்புடன் மழையை பெறவேண்டும் என்ற ஆன்மீக பக்தியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நட்பு
மிதுனம் – உயர்வு
கடனம் – சினம்
சிம்மம் – ஆதரவு
கன்னி – புகழ்
துலாம் – லாபம்
விருச்சிகம் – அன்பு
தனுசு – அமைதி
மகரம் – நலம்
கும்பம் – ஆசை
மீனம் – கீர்த்தி
சந்திராஷ்டமம் – அவிட்டம் -
May 13 Indraya Naal Eppadi
மே 13 விகாரி வருடம் – சித்திரை 30
13-மே-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : நவமி ம 2.24
நட்சத்திரம் : மகம் கா 9.39
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Srinivasa Perumal Thirukalyanam
பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவேங்கடபுரம் தசரத நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக் கல்யாண வைபோகம் தசரத நகரில் நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாணத்திற்கான இருபது வகையான சீர்வரிசையை பொன்னியம்மன் கோவிலிலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மணப்பந்தலுக்கு கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து உய்யாளிசேவையும், மாலை மாற்றும் சடங்கும், பூப்பந்து எறிதல் சடங்கும் நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்க்கப்பட்டு கெட்டிமேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீதேவி பூதேவியர்க்கு மங்கலநாண் சூட்டப்பட்டது.
திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் தீப தூப ஆராதனைகள் செய்வித்து நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மங்கலநாண் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னேரி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.
-
Nellukadai Mariamman Ther
நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 3 ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து இக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேர்ச்சைக்காக பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்தி வருகின்றனர்.
தொடர்ந்து நெல்லுக் கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரினை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைக்க ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று மாலை நிலைக்கு வந்து சேரும்.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் மாவிளக்கு வைத்தும் படையலிட்டும்; பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பிலை காவடி, மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளோடு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.