Blog

  • Palani murugan koil vaigasi visagam

    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில்  விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து கொடுமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் வைகாசிவிசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான   அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெயாவானை திருக்கல்யாணம் 17 ம் தேதியும்,  தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.  

    18ம்தேதி வைகாசி விசாக தினத்தன்று  மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில்  இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
     

  • Govindaraja Swamy koil bramorchavam

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  காலை 8.30 மணி முதல் 10 மணி வரை கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவ கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ,சக்கரத்தாழ்வார், பரிவார தேவதைகள் தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தனர். 

    பின்னர்  கடக லக்னத்தில் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம்  வேத பண்டிதர்கள் வேதம் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசைக்கு மத்தியில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன்  பிரம்மோற்சவத்திற்கான கருட கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசுகையில் பிரம்மோற்சவத்தில் ஐந்தாவது நாளான  15ஆம் தேதி கருடவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

    18ம் தேதி ரத உற்சவமும், 19ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. சுவாமி வீதி உலா வரக் கூடிய  காலை மற்றும் இரவு நேரங்களில்  போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போலீசாருடன் இணைந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது . 

    கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில்  மின் அலங்காரத்தாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும்  ஏற்படாத வகையில் போலீசாருடன் இணைந்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளும் ஊழியர்களும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னபிரசாதம், மோர், குடிநீர்  ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் சுவாமி வீதி உலாவிற்கு முன்னதாக  பஜனைகள் ,கோலாட்டம், மயிலாட்டம் போன்ற  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறக் கூடிய வாகன சேவையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி அருள் பெற வேண்டும் .நாளுக்கு நாள் கோவிந்தராஜ சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  1.4 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையத்திற்கு  தங்க முலாம் பூசும் பணி இன்ஜினியரிங் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

  • May 12 Mothers Day

    மே 12 – அன்னையர் தினம்
    விகாரி வருடம் – சித்திரை 29
    அன்னையர் தினம்
    12-மே-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    மா    4.49
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    11.15
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

  • Rasi Palangal

    இன்று இந்த ராசிக்கு லாபம்  …  
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆசை 
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – நட்பு 
    கடனம் – அமைதி  
    சிம்மம் – புகழ்
    கன்னி – அன்பு
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – உயர்வு
    தனுசு – ஆதரவு
    மகரம் –   சுகம்  
    கும்பம் – வரவு
    மீனம் – பிரீதி 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • Sivan Parvathy Thirumana kolam

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழாயொட்டி வேதாமிர்தஏரியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியருளிய பெருமையுடைய ஸ்தலமாகும் ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் வழிபட்ட ஸ்தலமாகும் இங்குள்ள இறைவனை வழிபட்ட வேதங்கள் தங்களின் பெயரிலேயே இறைவன், இறைவி, ஊர், கடல், தீர்த்தங்கள், காடு அனைத்தும் அழைக்கப்பட வேண்டும் என் வேண்டிக் கொண்டன.

    அவ்வாறே அருளியதாக மறைக்காட்டீசர் தனூர் மாதத்தில் வேதங்களுக்கு காட்சியளித்து அருளினார் அதன்படி இறைவன் வேதாரண்யேஸ்வரர் என்றும் இறைவி வேதநாயகி என்றும், ஊர் வேதாரணியம் என்றும், கடல் வேதநதி என்றும் ஏரி வேதாமிர்தஏரி என்றும், காடு வேதவனம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
     

  • Murugan Gayathri Mandiram

    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

    வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

    ஓம் தத் புருசாய வித்மஹே 
    மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

     
    இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.  
     

  • Thirupathy Thyagaraja Jayanthi Urchavam

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாண மேடையில்  252 ஆவது தியாகராஜர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. 

    இதில் தியாகராஜ ஸ்வாமி பஞ்சரத்ன கீர்த்தனைகள் , உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத  வித்வான்களின் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதில் ஸ்ரீ பத்மாவதி பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இசை மற்றும் நாட்டிய கல்லூரி மாணவ ,மாணவிகள், அன்னமாச்சாரியா,  இந்து தர்ம பிரசார பரிஷத் கலைஞர்கள் என 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது. 

    இதில் வெங்கடேஸ்வரா சங்கீத கல்லூரி முதல்வர் பத்மாவதி நிகழ்ச்சி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம் ரெட்டி ,பிரபல சங்கீத வித்வான் புதுக்கோட்டை ராமநாதன் ,ஹைதராபாத் சகோதரர்கள் சேஷாச்சாரி, ராகவாச்சாரி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து வந்த வீணை, வயலின், டோலு, நாதஸ்வர கலைஞர்களின் சங்கீத இசை கச்சேரி நடைபெற்றது .இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டும் கேட்டு ரசித்தனர்.

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்சொல்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – பக்தி 
    கடனம் – ஓய்வு  
    சிம்மம் – முயற்சி
    கன்னி – தெளிவு
    துலாம் –  ஊக்கம் 
    விருச்சிகம் – பிரிவு
    தனுசு – ஆக்கம் 
    மகரம் –   தனம் 
    கும்பம் – குழப்பம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்
     

  • May 11 Indraya Naal Eppadi

    மே 11 இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 28
    11-மே-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    7.13
    நட்சத்திரம்    :    பூசம்    ம    12.51
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Mangala Devi Koil

    தமிழக – கேரளா எல்லைப்பகுதியாயில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்திரா பெளர்ணமி தினமான இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

    தமிழக – கேரளா எல்லையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதி பளியங்குடி எனும் இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது இந்த மங்களா தேவி கண்ணகி கோயில். 

    கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயில் கேரள மாநிலத்தின் கட்டுப்பட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பெளர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
     

    இந்த பகுதிக்கு அருகில் தான் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியிலுள்ள  தேக்கடி ஏரி வந்து படகு சவாரி செய்து இந்த ஏரிக்கு வரும் வனவிலங்குகளை கண்டு புகைப்படம் எடுத்து சொல்கின்றனர் குறிப்பாக யானைகள்,புலிகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல மிருகங்கள் இந்த ஏரி நீர் அருந்துவதற்காக வருகின்றன. 

    தேக்கடி ஏரி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இங்கு ஒரு சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளில் புலி இருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    பெரியார் வனவிலங்கு சரணாலயம்

    பெரியார் வனவிலங்கு சரணாலயம் 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

    இந்த சரணாலயத்தில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், குரங்குகள் மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் புலி கூட காணலாம். 

    இந்த சரணாலயத்தில் 350 ச.கி.மீ வனவிலங்கு காப்பகமாக  (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது.வனவிலங்கு அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி இங்கு 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.