Blog

  • Gayathri Mandiram

    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

    இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. 

    காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

    தத் – வெற்றி
    ச – வீரம்
    வி – பராமரிப்பு
    து – நன்மை
    வ – ஒற்றுமை
    ரி – அன்பு
    நி – பணம்
    யம் – அறிவு
    ஃபர் – பாதுகாப்பு
    க்கோ – ஞானம்
    த்தி – அழுத்தம்
    வா – பக்தி
    ஸ்யா – நினைவாற்றல்
    ஃத்தி – மூச்சு
    மா – சுய ஒழுக்கம்
    யோ- விழிப்புணர்வு
    யோ- உருவாக்குதல்
    நஹ- இனிமை
    பரா- நல்லது
    சோ- தைரியம்
    த்தா- ஞானம்
    யட் – சேவை

    காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
     

  • Sivanaga Marum perumal

    திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார்.

    திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. 

    ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி, மந்திர ரூபத்தில் அவரை ‘சங்கர நாராயணர்’ போல் மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது. 

    அந்த வேளையில் பெருமாள் அங்கிருந்து இறங்கி, அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்கச் செல்வதாக ஐதீகம். வெள்ளிக்கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுவார்கள். 

  • Natarajar Peruman Thandavamadiya Thiruthalangal

    மகாலட்சுமியின் தவத்திற்கு இணங்கி நடராஜப் பெருமான் ஆடிய லட்சுமி தாண்டவ திருக்கோலத்தை திருப்பத்தூர் மாவட்டம் திருத்தளியில் தரிசிக்கலாம். ஸ்ரீ பத்துக் கரங்களுடன், இடது காலை ஊன்றி வலது உள்ளங்கால் தெரியும்படி அகத்தியருக்காக ஆனந்த தாண்டவமாடிடும் நடராஜரை நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள கீழ்வேளூரில் காணலாம்.

    திருவாரூரில், திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கேற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. இவர் வீதிவிடங்கர் என்றும் இருந்தாடழகர் என்றும் போற்றப்படுகிறார்.

    பழநிக்கு அருகே கொழுமம் கோயிலில் ‘நித்தம் நின்றாடுவார்’ எனும் திருப்பெயரில் அக்னி பகவானுக்கு அருளிய நடராஜமூர்த்தியை தரிசிக்கலாம்.

    திருவாரூருக்கு அருகே உள்ள திருக்காறாயிலில் நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனமாடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்றும் ஆடும் நடனவகை இது.

    நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர் ஆடுவது, பாராவாரதரங்க நடனம். பாராவாரம் எனில் கடல்; தரங்கம் எனில் அலைகள். கடலலை போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடும் நடனம் இது.

    திருநள்ளாறு கோயிலில் நாகவிடங்கர் ஆடும் நடனம்& உன்மத்த நடனம். பெருமான் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இந்தப் பெயர்.

    திருவாரூர், கச்சனத்திற்கு அருகே உள்ள திருக்குவளையில் அவனி விடங்கர், பிருங்கி நடனம் ஆடுகிறார். பிருங்கி எனில் வண்டு. வண்டு பூவைச் சுற்றிப் பறந்து, உயர்ந்து, தாழ்ந்து, பின் பூவில் அமர்வது போன்ற நடனம் இது.

    நாகை, வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம். அன்னப்பறவை அடி மேல் அடிவைத்து எழிலாக நடப்பது போலிருக்கும்.

    திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம், கமல நடனம் ஆகும். ஈசன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகே திருக்கடையூரில் தரிசிக்கலாம். கஜ சம்ஹாரத்துக்குப் பின் பிட்சாடன வடிவில் ஈசன் கஜசம்ஹார நடனம் ஆடினார். இத்திரு வடிவம், மன்னர்குடி, வழுவூரில்‘கரியுரி போர்த்த கடவுளா’க வணங்கப்படுகிறது.

    காளியின் கர்வத்தை அடக்க ஈசன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை சென்னை, திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டில் தரிசிக் கலாம்.

    வாசுகி பாம்பிற்காக ஈசன் ஆடியது, வாசுகி அனுக்ரஹ நடனம். இவரை கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயத்தில் ஓவியமாகக் காணலாம்.

    சிதம்பரத்தை அடுத்துள்ள ஓமாம்புலியூரில் வியாக்ரபாத முனிவருக்காக நடனமாடினார் நடராஜர். இங்குதட்சிணாமூர்த்தியும் நடராஜரும் இடம் மாறி வீற்றிருப்பது சிறப்பு.

    சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியுள்ள சிற்சபை, அதற்கு முன் உள்ள மகாமண்டபம் கனகசபை, இரண்டாம் பிராகாரத்தில் தேர் வடிவ நிருத்தசபை, உற்சவமூர்த்தங்கள் உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபம் உள்ள ராஜசபை என்று பஞ்ச சபைகள் உள்ளன.

    ஈசன் பார்வதிக்கு ஆடிக் காட்டிய கௌரி தாண்டவத்தை திருவடிவை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

    காளி தேவிக்காக ஈசன் ஆடியது காப்புத் திருநடனம் (ரட்சா தாண்டவம்). சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள கூவம் கோயிலில் பத்தாம் நாள் திருவிழாவின் போது இந்த நடனத்தை தரிசிக்கலாம்.

    சிதம்பரம் அருகிலுள்ள கூடலையாற்றூரில், ஈசன் பிரம்மனுக்கு தாண்டவ தரிசனத்தை தந்தருளியதால் நர்த்தனவல்லபேசர் என வணங்கப்படுகிறார்.

    ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சித்ரா பௌர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக ஈசன் ஆடிய நடனம், சித்திர நடனம் எனப்படுகிறது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – புகழ்
    கடனம் – சாந்தம்  
    சிம்மம் – களிப்பு
    கன்னி – புகழ் 
    துலாம் –  உதவி
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – வெற்றி
    மகரம் –   யோகம் 
    கும்பம் – செலவு
    மீனம் – போட்டி 
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்
     

  • May 10 –  subamugurthanaal 

    மே 10 – சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – சித்திரை 27
    வீரபாண்டி மாரியம்மன் தேர்
    10-மே-2019 வெள்ளி  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    9.32
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    ம    2.19
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Naga Dhosham Neenga

    கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம்.

    திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில்  இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.
     
    பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
     
    நாட்களும் பலன்களும்:
     
    ஞாயிறு: நோய் நீங்கும். திங்கள்: குடும்பம் செழிக்கும். செவ்வாய்: உடல் பலம் கூடும். புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்.
     

  • Sabari Malai Nadai May 14 Thirappu

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக, வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்படும். மாதத்தின் முதல்  5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

    கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். நடை திறக்கப்படும் மே 14 ஆம் தேதி மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

     பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  • Thirupathy selbavarkal Sella vendiya koil

    திருப்பதிக்கு செல்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால்தான் திருப்பதி சென்றுவந்த பலன் கிடைக்கும். அது எந்த கோயில் என்று தெரியுமா?

    இலங்கையில் நடந்த  போரின் போது லட்சுமணன் மயங்கி விழ, சஞ்சீவினி மூலிகைக்காக சஞ்சீவிமலையை எடுத்து வந்த அனுமன், ஓரிடத்தில் அமர்ந்து கைமாற்றிவைத்து எடுத்துச் சென்ற இடம் எதுவென்று தெரியுமா?

    அதுதான் மலையை கீழே வையாத ஊரான திருமலைவையாவூர். சென்னையை கடந்து மதுராந்தகம் செல்லும் முன்பாக படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் சாலையில் ஒருமலை தெரியும். அங்குதான் வீற்றிருக்கிறார் பிரசன்ன வெங்கடேசபெருமாள். மலையேறிச் செல்லபடிக்கட்டுகள் இருக்கின்றன. கார்கள், வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் இருக்கிறது.

    இங்குமூர்த்தி, ஆதிவராகப் பெருமாள். திருப்பதி கோயிலைப் போல ஆதிவராகர் சன்னதிக்குப் பிறகு தான் பிரசன்ன வெங்கடேசபெருமாள்.
    மலையேறிச் சென்றதும் முதலில் தென்படுவது கம்பீரமான கோயில் கொடிமரம் அதனைக் கடந்து சென்றதும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதி. அலர் மேலமங்கை தாயார் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் இருக்கிறது. 

    மனதார வழிபட்டு வெளியே வந்ததும் அடுத்துள்ளது சக்கரத்தாழ்வாருக்கு தனிசன்னதி. அங்கு விமான தரிசனம் செய்ய வேண்டியது அவசியம். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி போல இருப்பது இக்கோயிலின் சிறப்பு.

    திருப்பதி திருக்கோயிலை கட்டிய அபராஜிதவர்ம பல்லவமன்னன் வேண்டியவாறு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடேசராக அழைக்கப்படுகிறார்.

    சுவாமி குதிரை பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததன் அடையாளம், குதிரை குளம்பின் அடையாளத்துடன் கோயிலின் வெளியே காணப்படுவதை இன்றும் காணலாம்.

    முகூர்த்த நாட்களில் இக்கோயிலில் கல்யாணங்கள் நடப்பதை அதிகம் பார்க்கலாம்.

    திருப்பதிக்கு சென்றுவந்தவர்கள் இந்த கோயிலில் வந்து பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால்தான், திருப்பதி சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பதால், திருப்பதி செல்பவர்கள் தவறாமல் வரவேண்டியதலமும் கூட. 

    ஒருமுறை வந்து பாருங்கள். பிரசன்ன வெங்கடேச பெருமாள், வாழ்க்கையை பிரகாசமாக்குவதை கண்கூடாகஉணர்வீர்கள். 

    ஓம்நமோநாராயணாய

    –    எழுத்தாளர் பாமா

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – நன்மை 
    சிம்மம் – செலவு
    கன்னி – மேன்மை 
    துலாம் –  சாதனை 
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு – சாந்தம் 
    மகரம் –   பிரிவு
    கும்பம் – பக்தி 
    மீனம் – உற்சாகம் 
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • May 9 Adi Sankarar Jayanthi

    மே 9 – ஆதிசங்கரர் ஜெயந்தி
    விகாரி வருடம் – சித்திரை 26
    ஆதிசங்கரர் ஜெயந்தி
    09-மே-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    11.38
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ம    3.33
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்