Blog

  • Perumal Mundiri Maalai Video

    புரட்டாசி மாதம் முதல்   சனிக்கிழமையான  இன்று  நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்லகளில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலைமுதலே பெருமாள் கோவிலில் எராளமான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்துள்ளனர். 

    சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டு பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு விஷேச முத்தங்கி அலங்காரம் செய்யபட்டது.

    இதனையடுத்து  உத்சவர் ஸ்ரீ பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி  ஆண்டாள்  தாயாருக்கு   18  கிலோ எடையுள்ள முந்திரி  மற்றும்   பழங்களில்  அலங்கார பொருட்கள் கொண்டு கோர்க்கப்பட்ட  மாலை  ஜடை ,கிரீடங்கள் அணிவிக்கபட்டு  பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.    

    கோவில் வாசல்களில் அரிசி எல்லு மற்றும் மலர்களால் அலங்காரங்க  கோலங்கள் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள்  ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரங்களும்  விதவிதமான மலர்கள் பழங்கள் என மாலை  அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதனால்  வெளிபகுதிகளில் இருந்து எராளமான பக்தர்கள்  வந்து  சாமி தரிசனம் செய்கின்றனர்.

  • Thirunallaru Koil Work

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் புகழ் பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள இக்கோயிலுக்கு, சனி தோஷம் நீங்க வேண்டி, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரகணக்கானோர்  வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி அரசால், திருநள்ளாறு கோயில் நகர திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை கொண்டும் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அளித்த நன்கொடையை கொண்டு , சுமார் 60 லட்ச ரூபாய் செலவில் சனீஸ்வரன் கோயிலின் வெளிப்பிரகார தளத்தில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்தார். முன்னதாக வெளிப்பிரகாரத்தில் பதிக்கப்படும் கற்களுக்கு விஷேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனையும் காட்டப்பட்டது. விஷேஷ காலங்களில்  சிறப்புக் கட்டண வரிசையில் செல்வோர்களுக்கான பாதையிது என்பது குறிப்பிடதக்கது.
     

  • September 21 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – பயம்  
    மிதுனம் – கவலை
    கடனம் – வரவு 
    சிம்மம் – அனுகூலம்  
    கன்னி –  தாமதம் 
    துலாம் –  ஆதரவு
    விருச்சிகம் – நற்செயல்
    தனுசு –     வெற்றி 
    மகரம் –   துன்பம் 
    கும்பம் – நன்மை   
    மீனம் – அமைதி
    சந்திராஷ்டமம்    – கேட்டை 
     

  • September 21 Puratasi Saturday

    செப்டம்பர் 21 – புரட்டாசி முதல் சனிக்கிழமை 
    விகாரி வருடம் – புரட்டாசி 4
    21-செப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    மா    4.17
    நட்சத்திரம்    :    ரோகிணி    கா    8.37
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Puratasi perumal vazhipadu

    பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர்.

    புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
     

  • Purattasi Saturday Viradham

    புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்ததும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.

    வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.
     

  • Thirupathy Bramorchava Poster

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கான சுவரொட்டி வெளியீட்டார் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி. 

    திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான சுவரொட்டியை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 29ஆம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுவதாக தெரிவித்தார். 

    வழக்கம்போல் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறக்கூடிய முதல் நாளான 30 ஆம் தேதி மாலை அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்கப்படும். இதையொட்டி  முதல்வரை வரவேற்கும் விதமாக நாளை விஜயவாடாவுக்கு அதிகாரிகளுடன் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

    எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும் அனைவருக்கும் சிறந்த முறையில் சாமி தரிசனம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார். 
     

  • Siruthuli Arul Vellam

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    அந்த தவஞானி ஒரு கணங்க மரத்தின்கீழ் சிவமோனத்தில் ஆழ்ந்திருந்தார்.

    ஆழ்ந்தவர் பிரம்ம நிலையில் அமிழ்ந்து போனார்.

     காலம் கடந்தது.

    அவ்விடம் காடாய் அடர்ந்தது.

     ஒருசமயம் அவ்வழி வந்த சிங்க ஜோடி ஒன்று அங்கேயே தங்கி வாழத் தொடங்கின.

     அருகிலிருக்கும் ஞானி பன்னெடுங்கால தவம் காரணமாக சிலைபோல் இருக்கவே ஏதோ கற்சிலை என விட்டுவிட்டன.

    காலம் வேகமாக சுழன்றது.

     சிங்கத்தின் குடும்பம் பெரிதானது. அவ்விடம்  சிங்க கூட்டத்தின் வாழ்விடமானது.

     காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வந்து உண்ணும் இடமும் அதுதான். நேரம் காலமின்றி கலவி புரியும் காம புரியும் அதுதான்.

     ஒருநாள் ஆண்சிங்கம் கற்சிலை மடியில் ஆனந்தமாய் அனந்தசயனம் கொண்டது.

     வழக்கம்போல் நாவால் உடல் மேவிய சிங்கம் சிலைபோல் இருந்த தவஞானியையும் இதமாய் நக்கத் தொடங்கியது.

     ஞானியிடம் எச்சலனமுமில்லை. கற்சிலை தோற்கும் மோனநிலை.

    ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர். 

    அது கன்னத்தில் வழிந்து மார்பில் ஓடி சிங்கத்தின் வாயில் பட்டது.

    அத்துளி ஓர் அதிர்வை உண்டுபண்ணியது.

    துள்ளி எழுந்தது சிங்கம்.

     நாவை நனைத்த அச்சிறு துளி பெரும் ஞானத்தைத் தந்து நிறைத்தது.

     "ஐயகோ…. இது கற்சிலை அல்ல….. சிலை வடிவில் ஒரு மகானின் சிலை…"
    புத்தியில் உறைத்தது.

    " ஐயோ… இவரின் இந்த புனித தலத்தை இத்தனை காலம் மாசுபடித்து விட்டோமே" சட்டென சிந்தனை எழுந்தது.

    தனது கூட்டத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னது சிங்கராஜா.

     சிங்க பரிவாரங்கள் நாற்புறம் சிதறி ஓடி நீர் கொண்டு வந்து சுத்தம் செய்து, மலர் கொண்டு வந்து மங்கலபுரி ஆக்கின.

     அவரைக் கடவுள் எனத் தொழ தொடங்கின..

     ஞானம் விரிந்தது.

     சிங்கக் கூட்டத்தின் தலைவன் ஒரு நாள் சொன்னான் " புலால் தவிர்ப்போம்.. கொலை புலை வேண்டாம்".

    " உணவுக்கு….?" கேட்டது ஒரு இளஞ்சிங்கம்.

    "காய்கறி போதும்." கர்ஜிக்காமல் கனிவாய் சொன்னது சிங்கராஜா.

    " வேட்டைக்கு பதில் என்ன செய்வது ?",புதிய தலைமுறை தர்க்கத்திற்குத் தயாராகி முறைத்தது.

    " சிவ சிந்தனை போதும்.. இந்த இறை வேட்டையில் இறைவனே சிக்குவார்" ஞானம் சொன்னது  சிங்கத்தலைமை..புதிய வேதம் சொன்னது. 

    சிங்கக் கூட்டம் சைவக்கூட்டமாகி வேட்டை விட்டு சிவயோக வேட்டையில் சிறக்கத் தொடங்கின.

     பல காலம் கழித்து ஒரு நாள் தவராஜா  தவம் கலைந்தார்.

      எதிரில் சைவப் பழமாய் திகழ்ந்த சிங்க ராஜாவை யார் என கேட்டார்.

     நடந்ததைச் சொன்னது சிங்கராஜா. நெகிழ்ந்து போனார் தவராஜா.

     ஞானத்தந்தை அப்படியே ஆரத் தழுவினார் ஞானவிலங்கை.அவர் அருள் அப்படியே சிங்கத்தின் உள் பாய்ந்தது.

     அதன்பின் உலகே வியக்கும் அற்புதம் நிகழ்ந்தது.

     சிங்கராஜா ஓர் அரச குடும்பத்தில் அருந்தவ குழந்தையாய் அவதாரம் எடுத்தார்.

    உரிய பருவத்தில் அரசராகப் பொறுப்பேற்று மக்களும் விலங்கினங்களும் போற்ற அரசாண்டார். 

    ஒரு சிறு கண்ணீர்த் துளியை உண்ட சிங்கம் ஞானம் பெற்று நானிலம் போற்றும் அரசனானது அந்த ஞானியின் பேரருள்.

    தவ ஆற்றலும் அருளாற்றலும் மிக்க அந்தஞானி போகர்.

     போகர் பிரான்…

     சித்தர் போகர் பிரான்.
     

  • September 20 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மேன்மை
    ரிஷபம் – கவலை 
    மிதுனம் – தாமதம்  
    கடனம் – லாபம் 
    சிம்மம் – அச்சம் 
    கன்னி –  பகை
    துலாம் –  வரவு
    விருச்சிகம் – பயம் 
    தனுசு –     நன்மை 
    மகரம் –   செலவு
    கும்பம் – ஆதாயம்  
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – அனுஷம் 
     

  • September 20 Indraya Naal Eppadi

    செப்டம்பர் 20 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – புரட்டாசி 3
    20-செப்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    மா    4.49
    நட்சத்திரம்    :    கார்த்திகை    கா    8.19
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்