செப்டம்பர் 25 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – புரட்டாசி 8
25-செப்-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 10.05
நட்சத்திரம் : ஆயில்யம் அ.கா 4.16
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Blog
-
September 25 Indraya nalla Neram
-
Mana sanjalam Theera
ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது உகந்தது.
மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிட வைப்பது மிகவும் நல்லது. மேலும் இதனைத் திங்கட்கிழமை தோறும் செய்து வந்தால் மேன்மையை பெறலாம்.
கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் முழு அருளும், ஆசியும் கிடைக்கப்பெற்று மனசாந்தி கிடைக்கப்பெறும்!
-
Thirupathy Alvar Thirumanjanam
திருப்பதி கோவிலில் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படுகின்ற தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. அதன்படி யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவை, கொலு ஆகிய பூஜைகள் முடிந்ததும், கோவிலின் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டது. மூலவர் ஏழுமலையானின் விக்ரகத்தில் மாசு படியாமல் இருப்பதற்காக பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது. அப்போது கோவில் கருவறை, துவார பாலகர், ஆனந்த நிலையம், வரதராஜசாமி சன்னதி, லட்சுமி நரசிம்மசுவாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, பாஷிங்கார்ல சன்னதி, தங்க கொடி மரம், பலி பீடம், வெள்ளி கதவுகள், சம்பங்கி மண்டபம், மகா துவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் என அனைத்து இடங்களும் பச்சை கற்புரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான சுகந்த மூலிகைப் பொருட்களை கொண்டு தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்ஷித்தலு தேவஸ்தான ஊழியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 11 மணியளவில் தூய்மைப்பணி முடிந்ததும், ஏழுமலையான் மீது போர்த்தப்பட்ட பட்டு துணியை அகற்றி விட்டு, மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி கோவிலில் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டது.
-
Thirupathyil Donation VIP Dharshan
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பதாவது அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு .திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் பேசிய அவர் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 10 கோடி ரூபாயில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் படிக்க கூடிய மாணவ , மாணவிகளுக்காக 100 கோடி ரூபாயில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் தண்ணீர் தேவைக்காக திருப்பதியில் பாலாஜி அணை கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாஙா.
தேர்தல் போது தேர்தல் அதிகாரிகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1371 கிலோ தங்கத்தை மீண்டும் ஓராண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்த வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுமதிக்க அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எவ்வளவு நன்கொடை வழங்கினால், எத்தனை பேரை அனுமதிப்பது, ஆன்லைனில் நன்கொடை பெறுவதா, அல்லது நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்குவதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
-
September 24 Indraya naal Eppadi
செப்டம்பர் 24 – ராசி பலன்
விகாரி வருடம் – புரட்டாசி 7
24-செப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 12.05
நட்சத்திரம் : புனர்பூசம் கா 6.53
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
September 24 Rasi palan
செப்டம்பர் 24… இன்று இந்த ராசிக்கு வரவு
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – அமைதி
ரிஷபம் – லாபம்
மிதுனம் – வரவு
கடனம் – செலவு
சிம்மம் – கவலை
கன்னி – துயரம்
துலாம் – பயம்
விருச்சிகம் – ஆதாயம்
தனுசு – தனம்
மகரம் – குரோதம்
கும்பம் – அன்பு
மீனம் – சகம்
சந்திராஷ்டமம் – உத்திராடம்
-
Pengal Solla Vendiya Thudhi
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதேஇதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.
-
Purattasi Magimai Vilakkum Kadhai
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.
ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.
பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.
பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
-
Kulasekarpattinam Dasara
உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. காலை 7.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.
கொடியேற்றம் முடிந்ததும் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. தினசரி மாலை 6 மணிக்கு இன்னிசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 8-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.
9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க் கப்படும்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
-
Thirupathy Dharshan Cancel
பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் வரும் 30-ம்தேதி முதல் அக்.8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அதனால் நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.
ஆண்டுக்கு 4 முறை வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோவில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.