இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பயம்
மிதுனம் – பாசம்
கடனம் – சிக்கல்
சிம்மம் – ஆதரவு
கன்னி – தோல்வி
துலாம் – நோய்
விருச்சிகம் – லாபம்
தனுசு – செலவு
மகரம் – சுகம்
கும்பம் – கவலை
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – பூராடம்
Blog
-
September 23 Rasi Palan
-
September 23 Indraya Naal
செப்டம்பர் 23 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – புரட்டாசி 6
23-செப்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : நவமி ம 1.54
நட்சத்திரம் : திருவாதிரை கா 7.53
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Danvantri Arogya Peedam
தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு 108 கிலோ மஞ்சள் குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.
.jpg)
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் தேய்பிற அஷ்டமியை முன்னிட்டு நேற்று 21.09.2019 சனிக்கிழமை மற்றும் இன்று 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ப்ரத்யங்கிரா, துர்கா, பைரவர் யாகங்களுடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கு 108 கிலோ மஞ்சள் குங்கும்ம் அபிஷேகம் நடைபெற்றது.
.jpg)
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருஷ்டி தோஷங்கள் நிவர்த்தியாகவும், சத்ரு உபாதைகள் அகலவும், குடும்ப நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், உலக நலனுக்காகவும், விவச்சாயங்கள் செழிக்கவும், மேலும் பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிராத்தனை செய்தனர். மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார், இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
Perumal Koil Kumbabishegam
செங்குன்றம் அருகே வடகரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலசுப்ரமணியர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
-
Thirupathy bramorchava kodiyetram
திருப்பதி ஏழுமலையான கோயில் பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வுகள்
செப்டம்பர் 30 -பிரம்மோற்சவ கொடி ஏற்றுதல் பெரிய சேஷ வாகனம்
அக்டோபர் 1 – காலையில் சின்ன சேஷ வாகனம் , இரவில் ஹம்ச வாகனம்
அக்டோபர் 2 – காலையில் சிம்ம வாகனம் இரவில் முத்துப் பல்லாக்கு
அக்டோபர் 3 – காலையில் கற்பக விருஷப வாகனம் இரவில் சர்வ பூபாள வாகனம்
அக்டோபர் 4 – காலையில் மோகினி அலங்காரம், இரவில் கருட வாகனம்

அக்டோபர் 5 – காலையில் அனுமன் வாகனம் இரவில் தங்க தேரோட்டம்
அக்டோபர் 7 – காலையில் தேரோட்டம், இரவில் குதிரை வாகனம்


அக்டோபர் 8 – காலையில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் முடிகிறது மாலை கொடி இறக்கம்
-
alhokha fm news
நம்மை இறைவனுக்கு மிக அருகில் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் இசைக்கு உண்டு. அதனால் தான் இசையோடு பாடப்படும் திருவாசகமும், திருப்பாவையும் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. பக்திப் பாடல்களை கேட்கும்போது உள்ளுக்குள் ஏதோ உருகி மனம் லேசாகிவிடுகிறது.
இனி நீங்கள் பக்திப் பாடல்களையும், நல்ல உபன்யாசங்களையும் கேட்க யூ ட்யூபில் கீ வேர்ட் போட்டு தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. உங்களுக்காகவே வந்திருக்கிறது, பக்திக்கான ஒரு பிரத்யேக பண்பலை ஒலிபரப்பு சேனல். அதுவும் மொபைல் ஆப் வடிவில்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சித்தாந்தத்தோடு உலகளாவிய அளவில் இந்தியாவின் ஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான பண்பலையாக அலோகா FM (Alhokha fm) தொடங்கப்பட்டிருக்கிறது. Alhokha என்ற சொல் இறைவனை குறிக்கும். இதை 'அலோகா' என்றே உச்சரிக்க வேண்டும்.

பக்தி பாடல்கள், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள் என உங்கள் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக்கும் அனேக விஷயங்களோடு 24 மணி நேரமும் இயங்குகிறது.
சுயமுன்னேற்ற பயிற்சி சிந்தனைகள், வகுப்புகள், ஆன்மீக சாதனா முறைகள், ஆன்மிக இரகசியங்கள் அதன் அறிவியல் விளக்கங்கள், பண்பாடு சார்ந்த அறிவுறுத்தல்கள் போன்றவை alhokha fm-ல் உண்டு.

எளிமையான அதேநேரம் சக்திமிக்க யோக முறைகளின் அறிமுகத்தை alhokha fm-ல் நீங்கள் அறியலாம். வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்குகின்றனர். சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் மகாத்மாக்கள் மற்றும் உயர்ந்த மாமனிதர்களின் சீரிய சிந்தனைகள் alhokha FMஐ அலங்கரிக்கின்றன.
-
September 22 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வரவு
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – நோய்
கடனம் – எதிர்ப்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – பயம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – தடங்கல்
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – ஆதாயம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – மூலம்
-
September 22 Indraya Naal
செப்டம்பர் 22 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – புரட்டாசி 5
22-செப்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி ம 3.18
நட்சத்திரம் : மிருகசீரிடம் கா 8.28
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Ganapathy Slogam
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்ஸ்லோகத்தின் பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
-
Puratasi viradhangal
ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.
துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.
ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.
சஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.
மகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.