Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thirupathy periyasesha vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் பெரியசேஷ வாகனத்துடன் சிறப்பாக துவங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரதோஷம் சிறப்பாக துவங்கியது முதல் நாளான இன்று இரவு  பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்தில் உபய தேவியர் ஆன ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார்.

    மாடவீதியில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை மாலை இரண்டு வேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். பக்தர்களின் வசதிக்கேற்ப திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

  • thanga thirichi vaganathil thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது . இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஆகம ஆலோசகர்  சிறப்பு பூஜைகள் செய்து பிரம்மோற்சவத்திற்கான கங்கண கயிறுகளை கட்டினார்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்துச் செல்ல நான்கு மாடவீதியில் வலம் வந்து  பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை இரவு நேரங்களில் சுவாமி தாயார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.

  • October 15 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    அசதி
    மிதுனம்     –   சுகவீனம்
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –    சிரமம்
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     சினம்
    விருச்சிகம்     – நலம்  
    தனுசு         –     நன்மை
    மகரம்         –    அலைச்சல்
    கும்பம்         –     துணிவு
    மீனம்         –      சிந்தனை
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி

  • October 15 2023 Navarathiri Arambam

    அக்டோபர் 15 – நவராத்திரி ஆரம்பம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 28
    15-அக்-2023 ஞாயிறு
    நவராத்திரி ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை ந.இ 12.47
    நட்சத்திரம் : சித்திரை இ 7.15
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thirupathy bramorchavam starts

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்குராற்ப்பணத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்

    திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 23 தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கி நடைபெற உள்ளது.

    இந்த வருடம் தெலுங்கு காலண்டரில் அதிக மாசம் என்பதை முன்னிட்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நிகழ்கின்றன சென்ற மாதம் காலகட்டில் பிரம்மோற்சவம் நடைபெற்று நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த மாதம் நவராத்திரி பிரம்மோற்சவம் அங்கூரா படத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது 15 ஆம் தேதி இரவு முதல் காலை மாலை இரண்டு வேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. உற்சவத்தை துவக்கும் விதமாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அங்கு ராற்பணம் என்ற நிகழ்வும் சேனாதிபதி உற்சவம் பெற்றது.

    சேனாதிபதி மாட வீதிகளில் வலம் வந்தார் பெருமாளின் வாகன சேவைகளுக்கு முன்னதாக சேனாதிபதி மாட வீதிகளை அனைத்தும் சரிவர உள்ளதா என  கண்காணிக்கும் விதமாக சேனாதிபதி எனப்படும் சேனை முதலியார் மாட வீதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

  • Gayathri devi sirappu abishegam

    கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

     ஆலயத்தின் நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

  • Theni perumal koil festival

    தேனி அருகே நாகலாபுரம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ செளந்தரராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அமர்ந்திருக்கும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் தேன் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தியும் உற்சவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி  ஆபரணங்கள் அணிவித்து  வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் பெருமாளுக்கு சோடாச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர தீபாராதனை காடடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

  • Manikarnika Kulam

    மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள ‘மணிகர்ணிகா காட்' என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும்  மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம்  பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு  சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.

    மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.

    அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது. இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருபுவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள்  புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.

    நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

    அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,வீட்டில்  உயிர் நீத்த பெரியவர்களின்  படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் அமாவாசை  மற்றும் தர்ப்பண தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். இது போல் நாம் செய்யும் பித்ரு தர்ப்பண பூஜையின் போது மனிதர்களுக்கு  செய்யப்படும் உணவு தானத்தைப் போன்று, காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு, இறைகின்ற அரிசி எள் என மற்ற உயிர்களுக்கும் தானம் இடும் புண்ணியத்தைப் பெறுகிறோம். தர்ப்பண  காலங்களில் பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கலாம்.

    இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.

  • Mahalaya amavasai seiyavendiyavai

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி, தர்ப்பணம் அமாவாசை தினம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் திதியோ அல்லது தர்ப்பணமோ செய்வதால் நம் தலைமுறை தலைக்கும். பொதுவாக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரத்தில் வரும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் விரதம் இருப்பது சிறப்பானது. நல்ல பலனை கொடுக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களிலாவது விரதம் இருந்து பெருமாளைத் தரிசிப்பது உகந்தது.

    தற்போது சனிக்கிழமையும், மகாளய அமாவாசையும் கூடி வரும் நாளில் நாம் கட்டாயம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றி இறைவனையும் வழிபடுவது மிகவும் சிறப்பானது.

    பொதுவாகச் சனிக்கிழமை விரதம் இருப்பதால் நம்மீது இருக்கும் சனி பகவானின் வக்கிர பார்வை குறையும். இந்த சனி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வதால் நமக்கும், நம் முன்னோருக்கும் இருக்கும் சனி பார்வை பிரச்சினை விலகும்.

    இதனால் முன்னோர்கள் ஏதேனும் சில பாவங்களால் வைகுண்டம் அடைய முடியாமல் இருந்தால், நாம் இந்த நாளில் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை வைகுண்டம் அடைய வழிவகுக்கும்.

  • October 14 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  இன்பம்
    ரிஷபம் –    பயம்  
    மிதுனம் –   மகிழ்ச்சி  
    கடகம் – தாமதம்
    சிம்மம் –    நன்மை
    கன்னி –    சினம்
    துலாம் –     பொறுமை
    விருச்சிகம் – மேன்மை
    தனுசு –     சிக்கல்
    மகரம் –    மறதி
    கும்பம் –     நிறைவு
    மீனம் –      பயம்
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி