Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • October 19 2023 Ippasi 02

    அக்டோபர் 19 – ஐப்பசி 2
    சோபகிருது வருடம் – ஐப்பசி 2
    19-அக்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 11.4
    நட்சத்திரம் : கேட்டை இ 8.27
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • October 18 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நிறைவு  
    ரிஷபம்         –    சுகம்   
    மிதுனம்     –   வெற்றி  
    கடகம்         –  அலைச்சல்  
    சிம்மம்         –    அச்சம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     அசதி
    விருச்சிகம்     – பரிவு  
    தனுசு         –     சிந்தனை
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –     மேன்மை
    மீனம்         –      ஓய்வு
    சந்திராஷ்டமம்    – பரணி, கார்த்திகை

  • October 18 2023 Subamuhurthanaal

    அக்டோபர் 18 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 1
    சுபமுகூர்த்த நாள்
    18-அக்-2023 புதன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சூன்ய
    திதி நேரம் : சதுர்த்தி ந.இ 12.13
    நட்சத்திரம் : அனுஷம் இ 8.52
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Ippasi selvam kozhikka

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று  ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே காணலாம். ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம்.

     துலா ஸ்நானம்:
    ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

    கோவத்ச துவாதசி:
    கோவத்ச துவாதசி அன்று மாலை நேரத்தில் 04-30 மணி முதல் 06-00 மணிக்குள் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

    தனத்திரயோதசி:
    திரயோதசி அன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும்..மேலும் தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

    தீபாவளி:
    ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

    கேதார கௌரி விரதம்:
    கேதார கௌரி விரதம் அன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

    யமத் துவிதியை:
    யமத் துவிதியை அன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.. இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

  • Ipasi month sirappugal

    ஐப்பசி மாதம், 7வது மாதமாகும்.சூரியன்,  துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம், அதனால், இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும், இம்மாதத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், இதற்கு அஸ்வினி மாதம் என பெயர். இதுவே ஐப்பசி மாதமாயிற்று.
     
    பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

    ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது, காவேரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால், அனைத்துவிதமான பாவங்களும் நீங்கும்.

    இம்மாதத்தில்,தேய்பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம்,  மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும்,  உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

    இம்மாதத்தில், தேய்பிறையில் வரும் திரயோதசி, கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். மேலும், தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால், அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

    ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்தசி. அன்றைய தினம் தீபாவளி பண்டிகை. . இந்த நாளன்று கிருஷ்ணர், நரகாசுரனை கொன்று, மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹா லட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

    தீபாவளிக்கு மறுதினம், கேதார கௌரி விரதம்.  இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

    இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் துவிதியை, எமத் துவிதியை ஆகும். இன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி, சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு, மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    இம்மாதத்தில், வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள், சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நாள். பல கோவில்களில், சூரசம்ஹாரம் நடக்கும். இம்மாதத்தில் வரும் பவுர்ணமியின்று, சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் பங்கேற்றால், வீட்டில், வறுமை ஓழியும்.

  • October 17 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மேன்மை
    ரிஷபம்         –    சாதனை  
    மிதுனம்     –   கவலை
    கடகம்         –  சுகவீனம்
    சிம்மம்         –    நட்பு
    கன்னி         –    அசதி  
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     – போட்டி
    தனுசு         –     விவேகம்  
    மகரம்         –    ஏமாற்றம்
    கும்பம்         –     தனம்
    மீனம்         –      சினம்  
    சந்திராஷ்டமம்    – அசுபதி, பரணி

  • October 17 2023 Indrayanaal

    அக்டோபர் 17 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 30
    17-அக்-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை ந.இ 12.54
    நட்சத்திரம் : விசாகம் இ 8.48
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 16 2023 Rasipalan

    அக்டோபர் 16 – இன்றைய ராசிபலன் …
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சாந்தம்
    ரிஷபம்         –    பாராட்டு
    மிதுனம்     –   நிறைவு
    கடகம்         –  சலனம்
    சிம்மம்         –    இரக்கம்
    கன்னி         –    பரிவு
    துலாம்         –     மேன்மை  
    விருச்சிகம்     – பொறுமை
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –     எதிர்ப்பு
    மீனம்         –      பரிசு  
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுபதி

  • October 16 2023 Indrayanaal

    அக்டோபர் 16 – சந்திர தரிசன நாள்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 29
    16-அக்-2023 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ந.இ 1.7
    நட்சத்திரம் : சுவாதி கா 8.17
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • navarathiri amman sivapoojai alangaram

    நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.

    நவராத்திரி முன்னிட்டு அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சிவ பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிறப்புக் காட்சி தந்தார்.

    பின்னர் சிவ பூஜையில் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனுக்கு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.

    முன்னதாக ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு பல அடுக்குகளில் விநாயகர் கிருஷ்ணர் பெருமாள் சிவன் வடிவில் என ஏராளமான கொழு அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.