Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • October 14 2023 Mahalaya amavasai

    அக்டோபர் 14 – மகாளய அமாவாசை
    சோபகிருது வருடம் – புரட்டாசி 27
    அமாவாசை
    14-அக்-2023 சனி
    மகாளய அமாவாசை,
    நவராத்திரி கொலு வைக்க காலை 7.31 – 9.00 மணி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை இ 11.57
    நட்சத்திரம் : அஸ்தம் மா 5.44
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 13 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மறதி
    ரிஷபம் –    இன்பம்
    மிதுனம் –   ஓய்வு
    கடகம் – சினம்
    சிம்மம் –    போட்டி
    கன்னி –    இரக்கம்
    துலாம் –     ஆக்கம்
    விருச்சிகம் – அமைதி
    தனுசு –     அசதி
    மகரம் –    வரவு
    கும்பம் –     நலம்
    மீனம் –      நிறைவு
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி

  • October 13 2023 Indrayanaal

    அக்டோபர் 13 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 26
    13-அக்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.40
    நட்சத்திரம் : உத்திரம் ம 3.47
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • kalyana pasupatheeswarar pradhosham

    கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

    தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம் , அபிஷேக பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்து வெள்ளி கவசம் சாத்தப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி அதைத் தொடர்ந்து உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக குடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Pradhosa sutru

    சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும்.
     
    சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை 'பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

    பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும்.

    நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும்.

    நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது 'சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

    நற்பலன்கள் கோடி கிட்ட… பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வலம் வருவது எப்படி?

    சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும்.
     
    சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை 'பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

    பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும்.

    நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும்.

    நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது 'சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

  • Guruvara pradhosham

    ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம் ,பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

    ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள் ,காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல்,மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.

    சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும். தென்னாட்டுடைய சிவனே போற்றி – எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

  • October 12 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  போட்டி
    ரிஷபம் –    புகழ்
    மிதுனம் –   பயம்
    கடகம் – லாபம்
    சிம்மம் –    ஆதாயம்
    கன்னி –    அச்சம்  
    துலாம் –     நிம்மதி
    விருச்சிகம் – தெளிவு
    தனுசு –     கவலை
    மகரம் –    வெற்றி
    கும்பம் –     நட்பு
    மீனம் –      தடை
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம்

  • October 12 2023 Pradhosham

    அக்டோபர் 12 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 25
    பிரதோஷம்
    12-அக்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 8.59
    நட்சத்திரம் : பூரம் ம 1.31
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Mahalaya amavasai sirappugal

    மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கின்றனர்.

    சரி மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள்.

    மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்.

    இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

  • mohanoor perumal alayam thirukalyanam

    நாமக்கல் மோகனுார்  பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாத 3-வது வார ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு சிறப்பு வைபவ நிகழ்வாக திருமலையில் ஒரு நாள் நிகழ்வு ( அதாவது திருப்பதியில் அதிகாலை முதல் இரவு வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் இந்த பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது)முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவ நிகழ்வு மிக விமர்சையாக கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் நடைபெற்றது.

    முன்னதாக பட்டாச்சாரியார்கள் வேத மந்திரப்படி திருமண வைபவத்தை துவக்கினர் பின்னர் சீர் தட்டு அழைத்து வரும் நிகழ்வு,கங்கணம் கட்டுதல்,மாலை மாற்றுதல் நிகழ்வு திரு மாங்கல்ய தாரணம் நிறைவு பெற்று எம்பெருமான் திருக்கல்யாண வைபவ நிகழ்வு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது,பின்னர் பல்வேறு தீப  உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டு நிறைவாக மகாதீபம் காண்பிக்கப்பட்டது |இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.