Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Agathiyar vinayakar vazhipadu

    ஆதிசங்கரன் மைந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆடும் சங்கரி ஆனந்தா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஐங்கரங் கொண்ட ஆண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆங்கார ஓங்கார வடிவினே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதிசிவன் தந்த அண்ணலே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆறுதல் தந்திடும் ஆன்மீக போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அங்கத்தில் தந்தத்தை கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதத்தின் வேதமே வேதியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

     

    வேதாந்த சித்தாந்த போதகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    விஞ்ஞான மெஞ்ஞான தத்துவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வீரனே வேந்தனே விக்னனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    தத்துவம் மகத்துவம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சாந்தனே வேந்தனே சேந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    விந்தையே சிந்தனையே தந்தையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேலுடன் நின்றவன் அண்ணணே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சித்திக்கும் புத்திக்கும் உற்றவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிந்தைக்கு எட்டிய சீலனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிங்கார வேலவன் சொந்தமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    சேவடி செவ்வடி சேர்வோமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்பனை கடந்த கற்பகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்றிடும் அடியவா கருணையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    காலையும் மாலையும் துதிப்பேன் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கலைமகள் முக்தியே கஜபதியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    போகமே போகத்தில் போகரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    போதனை தந்திடும் புண்ணியா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    பூமகள் நாமகள் சொந்தமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
        
    பூமியைக் காத்திடும் பூதகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதியே ஜோதியே ஐங்கர போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஆடிடும் சிவனாரின் மைந்தரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அவலும் பொரியும் உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அன்னையின் ஆசையே அற்பதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செல்லமே செல்வமே பாலனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தில் நாதரின் சோதரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வெல்லமும் அப்பமும் உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதனை தீர்த்திடும் வித்தகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேலனின் அண்ணணே வேழமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேண்டிடும் அடியவர் விளக்கமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வெந்நிறம் கருநிறம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேள்வியைக் காத்திடும் வித்தகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதியும் ஜோதியும் நீயே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆகாயம் நீயேஇவ் உலகுக்கு போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆலாலம் உண்டவன் மைந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அகிலாண்ட நாயகி அங்கமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    உலகுக்கு உயிர் தந்த உத்தமா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஊணும் உயிரும் நீதானே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    உயர்நெறி என்றும் அருள்வாய் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதிடும் வேதத்தின் உள்பொருள் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓகமே யோகமே ஓங்காரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஒப்பில்லா மூர்த்தியே அப்பனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓமெனும் மெய்யே உட்பொருள் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதற்கு ஒப்பில்லா உத்தமா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கானமே ஞானமே கணநாதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கஷ்டங்கள் போக்கிடும் ஐங்கரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கருமையே கற்பக வினாயகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கருணையே கஷ்டத்தை நீக்குவாய் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சந்தமே சொந்தமே எந்தையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சந்ததம் பெருகிட வேண்டினோம் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சக்தியின் மார்பினில் தவழ்ந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சங்கடம் தீர்த்திடும் சாஸ்தாவே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதியே ஜோதியே நாதமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதிடும் வேதத்தின் ஞானமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    பேதமே இல்லா பிள்ளையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதாந்த செல்லவனே விக்னனே
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    எல்லா நலன்களும் தந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    எல்லையில் எங்களை காத்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    தொல்லை நீக்கிடும் தொந்தியோ போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    முந்திய பிள்ளையே மூஷிகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மரத்தடி பிள்ளையாய் நின்றவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மனமாசை போக்கும் மாமணியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மங்கள நூலை பூண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாசில்லா மணியே தேவனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அன்னையும் தந்தையும் ஆனவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதாரம் உலகுக்கும் நீதானே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாகாலன் தந்த மகனாரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆனையாய் நின்ற அற்புதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அய்யனே அப்பனே ஐங்கரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆறுதல் தந்திடும் அருணா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆகாயம் நீதானே அய்யாவே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஆங்கார ஓங்கார ரூபனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிங்கார செந்தூர செண்பகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சேந்தனே வேந்தனே வேதமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சொப்பன சுந்தர வீரனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சொந்தமே எந்தனின் அய்யனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்பக வினாயக கருணையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கண்ணே மணியே பிள்ளையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கானமே நாதமே கனநாதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கலைகளில் அழிவில்லா தெய்வமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மெய்யுருகும் அன்பரின் செல்வமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேன்மையும் செம்மையும் தந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேலான வாழ்வையும் தருவாயே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேகமே மோதகமே மோகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மஞ்சள் பிள்ளையே மங்களா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாணிக்க மாமணி மாதவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாயனே மாங்கனி உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாதுகள் இருபக்கம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தூரா எந்தன் செம்மையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தாமரை மேல் அமர்ந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செய்கின்ற பிழையை பொருத்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

     

  • October 11 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  சாந்தம்  
    ரிஷபம் –    பக்தி
    மிதுனம் –   முயற்சி
    கடகம் – பரிவு
    சிம்மம் –    துணிவு
    கன்னி –    மேன்மை  
    துலாம் –     பிரீதி
    விருச்சிகம் – கவலை
    தனுசு –     சிக்கல்
    மகரம் –    எதிர்ப்பு
    கும்பம் –     துயரம்
    மீனம் –      பொறுமை
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்

     

  • October 11 2023 Indrayanaal

    அக்டோபர் 11 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 24
    11-அக்-2023 புதன்
    பெண் குழந்தைகள் தினம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 7.3
    நட்சத்திரம் : மகம் கா 11.1
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 10 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –    ஆதாயம்
    மிதுனம் –   வெற்றி  
    கடகம் – சுகவீனம்
    சிம்மம் –    தாமதம்
    கன்னி –    பெருமை
    துலாம் –     தெளிவு
    விருச்சிகம் – பாராட்டு
    தனுசு –     இன்பம்
    மகரம் –    சினம்
    கும்பம் –     உற்சாகம்
    மீனம் –      குழப்பம்
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்

  • October 10 2023 Sarva Egadasi

    அக்டோபர் 10 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 23
    10-அக்-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி மா 5.0
    நட்சத்திரம் : ஆயில்யம் கா 8.24
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 09 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  இன்பம்
    ரிஷபம் –    பெருமை
    மிதுனம் –   மேன்மை
    கடகம் – நிறைவு
    சிம்மம் –    ஆதரவு
    கன்னி –    லாபம்
    துலாம் –     புகழ்
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு –     பக்தி
    மகரம் –    தடை
    கும்பம் –     வரவு
    மீனம் –      நட்பு
    சந்திராஷ்டமம்    – பூராடம்

  • October 09 2023 Indrayanaal

    அக்டோபர் 9 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 22
    09-அக்-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அதிதி
    திதி நேரம் : தசமி ம 2.59
    நட்சத்திரம் : ஆயில்யம் முழுவதும்0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Nagoor naganadha swamy koil raghu kedhu peyarchi

    பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் நாகநாத சுவாமி கோயில், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலமாகும்.  ராகு, கேது,காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் நாகூர் நாகநாத சுவாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான்  துலாம் ராசியில் இருந்து  கன்னி ராசிக்கு பிற்பகல் 3.40 மணிக்கு பிரவேசித்தனர். தொடர்ந்து ராகு பகவானுக்கு பரிகார சாந்தி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சியில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்து சுவாமியை வணங்கி சென்றனர்.

  • Kizhperumpallam kedhu peyarchi

    சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது ஆலயமாக வணங்கப்படும், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில்  மதியம் 03.41 க்கு கேது பெயர்ச்சி நடைபெற்றது.

    நவகிரகங்களில் சாயா கிரகங்கள்( நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படுபவை ராகு, கேதுக்களாகும். ராசிக்கட்டங்கள் 12 ல் மற்ற கிரகங்கள், நகரும் திசைக்கு எதிர் திசையில் இவை நகர்கின்றன. ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒன்றரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு கேதுக்கள், ராசி மண்டலத்தில் நேர் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஒரு ராசிக்கு 3.6.11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது சோதிட ரீதியான காரணமாகும்.

    ராகு – கேதுக்கள் தோஷ பரிகாரம் செய்யும் ஆலயமாகவும் வாசுகி பாம்பு வழிபாடு செய்த ஸ்தலம் மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி ஆலயத்தில்,செளந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார் இங்கு கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.  பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார். இவர் மனக்கோளாறு, தோல்வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர்.

    கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.இன்று மதியம் 3 மணி 41 வினாடிக்கு கேது துலாம் ராசியிலிருந்து ராசிக்கும், ராகு மேஷம் ராசியில் மீனம் ராசிக்கு  பெயர்ச்சி அடைகின்றார். இதனை முன்னிட்டு கீழபெரும்பள்ளம் கேது பகவான் கோவிலில்  சிறப்பு யாகம், அபிஷேகம்  நடைபெற்றது.இதில் திரெளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • October 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஊக்கம்
    ரிஷபம் –    நன்மை
    மிதுனம் –   பரிவு
    கடகம் – அசதி
    சிம்மம் –    ஏமாற்றம்
    கன்னி –    செலவு
    துலாம் –     தொல்லை
    விருச்சிகம் – களிப்பு
    தனுசு –     சினம்
    மகரம் –    எதிர்ப்பு
    கும்பம் –     தெளிவு
    மீனம் –      சிக்கல்
    சந்திராஷ்டமம்    – கேட்டை