இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – சிந்தனை
கடகம் – லாபம்
சிம்மம் – சுகம்
கன்னி – நன்மை
துலாம் – சோர்வு
விருச்சிகம் – சலனம்
தனுசு – வரவு
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – பாசம்
மீனம் – அசதி
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
October 04 2023 Rasipalan
-
October 04 2023 Indrayanaal
அக்டோபர் 4 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – புரட்டாசி 17
04-அக்-2023 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி கா 10.1
நட்சத்திரம் : ரோகிணி இ 11.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Sivashakthi vinayakar koil sangadahara chadurthi
ராசிபுரம் அடுத்த பட்டணம் சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வெகுவிமர்சியாக நடைபெற்றது: சங்கடஹர சதுர்த்தி விழா கோலாட்டம் கும்மி அடித்து பெண்கள் நடனம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ஓம் சிவ சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது. .
முன்னதாக விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் யான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பட்டணம் கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முன்னதாக மகளிர் அணியினரின் கோலாட்டமும், கும்மியாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு பக்தி பாடல்களுக்கு சிறப்பாக பெண்கள் கோலாட்டம் அடித்து சிறப்பாக நடனம் ஆடினர். தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் 108 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
-
Karur Sangadahara chadurthi
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
-
October 03 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – அசதி
மிதுனம் – அமைதி
கடகம் – பரிசு
சிம்மம் – புகழ்
கன்னி – சோதனை
துலாம் – பிரீதி
விருச்சிகம் – நலம்
தனுசு – நன்மை
மகரம் – மேன்மை
கும்பம் – களிப்பு
மீனம் – சோர்வு
சந்திராஷ்டமம் – அஸ்தம், சித்திரை -
October 03 2023 Karthigai
அக்டோபர் 3 – கார்த்திகை
சோபகிருது வருடம் – புரட்டாசி 16
கார்த்திகை
03-அக்-2023 செவ்வாய்
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 10.30
நட்சத்திரம் : கார்த்திகை இ 10.57
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
arupadai veedu mahayagam
சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அறுபடைவீடு மகாயாகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி முருக பெருமானின் ஆறுபடை வீடு மகா யாகம் நடைபெற்றது. முருக பெருமான் அம்பாளுடன் எழுந்தருள அவர்களுக்கு முன்பாக பிரமாண்ட 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மகா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
-
October 02 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – பணிவு
மிதுனம் – பெருமை
கடகம் – களிப்பு
சிம்மம் – அலைச்சல்
கன்னி – விருத்தி
துலாம் – நன்மை
விருச்சிகம் – பக்தி
தனுசு – சிரமம்
மகரம் – சினம்
கும்பம் – பேராசை
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம் -
October 02 2023 Gandhi Jayanthi
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
சோபகிருது வருடம் – புரட்டாசி 15
சங்கடஹர சதுர்த்தி
02-அக்-2023 திங்கள்
காந்தி ஜெயந்தி,
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 11.28
நட்சத்திரம் : பரணி இ 10.58
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Meenam Sakthi Online – Oct Monthly Prediction – 2023
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ), ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.
மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள்.
ரேவதி:
இந்த மாதம் வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – திங்கள் – வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA