Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • October 07 2023 Indrayanaal

    அக்டோபர் 07 – புரட்டாசி சனிக்கிழமை
    சோபகிருது வருடம் – புரட்டாசி 20
    07-அக்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி கா 11.43
    நட்சத்திரம் : புனர்பூசம் ந.இ 3.42
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 06 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    நற்செயல்
    மிதுனம் –   முயற்சி
    கடகம் – உயர்வு
    சிம்மம் –    நன்மை
    கன்னி –    தடை
    துலாம் –     சினம்
    விருச்சிகம் – வாழ்வு
    தனுசு –     தனம்
    மகரம் –    உதவி
    கும்பம் –     பக்தி
    மீனம் –      கவலை
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்

  • October 06 2023 Indrayanaal

    அக்டோபர் 6 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 19
    06-அக்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி கா 10.40
    நட்சத்திரம் : திருவாதிரை ந.இ 1.47
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Puratasi saturday kadan kodukkalama

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது.

    ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.

  • puratasi saturday viradham

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய பெருமாளை வேண்டி விரதம் இருப்பதால் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரஹம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசம் வைத்து வழிபாடு செய்தால் பலன்கள் இரட்டிப்பாகும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    சாளக்கிராம பூஜை வழக்கம் போல செய்து பின்னர் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு பெருமாளின் அஷ்டோத்திரம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கோவிந்த நாமாவளி மஹா லஷ்மியின் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, பவளமல்லி நந்தியாவட்டை தாமரை வில்வம் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    விரத பலன்கள்

    புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தாயார் மற்றும் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம்.  இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும்.  அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

    சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.  அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

    புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும். வரும் புரட்டாசி சனிக்கிழமை நாம் இந்த விரதத்தை மேற்கொண்டு; பெருமாள் மற்றும் குலதெய்வத்தின் அருளையும் சேர்த்து பெறுவோம்.

  • Namakkal Iyappa Swamy Koil sangabishegam

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை 4000 தீபங்கள் ஏற்றி கொண்டாடினர்.

    ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவரும் சனாதனத்திற்கு முதல் எதிர்ப்பாளருமாக இருந்த பக்தி மார்க்கமாக மக்களுக்கு சமூக அறிவியலை பரப்பிய வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் பிரார்த்தனை சபை சார்பாகவும், தனியார் கல்லூரியின் தமிழ் துறை, கலாச்சார பண்பாட்டு குழுவினரும் இணைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    அப்பொழுது 4000 விளக்குகளை ஏற்றி, விளக்கு யாகம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 4000 விளக்குகள் ஏற்றி வள்ளலாருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

  • October 05 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  இன்பம்
    ரிஷபம் –    பெருமை  
    மிதுனம் –   பாசம்
    கடகம் – பரிவு
    சிம்மம் –    உயர்வு
    கன்னி –    பிரமை
    துலாம் –     இரக்கம்  
    விருச்சிகம் – சினம்   
    தனுசு –     ஓய்வு
    மகரம் –    தனம்
    கும்பம் –     கீர்த்தி
    மீனம் –      நேர்மை
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • October 05 2023 Vallar pirandha dhinam

    அக்டோபர் 5 – வள்ளலார் பிறந்த தினம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 18
    05-அக்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 10.6
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ந.இ 12.22
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • balamurugan sirappu abishegam

    விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத கிருத்திகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமுருகனுக்கு எண்ணை காப்பு சாட்சி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். மேலும், பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத கிருத்திகை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     

  • Mandhai amman koil thiruvizha

    மூன்று நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத மந்தை அம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து உற்சாக வழிபாடு.

    தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரம் பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு மந்தை அம்மன் கோவின் புரட்டாசி மாத 3 நாள் திருவிழாவிற்கின சாட்டுதல் கடந்த மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கோவில் திருவிழாவின் முதல் நாளான இன்று கோவிலிலிரந்து மக்கள் திரளாக கீழே உள்ள தெவேந்திரபுரம் கிராமத்தில் இருந்து பெரியகுளம் பகுதியில் உள்ள வராக நதி ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு மலர்களால் மந்தை அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலையை எடுத்து பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளில் அரண்மனை தெரு புதிய பேருந்து நிலையம் வி ஆர் பி  தெரு உள்ளி தெருக்களின் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.    

    அலங்கரிக்கப்பட்ட மந்தை அம்மனின் வீதி உலாவின் போது 1000த்திற்கும்  மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து தங்கள் வீடுகளில் வைக்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு பெரியகுளம் வடகரை  பகுதியில் வீதி உலாவாக இரவு முழுவதும் சுற்றி வந்து பின்பு மந்தை அம்மன் கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரியையும்  வைத்து பெண்கள் வழிபட்டனர்.

    மந்தை அம்மன் கோவில் திருவிழாவில் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இரவில் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.