Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thirupathy chandra prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம்  நாளான இன்று இரவு   வெண்ணை கடைத்தெடுக்கும் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது நவநீதகிருஷ்ணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் காத்திருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை வேண்டினர்.

    சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

  • Soorya prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது திருநாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பா சுவாமி சூரிய நாராயணராக சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருமலை நான்கு மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

  • October 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பயம்  
    ரிஷபம்         –    அலைச்சல்
    மிதுனம்     –   உதவி
    கடகம்         –  பாராட்டு  
    சிம்மம்         –    அமைதி   
    கன்னி         –    சினம்
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     – பரிசு
    தனுசு         –     நலம்
    மகரம்         –    வெற்றி  
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –      பேராசை
    சந்திராஷ்டமம்    –  மிருகசீருஷம், திருவாதிரை

  • October 21 2023 Indrayanaal

    அக்டோபர் 21 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 4
    21-அக்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 7.41
    நட்சத்திரம் : பூராடம் மா 6.33
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீடம்,திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    ஆதரவு  
    மிதுனம்     –   வாழ்வு
    கடகம்         –  நிம்மதி  
    சிம்மம்         –    நன்மை  
    கன்னி         –    சுகவீனம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     – அச்சம்
    தனுசு         –     பயம்
    மகரம்         –    சலனம்  
    கும்பம்         –     அமைதி
    மீனம்         –      எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    –  ரோகிணி, மிருகசீருஷம்

  • October 20 2023 Subamuhurthanaal

    அக்டோபர் 20 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 3
    சுபமுகூர்த்த நாள்
    20-அக்-2023 வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 9.32
    நட்சத்திரம் : மூலம் இ 7.40
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Karur navarathiri Festival

    கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் மாரியம்மன் பல்வேறு காட்சி தருகிறார்.

    இந்நிலையில் நவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு ஆலயத்தில் பூசாரி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

    அதைத்தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

  • Thirupathy Mohini Avatharam

    திருமலையில் நடந்து வரும்  பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி வீதி உலா.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி  தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில்  நான்கு மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பல்லக்கும் உலா வந்தது. மந்திர பருவத மலையை தேவர்களும், அசுரர்களும் பார்கடலில் கடைந்த போது வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்குவதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அசுரர்களை மயங்க வைத்து விட்டு தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார். இதை விளக்கும் வகையில் மோகினி உற்சவம் நடக்கிறது.

    இந்த வீதிஉலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர அன்னமைய்யா சங்கீதங்கள்,பஜனை பாடல்கள் கோலாட்டம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மகாவிஷ்ணு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

  • Kalpa viruchiga vaganam thirupathi ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ராஜ மன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

    சொர்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தருவது கல்ப விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தனது பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சியாக நடந்த இந்த  சுவாமி வீதி உலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர்.

  • October 19 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆதரவு
    ரிஷபம்         –    ஊக்கம்
    மிதுனம்     –   ஆக்கம்
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –    தாமதம்
    கன்னி         –    பொறுமை
    துலாம்         –     நட்பு
    விருச்சிகம்     – வெற்றி
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    சாதனை
    கும்பம்         –     சாந்தம்
    மீனம்         –      ஈகை
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை, ரோகிணி