திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் பெரியசேஷ வாகனத்துடன் சிறப்பாக துவங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரதோஷம் சிறப்பாக துவங்கியது முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்தில் உபய தேவியர் ஆன ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார்.
மாடவீதியில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை மாலை இரண்டு வேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். பக்தர்களின் வசதிக்கேற்ப திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
Leave a Reply