Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை…

    நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி முன்னிட்டு  இன்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    பெருவுடையாருக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து மழை காரணமாக நந்தி மண்டபத்தில் நடக்கவிருந்த நாட்டிய நிகழ்ச்சி நடராஜர் மண்டபத்தில் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் குச்சிப்புடி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • பழனி முருகன் கோயிலில் வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி…

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரிவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி பத்து நாட்களாக விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோதைஈஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்றது.

    முன்னதாக மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது.  பழநி ஆதினம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் கோயில் நிர்வாகம் தேவதா மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் துர்க்கையாக ஆவாஹனமாகி வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்து வன்னிகாசூர வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.

    நவராத்திரி விழா நிகழ்ச்சியில் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி முருகன் கோயிலில் 13 ம் நூற்றாண்டில் இருந்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தீய குணம் கொண்ட  வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் தங்கள் மனதில்  உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக நம்புவதால் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

  • திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்…

    சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 39வது தேசமாக விளங்குகிறது  , குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அண்ணன் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு  திருப்பதி பெருமாளை சேவித்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்கில் கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனை அடுத்து வருகின்ற  14ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

  • தென்திருப்பதி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்…..

    கரூர் தென்திருப்பதி என அழைக்கப்படும் தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடமண சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் பலர் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு செல்வது வழக்கம்

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கடந்த நான்காம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது இதனை அடுத்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதனை அடுத்து தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை அடுத்து அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனை அடுத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் பெருமாளை கண்டு களித்து வழிபட்டு சென்றனர் மேலும் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை ஒட்டி கோவில்களில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மேலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அன்னதானத் துவங்கி வைத்தார்.

  • அக்டோபர் 11 – இன்றைய ராசிபலன்…

    4இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     – ஜெயம்
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    தெளிவு
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  சாதனை
    தனுசு         –    விவேகம்
    மகரம்         –   மேன்மை
    கும்பம்         –     மகிழ்ச்சி
    மீனம்         –    சாந்தம்
    சந்திராஷ்டமம்    –        ரோகிணி, மிருகசீருஷம்

  • அக்டோபர் 11 – ஆயுத பூஜை… பூஜை செய்ய உகந்த நேரம்

    அக்டோபர் 11 – ஆயுத பூஜை…  பூஜை செய்ய உகந்த நேரம்
    குரோதி வருடம் – புரட்டாசி 24
    அக்டோபர் 11- 2024
    வெள்ளி
    சரஸ்வதி,
    ஆயுத பூஜை
    நல்ல நேரம் காலை 10.00 – 10.30 மணி
    பெண் குழந்தைகள் தினம்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : நவமி
    திதி நேரம் :  அஷ்டமி கா 7.22
    நட்சத்திரம் :  பூராடம் அ.கா 2.09
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • அக்டோபர் 10 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  விருப்பம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – நிம்மதி
    கடகம்         –  சாந்தம்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பாசம்  
    துலாம்         –     அன்பு
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –    பாராட்டு  
    மகரம்         –   ஆர்வம்
    கும்பம்         –     உதவி  
    மீனம்         –    பக்தி  
    சந்திராஷ்டமம்    –        கார்த்திகை, ரோகிணி

  • அக்டோபர் 10 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 10 – இன்றைய நல்லநேரம்…  
    குரோதி வருடம் – புரட்டாசி 23
    அக்டோபர் 10 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி கா 8.06
    நட்சத்திரம் :  மூலம் அ.கா 2.06
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   ரோகிணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • திருவண்ணாமலை நவராத்திரி…லிங்க பூஜை அலங்காரத்தில் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி

    அருள்மிகு ஸ்ரீ  பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாகநடைபெற்றது.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா ஏழாம் நாள் இன்று லிங்க பூஜை அலங்காரத்தில் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முன்னதாக அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமிக்கு சிவாச்சாரியர்கள் பச்சரிசி மாவு, சீயக்காய் தூள், மஞ்சள் தூள், பால், பழம், தேன், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

    ஸ்ரீ பச்சையம்மன் மன்னர் சாமி திருக்கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டனர்.

  • நவராத்திரி ஸ்பெஷல்… 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்…

    நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்!

    வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்தினி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று உற்சவருக்கு,ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500, 200, 100, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

    சிவ வாத்தியங்கள் முழங்க உற்சவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தனலட்சுமி உற்சவரை வணங்கி சென்றனர்.