Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு…

    ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷத்துடன் அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..

    அதனைத்தொடர்ந்து மாலை கோவில் அடிவாரத்தின் கீழே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் கூடிய மங்கல தீபாரதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்கள் பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளை தெப்பக்குளத்திற்கு காட்டி முருகனை வழிபட்டு சென்றனர்..

     

  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 21-ஆம் தேதி பாலாலயம்…

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

    21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.

    12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

  • அக்டோபர் 19 – கார்த்திகை நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  இன்சொல்
    ரிஷபம்         – பரிவு  
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  தெளிவு
    சிம்மம்         –   அனுகூலம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  மகிழ்ச்சி  
    தனுசு         –    கோபம்  
    மகரம்         –   பெருமை  
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    வெற்றி  
    சந்திராஷ்டமம்    –        உத்திரம், ஹஸ்தம்

     

  • அக்டோபர் 19 – கார்த்திகை…

    அக்டோபர் 19 – கார்த்திகை…
    குரோதி வருடம் – ஐப்பசி 02
    அக்டோபர் 19 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை ம 1.07
    நட்சத்திரம் :  பரணி ம 2.35
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • அக்டோபர் 18 – ஐப்பசி 01 ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         – பெருமை  
    மிதுனம்     – இன்பம்
    கடகம்         –  உற்சாகம்
    சிம்மம்         –   நலம்
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     புகழ்  
    விருச்சிகம்     –  பாசம்
    தனுசு         –    சுபம்  
    மகரம்         –   போட்டி
    கும்பம்         –     விவேகம்
    மீனம்         –    மேன்மை
    சந்திராஷ்டமம்    –        பூரம், உத்திரம்

  • அக்டோபர் 18 – ஐப்பசி 01…

    அக்டோபர் 18 – ஐப்பசி 01…
    குரோதி வருடம் – ஐப்பசி 01
    அக்டோபர் 18 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  பிரதமை ம 3.16
    நட்சத்திரம் :  அசுவினி மா 4.01
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகைக்கு பௌர்ணமி சிறப்பு மஹா அபிஷேகம்…

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பதினாறு வகையான சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா  லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    4

  • பௌர்ணமி அன்று இதையெல்லாம் செய்தால் வாழ்க்கை மாறுவது நிச்சயம்!

    பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆன்மீகத்தில் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. அன்றைய தினம் இறை வழிபாடு செய்வதன் மூலமாக நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.

    திதி நித்யா தேவிகளில்  கடைசி நித்யாவாக கருதப்படும் ஸ்ரீ லலிதாம்பிகைக்குரிய திதி பௌர்ணமி. இந்த பௌர்ணமி திதியில் லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்போருக்கு வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பௌர்ணமியில் அம்மன் வழிபாடு!

    பௌர்ணமி அன்று மாலை வேளையில் திருவிளக்கு பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிப்பதோடு, வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

    பௌர்ணமி நன்னாளில் மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு அதீத சக்தி உண்டாகும். மேலும், புதிதாக மந்திர ஜெபம் தொடங்குபவர்களுக்கும் விரைவில் சித்தி உண்டாகும்.

    குலதெய்வ வழிபாடு

    பௌர்ணமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் தொலைதூரத்தில் உள்ள குலதெய்வ கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் இல்லங்களில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    பௌர்ணமி கிரிவலம்

    பௌர்ணமி திதியில் கிரிவலம் செய்தால்சிவபெருமானின் அருளினால்நேர்மறை ஆற்றல் உண்டாகும். இத்தனை சிறப்புடைய பௌர்ணமி நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக எந்த ஒரு காரியத்தையும் தூங்குவதற்கு ஏற்ற நாளாக இந்த பௌர்ணமி கருதப்படுகிறது.

  • தொங்கும் பழ தோட்டமாக மாறிய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்…

    3  டன் காய்கறிகள், பழங்களால் தொங்கும் தோட்டமாக மாறிய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில். புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் நிறைமணி காட்சி.

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறை மணி காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் கோவில் கருவறை மற்றும் முன் பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கட்டி பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது.  

    இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும்,  கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும்,  உலகில் மழை பெய்து செழிக்கவும்,  ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும்  இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது. சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

    மேலும் பக்தர்கள் நிறை மணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் படம் எடுத்து சென்றனர். நிறை மணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காய்கறி பழங்கள்  இருந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

  • அக்டோபர் 17 – பௌர்ணமி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     – நன்மை   
    கடகம்         –  உதவி
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    வாழ்வு
    துலாம்         –     கவனம்  
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –    பயம்
    மகரம்         –   புகழ்
    கும்பம்         –     லாபம்
    மீனம்         –    ஜெயம்  
    சந்திராஷ்டமம்    –        மகம், பூரம்