Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அக்டோபர் 06 – சதுர்த்தி விரதம்

    அக்டோபர் 06 – சதுர்த்தி விரதம்  
    குரோதி வருடம் – புரட்டாசி 20
    அக்டோபர் 06 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 6.04
    நட்சத்திரம் :  விசாகம் இ 11.03
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில்  சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் கர்நாடக, ஆந்திரா ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து  பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

  • அக்டோபர் 05 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சுகம்
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  ஆதாயம்
    சிம்மம்         –   தாமதம்
    கன்னி         –    விருப்பம்  
    துலாம்         –     விவேகம்    
    விருச்சிகம்     –  தோல்வி
    தனுசு         –    அலைச்சல்
    மகரம்         –   வெற்றி
    கும்பம்         –     நன்மை  
    மீனம்         –    பக்தி
    சந்திராஷ்டமம்    –        பூரட்டாதி, உத்திரட்டாதி

  • அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்

    அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – புரட்டாசி 19
    அக்டோபர் 05 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை அ.கா 2.33
    நட்சத்திரம் :  சுவாதி இ 9.06
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • வருடாந்திர பிரம்மோற்சவம்… பெரியசேஷ வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்…

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

    பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது.

     தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  • ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம்…

    ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த நிலையில் வழக்கத்தின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார். அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க மனைவி புவனேஸ்வரியுடன் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவில் வந்த முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி பட்டு வஸ்திரங்களை வெள்ளி தட்டில் வைத்து முதல்வர் தலை மேல் ஏற்றி வைத்தனர். அங்கிருந்து பட்டு வஸ்திரங்களுடன் கூடிய வெள்ளி தட்டை சுமந்து நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

     தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

  • அக்டோபர் 04 – சந்திர தரிசன நாள்

    அக்டோபர் 04 – சந்திர தரிசன நாள்
    குரோதி வருடம் – புரட்டாசி 18
    அக்டோபர் 04 – 2024
    வெள்ளி
    சந்திர தரிசனம்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை அ.கா 2.38
    நட்சத்திரம் :  சித்திரை மா 6.48
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • அக்டோபர் 04 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  தனம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – சுபம்
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   பரிசு  
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     ஏமாற்றம்   
    விருச்சிகம்     –  ஓய்வு
    தனுசு         –    நலம்
    மகரம்         –   அமைதி
    கும்பம்         –     சலனம்
    மீனம்         –    ஆக்கம்  
    சந்திராஷ்டமம்    –        சதயம், பூரட்டாதி

  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது….

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது.  ஒன்பது நாள் திருவிழாவை முன்னிட்டு வரும் அக்.11 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.12 ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி   மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  

    பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள வினாயகர், மூலவர், உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் ஆகியோருக்கும்,  பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது.  நவவீரர்கள், பரிவார மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  அக்.11 ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக். 12 ம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காப்புக்கட்டு விழாவில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு சிவ பெருமானை சூரிய ஒளியால் வழிபட்ட சூரிய பகவான்

    அனந்தலை கிராமத்தில் அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு சிவ பெருமானை சூரிய ஒளியால் வழிபட்ட சூரிய பகவான்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் அகத்திய முனிவரால் வழிபட்ட சிறப்புக்குரிய திருத்தலமாகும்.

    இங்கு ஆண்டுதோறும்  புரட்டாசி மாதத்தில் சிவனின் திருமேனியின் மீது சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் இதேபோல வார காலமாக காலை 6.30 மணி முதல் சூரியன் உதயமாகி 6.45 வரை மூலவர் சிவலிங்கத்தின் திருமேனி மீது படர்ந்து ஜொலித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    இதுபோன்ற சூரிய ஒளி கதிர்கள் வழிபடும் நேரத்தில் பக்தர்களுடைய திருமண தடை குழந்தை பாக்கியம் அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால் அனந்தலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த தகவலை அறிந்ததும் கோவிலுக்கு வருகை தந்து காத்திருந்து சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபட்ட நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்து சுவாமியை வழிபட்டனர் மேலும் சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வை முன்னிட்டு கருவறையில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மங்கல தீபராதனைகள் நடைபெற்றது..