செப்டம்பர் 29 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 13
செப்டம்பர் 29 – 2024
ஞாயிறு
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 7.15
நட்சத்திரம் : ஆயில்யம் கா 7.09
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
செப்டம்பர் 29 – இன்றைய நல்லநேரம்
-
செப்டம்பர் 28 – ஏகாதசி
செப்டம்பர் 28 – ஏகாதசி
குரோதி வருடம் – புரட்டாசி 12
செப்டம்பர் 28 – 2024
சனி
ஏகாதசி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி மா 6.09
நட்சத்திரம் : பூசம் அ.கா 5.29
யோகம் : மரண
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
செப்டம்பர் 28 – ஏகாதசி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – பக்தி
ரிஷபம் – பரிசு
மிதுனம் – பயம்
கடகம் – பகை
சிம்மம் – பரிவு
கன்னி – பாராட்டு
துலாம் – பிரீதி
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – வரவு
மகரம் – தடங்கல்
கும்பம் – வெற்றி
மீனம் – இன்சொல்
சந்திராஷ்டமம் – மூலம் -
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… கடைப்பிடிப்பது எப்படி?
அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.
ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.
ஏகாதசி விரதம்:
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.
ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

விரதத்தை எப்படி அனுசரிப்பது?
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. பார்த்தசாரதி பட்டாச்சார்யார்அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.
மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
-
செப்டம்பர் 27 – வெள்ளி
செப்டம்பர் 27 – வெள்ளி
குரோதி வருடம் – புரட்டாசி 11
செப்டம்பர் 27 – 2024
வெள்ளி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : 10.30 – 12.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி மா 5.34
நட்சத்திரம் : புனர்பூசம் அ.கா 4.32
யோகம் : மரண
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
செப்டம்பர் 27 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிம்மதி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – வரவு
கடகம் – ஏமாற்றம்
சிம்மம் – புகழ்
கன்னி – ஊக்கம்
துலாம் – உதவி
விருச்சிகம் – மறதி
தனுசு – பெருமை
மகரம் – ஆக்கம்
கும்பம் – அசதி
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – கேட்டை -
நாம மலை சிரிக்கும் பெருமாள்… வியர்க்கும் திருமுகம்!
சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.
ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள். இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.
மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும் பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்… நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள்.
நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!
-
செப்டம்பர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – செலவு
மிதுனம் – லாபம்
கடகம் – போட்டி
சிம்மம் – விவேகம்
கன்னி – தடங்கல்
துலாம் – அமைதி
விருச்சிகம் – பொறுமை
தனுசு – அன்பு
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – வெற்றி
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – அனுஷம் -
செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – புரட்டாசி 10
செப்டம்பர் 26 – 2024
வியாழன்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி மா 5.30
நட்சத்திரம் : திருவாதிரை அ.கா 4.11
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
செப்டம்பர் 25 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நலம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – பொறுமை
கடகம் – போட்டி
சிம்மம் – நட்பு
கன்னி – ஆதரவு
துலாம் – சலனம்
விருச்சிகம் – கவனம்
தனுசு – உதவி
மகரம் – தேர்ச்சி
கும்பம் – புகழ்
மீனம் – நற்செயல்
சந்திராஷ்டமம் – விசாகம்