செப்டம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 9
செப்டம்பர் 25 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி மா 5.55
நட்சத்திரம் : மிருகசீரிடம் அ.கா 4.12
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
செப்டம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
-
செப்டம்பர் 24 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – உயர்வு
ரிஷபம் – சினம்
மிதுனம் – அன்பு
கடகம் – போட்டி
சிம்மம் – ஜெயம்
கன்னி – நன்மை
துலாம் – பகை
விருச்சிகம் – இன்பம்
தனுசு – தீரம்
மகரம் – பெருமை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – எதிர்ப்பு
சந்திராஷ்டமம் – சுவாதி -
செப்டம்பர் 24 – இன்றைய நாள் எப்படி?
செப்டம்பர் 24 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – புரட்டாசி 8
செப்டம்பர் 24 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 6.49
நட்சத்திரம் : ரோகிணி அ.கா 4.40
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
புரட்டாசி மாதத்தில் செல்ல வேண்டிய பெருமாள் தலங்கள்!
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.
அரங்கநாத சுவாமி கோவில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.சாரங்கபாணி திருக்கோவில்
சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.
மூலவர் திருக்கோலம்
இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர். -
செப்டம்பர் 23 – இன்றைய நல்லநேரம்…
செப்டம்பர் 23 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – புரட்டாசி 7
செப்டம்பர் 23 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 8.09
நட்சத்திரம் : கார்த்திகை அ.கா 4.48
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
செப்டம்பர் 23 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – போட்டி
கடகம் – தனம்
சிம்மம் – வெற்றி
கன்னி – அமைதி
துலாம் – பயம்
விருச்சிகம் – தாமதம்
தனுசு – நலம்
மகரம் – கோபம்
கும்பம் – திறமை
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – சித்திரை -
செப்டம்பர் 22 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு…
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – திடம்
மிதுனம் – பகை
கடகம் – ஜெயம்
சிம்மம் – வரவு
கன்னி – மறதி
துலாம் – விவேகம்
விருச்சிகம் – வீம்பு
தனுசு – சுபம்
மகரம் – ஆதரவு
கும்பம் – சினம்
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் – அஸ்தம் -
செப்டம்பர் 22 – கார்த்திகை…
செப்டம்பர் 22 – கார்த்திகை…
குரோதி வருடம் – புரட்டாசி 6
செப்டம்பர் 22 – 2024
ஞாயிறு
கார்த்திகை
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி இ 9.49
நட்சத்திரம் : பரணி கா 6.42
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜித்த சூரியக்கதிர்கள்… பக்தர்கள் பரவசம்…
மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்- பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மூன்று துவாரங்கள் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் ஊடுருவி முத்தீஸ்வர பெருமானை தழுவி செல்லும் இந்த அரிய நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் நடைபெறும்.
முதலாவதாக மார்ச் மாதத்தில் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினமும் காலை 6:35 மணி முதல் 6:45 மணி வரை ஒரு முறையும் பிறகு 7:00 மணி முதல் 7 :10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 23ஆம் தேதி வரை சூரிய ஒளிபூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலை 6 :15 மணி முதல் 6:25 மணி வரை ஒரு முறையும். பிறகு 6:40 முதல் 6:50 மணி வரை என இரண்டாவது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம் ) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும் , மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது .
அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும் , செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது . சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இந்த நாட்கள் விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு , அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால் , இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
-
புரட்டாசி முதல் சனிக்கிழமை… மெட்டாலா ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்…
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசத்தை சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.