இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பக்தி
ரிஷபம் – தனம்
மிதுனம் – ஆர்வம்
கடனம் – நற்செய்தி
சிம்மம் – உதவி
கன்னி – மேன்மை
துலாம் – முன்னேற்றம்
விருச்சிகம் – பரிசு
தனுசு – பாராட்டு
மகரம் – வெற்றி
கும்பம் – உழைப்பு
மீனம் – களிப்பு
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
Author: லிங்கேஷ்
-
Rasi Palangal
-
March 3 Pradhosham
மார்ச் 3
விளம்பி வருடம் – மாசி 19
பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்
03-மார்-2019 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி ம 3.57
நட்சத்திரம் : உத்திராடம் கா 11.09
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Isha Yoga Mayam siva rathiri
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சத்குருவுடன் தியான லிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவாக அவர் மரக்கன்றுகளை நடுகிறார்.
தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி விழாவும் இடம் பெறுகிறது. விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
Thirupathy theporchavam
திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது.
வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது. திருமலையில் புதிதாக ரூ.97 கோடியில் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சேவை புரியும் 2 ஆயிரம் சேவகர்கள் ஓய்வு பெற வசதியாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில்களில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச் 5 மற்றும் 12-ந்தேதிகளில் ஊனமுற்றோர், முதியோர்கள், மார்ச் 6 மற்றும் 16-ந்தேதி 5 வயது குழந்தைகள் தங்களது தாய், தந்தையருடன் காலை 9 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் பக்தர்கள் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.82 கோடியே 77 லட்சமும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81 கோடியே 13 லட்சமும் வருமானமாக கிடைத்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
Thiruvannamalai Maha sivarathiri
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், 5 மணி முதல் பகல் 12 மணிவரை அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும்.
மாலை 6 மணியளவில், கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகிய இடங்களில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
-
Rameswaram Masi siva rathiri
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ராமநாத சாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நாளான மார்ச் 4ம் தேதி அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி – அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை தேரோட்டத்தையொட்டி அலங்கரித்த திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் ரதவீதியில் உலா வருவர். தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம் – அனுகூலம்
மிதுனம் – முயற்சி
கடனம் – துணிவு
சிம்மம் – நற்செயல்
கன்னி – மேன்மை
துலாம் – பக்தி
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – பேராசை
மகரம் – ஆதரவு
கும்பம் – லாபம்
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் : திருவாதிரை
-
March 2 Indraya Naal
மார்ச் 2
விளம்பி வருடம் – மாசி 18
02-மார்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : அதிதி
திதி நேரம் : ஏகாதசி ம 2.10
நட்சத்திரம் : பூராடம் கா 8.53
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Maha Siva Rathiri 2
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.
‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.
-
Thirupathy Dharshan Ticket
திருப்பதியில் திருமலையில் ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிக்க மார்ச் மாதத்துக்கு குலுக்கல் முறையில் நிலுவையில் டிக்கெட்டுகளின் பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதள மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த
ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளிக்கிறது.இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, கைபேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து சேவா டிக்கெட்டுகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டுகளை பெற்று மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
அதன்படி மார்ச் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.