Author: லிங்கேஷ்

  • Veetil Kolam poduvadhu

    நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும். 

    கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின்பு எப்படிக் கோலாகலமாக அழகுடன் இருக்கிறதோ அதுபோல தான் கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதீகம். 

    தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவைகள். இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது சிறப்பு. 

    அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினாலும் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். 

    சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. 

    வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் உண்டாகும். வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை பூஜை அறையில் அல்லது வீட்டிற்குள் போடலாம். 

    படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

    கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். அவ்வாறு போட்டால் ஏறு முகமான பலனை தரும். கோலத்தில் இடப்படும் காவி நிறம் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இதுபோன்று கோலத்தை வீட்டில் போட்டு வந்தால், சகல நன்மையும் கிடைக்கும்.
     

  • Angalamman Koil masi Mayanakollai

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு இன்று அங்காளம்மன் வல்லாளகண்டன்  வதம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

    மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்.

    இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.

  • Sabari malai Nadai thirappu

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. 

    சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மேலும் சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சபரி மலை கோவிலில் சிறப்புடன் நடைபெறும்.

     இந்த ஆண்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

    7.30 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடத்தப்படும்.

    13-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதப்பலி, உற்சவபலி போன்றவை நடைபெறும். 20-ந்தேதி இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 21-ந்தேதி காலை 11 மணி அளவில் பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட் டும் நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கப்படும். இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
     

  • March 6 – Vasthu Naal

    மார்ச் 6 – வாஸ்து நாள்
    விளம்பி வருடம் – மாசி 22
     அமாவாசை 
    கோவை கோணியம்மன் தேர்
    06-மார்-2019 புதன்  
    வாஸ்து நாள் (காலை 10.32 – 11.08)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    10.05
    நட்சத்திரம்    :    சதயம்    மா    6.42
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நற்செயல்
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – பரிசு 
    கடனம் – நன்மை 
    சிம்மம் – வெற்றி 
    கன்னி – ஆர்வம் 
    துலாம் –   முயற்சி
    விருச்சிகம் – அச்சம் 
    தனுசு – வரவு
    மகரம் –   நலம் 
    கும்பம் – பக்தி 
    மீனம் – பாராட்டு  
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்
     

  • Boomiswarar Koil Sivarathiri

    மரக்காணத்தில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற மகா சிவராத்திரி யில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கிரிஜாம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்தாண்டின் மகா சிவராத்திரி விழா இன்று தொடங்கியது. விழாவினை முன்னிட்டு  ஸ்ரீ பூமீஸ்வரர் க்கும், ஸ்ரீ  கிரிஜாம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    மேலும் இரவு 7 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 10 மணிக்கு  இரண்டாம் கால பூஜையும் நடைப்பெற்றன. இதில் 100 க்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிவாய நம ஓம் , சிவாய நமஹ,  நமச்சிவா என்ற பக்தி கோஷத்துடன் சிவபெருமானை வணங்கினர்.. 

    மேலும் நள்ளிரவு 1 மணிக்கு  மூன்றாம்  கால பூஜையும் அதிகாலை  4 மணிக்கு நான்காம் கால பூஜையும்  என  4 சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. பின்னர்  சிவனுக்கு  அபிஷேகங்கள் ஆராதனை நடத்தப்பட்டு காலை 7 மணிக்கு மகா தீபாரதனையும் நடைப்பெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சிவனை வணங்கினர் இதனையடுத்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
     

  • Ayya Vaikundar Avdhara dhinam

    ஆவடி  அய்யா அருள் பதி நிழல்தாங்களில் அய்யா வைகுண்டரரின் 1 87வது அவதார தினம் விழா    வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

    சென்னை ஆவடி, சேக்காடு பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட பெருமாளின் நிழல்தாங்களில் அய்யா வைகுண்டரின்  187வது விழா  வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி
    அய்யா வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனை தொடர்ந்து   ஊஞ்சல் சேவை வாகன சேவை  பால்குடம்  எடுத்துபெண்கள் வழிபட்டனர்.அய்யா     போன்ற நிகழ்ச்சிகள்  சிறப்புப்பாக நடைபெற்றது.

    பின்னர் அன்னதானமும் நடைபெற்றது.இதில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் அய்யா வாகன சேவையின் போது  பெண்கள் பரவசநிலை அடைந்தனர். விழாவை அய்யா வழி திரு விழா அவடி சேர்காடு அய்யா அருள் பதி நிழல்தாஙகலில்  தர்மகத்தா  பற்குணம் அய்யா    சீசர் சிகுமார் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
     

  • Coconut Sivan

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் நகரியில் 100 அடி உயர தேங்காய் சிவன். 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சமீபத்தில் உள்ள கீழப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டுள்ள 100 அடி உயர தேங்காய் சிவன் சிலை பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    கீழப்பாடு கிராமத்தில் உள்ள  திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி 100 அடி உயர சிவன் சிலையை பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைத்துள்ளார்.

    சுமார் ஒரு மாத காலம் உழைத்து கணேஷ்  ஏற்படுத்திய தேங்காய் சிவன் சிலையை பக்தர்கள் பார்த்து ரசித்து தரிசித்து செல்கின்றனர்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நஷ்டம் 
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – லாபம்    
    கடனம் – கடன்தீரல்
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி – கவலை
    துலாம் –   சுகம் 
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – வெற்றி 
    மகரம் –   போட்டி 
    கும்பம் – பொறுமை 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    – பூசம், ஆயில்யம்
     

  • Indraya Naal Eppadi

    மார்ச் 5
    விளம்பி வருடம் – மாசி 21
    ராமேஸ்வரத்தில் சிவன் தேர்
    05-மார்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    8.02
    நட்சத்திரம்    :    அவிட்டம்    மா    4.11
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்