இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – உழைப்பு
ரிஷபம் – தெளிவு
மிதுனம் – உதவி
கடனம் – இன்பம்
சிம்மம் – உறுதி
கன்னி – விருத்தி
துலாம் – பாசம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – களிப்பு
மகரம் – தாமதம்
கும்பம் – சுகம்
மீனம் – இன்சொல்
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி
Author: லிங்கேஷ்
-
Indraya Rasi Palangal
-
March 11 Indraya Nalla Neram
மார்ச் 11 – இன்றைய நல்ல நேரம்
விளம்பி வருடம் – மாசி 27
11-மார்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி இ 2.25
நட்சத்திரம் : பரணி இ 2.01
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Siddhargal Dyanam
யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம் நிலவுகிறது. சித்தர்களும் ரிஷிகளும் செய்யும் தியானம் நம்மால் செய்ய முடியுமா?
ஒருவருக்கு தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது.
நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டியதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும்.
மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.
மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது.
மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள் அடைய முடியும்.
-
Arpudha mandirangal
வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப் பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ
பொருள் :
ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே,அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே,உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
-
Murugan Viradhangal
வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும். கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம்:
வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.கந்த சஷ்டி விரதம் :
கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.குமார சஷ்டி விரதம் :
ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.அனந்த சுப்பிரமணிய பூஜை:
‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.
-
Rasi Palangal
இன்று இந்த ராசிக்கு உற்சாகம்….
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சிரத்தை
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – ஆர்வம்
கடனம் – அசதி
சிம்மம் – உற்சாகம்
கன்னி – சோர்வு
துலாம் – நலம்
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – நன்மை
மகரம் – இன்பம்
கும்பம் – அமைதி
மீனம் – பரிவு
சந்திராஷ்டமம் – அஸ்தம்,சித்திரை
-
March 10
மார்ச் 10
விளம்பி வருடம் – மாசி 26
10-மார்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி இ 2.32
நட்சத்திரம் : அசுவினி இ 1.28
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
India’s Rich Temples
பத்மநாப சுவாமி கோயில்
பத்மநாப சுவாமி கோயில் விஷ்ணுவை கடவுளாக கொண்ட கோயில் பத்மநாப சுவாமி கோயில் ( திருவனந்தபுரம் ) , கேரளா . இந்திய கோயில்களில் முதல் செல்வந்த கோயில் பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயிலில் 6 ரகசிய அரை உள்ளது. ரகசியம் நிறைந்த இந்த அறைகளில் எண்ணிலடங்கா புதையல்கள் கொட்டி கிடகின்றன, இந்த 6 ரகசிய அறைகளில் 4 இல் ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது , ஆனால் மீதமுள்ள 2 அறைகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் தங்கம் வைடூரியம் போன்ற எண்ணற்ற செல்வங்கள் உள்ளன.திருப்பதி பாலாஜி கோயில்

திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் வெங்கடேஷ்வரரின் பழமையான புனிதமான கோயில் ஆகும். இது இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். திருப்பதி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது "ஏழுமலையான் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 80,000 உள்ளது. பாலிவுட், விளையாட்டு மற்றும் வணிகத் தொழிற்துறையில் இருந்து பல புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வருகை தரும் போதும் பல கோடிகளை நன்கெடையாக கோவிலுக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடியை நன்கொடையாக வருகிறது.சாய் பாபா கோவில்

சாய் பாபா கோவில் இந்தியாவில் உள்ள மற்றொரு பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகும். சாய் பாபாவிற்கு தனி மதம் என்று எதுவும் இல்லாத காரணத்தால் அணைத்து மதத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வதை காணலாம். அவரது வாழ்க்கை முழுவதிலும் போதித்த ஒரே சொல் 'கடவுள் ஒன்று' என்று ,அதனை 'சப்பா மாலிக் ஏக் ஹாய்'.அக்கோவிலில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 350 கோடி ரூபாய் நன்கொடையாக அங்கு வரும் பக்தர்களால் அளிக்கப்படுகிறது.வைஷ்ணவ தேவி கோவில்

வைஷ்ணவ தேவி கோவில் காத்ரா, ஜம்மு காஷ்மீர் நகருக்கு அருகே உள்ளது. இக்கோவிலுக்கு இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள அம்மனின் ஆசிர்வாதத்தை பெற ஒன்றிணைகின்றனர். வட இந்தியாவில் உள்ள முக்கிய புனித தளங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சன்னதிக்கு வருகை தருகின்றனர், பணம் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக வருகின்ற வருமானத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ரூபாயாகும்.சித்தி விநாயகர் கோவில்

சித்தி விநாயகர் கோவில் விநாயக பெருமானுக்கான ஒரு வழிபாட்டு தளமாகும். இக்கோவிலில் விநாயகர் ஒரு சிறு அறையில்தான் காட்சி தருகின்றார். பிரபலமான கோயில்களில் ஒன்றாக மும்பை சித்திவிநாயக் கோயில் ஆகும். கோயிலின் பொதுவான பார்வையாளர்களின் பட்டியலில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களாகும் அடங்குவர்.உள்ளூர் பார்வையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு செல்கின்றனர். கணேஷ் மீது அணியப்படும் கிரிடமானது சுமார் 3.7 கிலோ தங்கத்தால் ஆனது இதனை கொல்கத்தாவில் உள்ள வணிக வியாபாரி ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். கோயிலின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 48 கோடி ரூபாயும் நிலையான வைப்பு நிதி ரூ. 125 கோடியாகும்.பொற்கோவில்

பொற்கோவில் உலகின் மிக முக்கியமான சீக்கிய யாத்ரீக ஸ்தலம் ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப், அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள பொற் கோவில் குருத்வாரா என அழைக்கப்படுகிறது. இதன் பிரதான கோவில் கட்டிட சுவர்களில் மரத்தாலான பேனல்கள் மற்றும் விரிவான தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.'ஆதி கிரந்த்' (குரு கிரந்த் சாஹிப்) தாங்கி நிற்கும் அடித்தளம் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களால் நிரம்பியுள்ளது. குரு கிரந்த் சாஹிப்பின் சுற்றளவானது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் இங்கு சுமார் 35,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிகின்றனர். இக்கோவிலானது வடகிழக்கு திசையிலமைந்த மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோயில்களுல் ஒன்று.சோம்நாத் கோவில்

சோம்நாத் கோயிலின் சொத்துக்கள் ஒரு புதிராகவே இருந்தாலும், மிகவும் புகழ் பெட்ர பணக்கார கோவிலில் ஒன்றாகவே திகழ்கின்றது, நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. 'சோம்நாத்' என்ற பெயர், 'சந்திர கடவுளின் காப்பாளர்' என்று பொருள்படும், சிவபெருமானைக் குறிக்கும் இதன் கற்ப கிரகமானது முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.1,00,000 முதல் 5,00,000 பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். சோம்நாத் அறக்கட்டளையின் நிலசொத்துக்கள் ரூ .1,639.14 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதுவும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.2012 ஆம் ஆண்டில், சூரத் மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு வணிகர்கள், கோயிலுக்கு சுமார் 36 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோயிலாகும்,இக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதில் பார்வதி தேவி காட்சி புரிந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.இந்த கோவில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெள்ளிக்கிழமை 25,000 பேர் இங்கு கூடுகின்றனர். கோயிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மிக முக்கியமான திருவிழா "மீனாட்சி திருக்கல்யாணம் "(மீனாட்சி தெய்வீக திருமணம்) ஆகும்.இது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மூன்றாவது பணக்கார கோவில்களில் ஒன்றாகும். வருடந்த மற்றும் மே மாதத்தில் 10 ஆவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவிற்கு சுமார் 1மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி 60 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வருகின்றது.இந்த கோவில் இரு தங்க விமனங்களும், 33,000 சிலைகளும் இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பை அளிக்கிறது.காசி விஸ்வநாத கோவில்

காசி விஸ்வநாத கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது இது வாரனாசியில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மேற்கு கரையோரம் புனித நதியான கங்கை பாய்கிறது, இங்கமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் விஸ்வநாதர் மிகவும் சத்தி வாய்ந்த கடவுளாக காட்சி தருகின்றார். கோயிலின் குறிப்பிடத்தக்க தூண்கள் மற்றும் கோபுரங்கள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.அமர்நாத் கோயில்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தென் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சிவனின் புனித பனி லிங்கத்தை வழிபட மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆடம்பரமான தூண்கள் மற்றும் கோபுரங்களும் இல்லாமலே மக்களின் மனதை தன்வசப்படுத்திய ஒரு தனிசிறப்பு வாய்ந்த யாத்ரீக தளமாகும் .ஒவ்வொரு வருடமும் ஐீலை மற்றும் ஆகஷ்ட் மாதங்களில் மக்கள் இந்த புனித பயணத்தை தொடங்குகின்றனர்.
-
Rasi Palangal
இன்று இந்த ராசிக்கு மறதி அதிகம்….
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – களிப்பு
ரிஷபம் – லாபம்
மிதுனம் – பயம்
கடனம் – நன்மை
சிம்மம் – பகை
கன்னி – தேர்ச்சி
துலாம் – நலம்
விருச்சிகம் – ஆர்வம்
தனுசு – ஆதாயம்
மகரம் – மறதி
கும்பம் – பணிவு
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம் -
March 9 Indraya Naal Eppadi
மார்ச் 9 – இன்றைய நாள் எப்படி ,,,,
09-மார்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை இ 2.03
நட்சத்திரம் : ரேவதி இ 12.27
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்