Author: லிங்கேஷ்

  • Endha Kizhamaigalil Edndha Deivam

    திங்கள் : 
    திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகும். ஆகவே திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது. அதோடு நீலகண்டனுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம். 

    செவ்வாய் : 
    செவ்வாய் கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும். மேலும் முருக பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும். 

    புதன் : 
    புதன் கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும். எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.

    வியாழன் :
    வியாழன் கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது. 

    வெள்ளி : 
    வெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது. 

    சனி :
    நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. ஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது. 

    ஞாயிறு : 
    நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும். 
     

  • Sai Baba Viradhaam Irundhal

     எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். 

    எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். 

    முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். 

    சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • Sri Ragavendrar Manthiram

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். 

    அப்படி வாழ்ந்த ஒரு மகான் “ஸ்ரீ ராகவேந்திரர்” அவரை வழிபடும் மந்திரம் இது. 

    ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்…. 

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே 
    ஸச் சித்தானந்தாய தீமஹி 
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத் 

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். 

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். 

    ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். 

  • Thiruppavai Padal 26

    மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

    விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
     

  • January 10 – Rasi Palangal

    ஜனவரி 10
    விளம்பி வருடம் – மார்கழி 26
    10-ஜன-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    3.39
    நட்சத்திரம்    :    சதயம்    அ.கா    4.14
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உயர்வு
    ரிஷபம் – தனம் 
    மிதுனம் – பாசம் 
    கடனம் –  உதவி
    சிம்மம் – சுகம்  
    கன்னி – வரவு
    துலாம் –  முயற்சி
    விருச்சிகம் – கீர்த்தி
    தனுசு – உழைப்பு
    மகரம் – அலைச்சல் 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – வெற்றி

  • Thirumalai Erum podhu Solla vendiya mandiram

    திருமலை திருப்பதி செல்வோர், மலை ஏறும் போது அந்த வேங்கடவனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லிக் கோண்டே  மலையேறினால் நம் தீராத வினையெல்லாம் தீர்த்திடுவான் திருவேங்கடத்தான். 

    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித

    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ

    தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம

    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ

    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

    பொருள் :
    பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.

  • Mananoi Theerkum Thirumurugan Poondi

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. 
    கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது.
    இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.

  • Vinayakarai Vaithu vananga Vendiya Disai

    அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.

    விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.

    விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.

    தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.

    உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.

    வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.
     

  • Thiruppavai Padal 25

    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

    விளக்கம்:

    பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • January 9 – Rasi Palangal

    ஜனவரி 9
    விளம்பி வருடம் – மார்கழி 25
    09-ஜன-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    ம    1.35
    நட்சத்திரம்    :    அவிட்டம்    இ    1.50
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   தேர்ச்சி
    ரிஷபம் – நிறைவு
    மிதுனம் – உழைப்பு
    கடனம் –  கவனம் 
    சிம்மம் – நன்மை 
    கன்னி – பரிசு
    துலாம் –  நலம் 
    விருச்சிகம் – போட்டி
    தனுசு – முயற்சி
    மகரம் – பாராட்டு 
    கும்பம் – புகழ்
    மீனம் – மேன்மை