Author: லிங்கேஷ்

  • TRIPLICANE PARTHASARADHY

    பார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்தது இக்கோவில்.  
     
    இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
     
    அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார்.  இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.
     
    இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.
     
    இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுறுத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.
     
    இக்கோயிலில் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் மற்றும் புராண கதை சொல்லுதல் நடைபெறுகின்றன.
     

  • Yama Bayam Neekum Siva Mandiram

    சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.

    சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.

    “ வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமசிவாயவே “ என திருஞான சம்பந்தரும்,

    “ கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும்

    நற்றுணை யாவது நமசிவாயவே “ என திருநாவுக்கரசரும்,

    “ நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும்

    நா நமசிவாயவே” என சுந்தரரும் கூறியுள்ளனர்.

    மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.

    ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்

    மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே

    என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உதவி 
    ரிஷபம் – பக்தி 
    மிதுனம் – உயர்வு 
    கடனம் – சினம்  
    சிம்மம் – இன்பம் 
    கன்னி – தனம்  
    துலாம் –   நிறைவு
    விருச்சிகம் – பரிசு
    தனுசு – ஆர்வம் 
    மகரம் –   முயற்சி 
    கும்பம் – குழப்பம் 
    மீனம் – மேன்மை    
    சந்திராஷ்டமம்    – பூரம், உத்திராடம்
     

  • March 8 Suba muhurtha naal

    விளம்பி வருடம் – மாசி 24
    பெண்கள் தினம்
    08-மார்-2019 வெள்ளி  ஜமாதுல் ஆகிர்30
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    1.09
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    இ    10.55
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    : பூரம், உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Murugan Gayathri Mandhiram

    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

    வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்
    ஓம் தத் புருசாய வித்மஹே 
    மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

     
    இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. 
     

  • Thirupathy Arjitha sevaigal Cancel

    திருப்பதி கோயிலில் 16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.  தெப்ப உற்சவத்தை அடுத்து 16 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு மார்ச் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 

    தெப்ப உற்சவத்தையொட்டி தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான 16ம் தேதி இரவு 7 மணிக்கு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சுவாமியும், இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் தெப்பலில் மூன்று சுற்றுகள் வலம் வர உள்ளனர். கடைசி மூன்று நாட்கள் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகின்றனர். 

    இதில் மூன்றாவது நாள் மூன்று சுற்றுகளும், நான்காவது நாள் ஐந்து சுற்றுகளும், ஐந்தாவது நாள் ஏழு சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தெப்ப உற்சவத்தையொட்டி 16 மற்றும் 17ம் தேதி வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் ஆர்ஜித சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • Mahotsava festival

    தாராசுரம் திருக்குளம் மேல்கரையில் உள்ள ஆதி தீமிதி திரௌபதி அம்மன் கோயிலில் மகோத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இது இந்த கோயிலில் நடைபெறும்  178வது ஆண்டு மகோத்சவ விழா ஆகும். கடந்த 3 ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா, 4ஆம் தேதி இரவு, ஆதி திரௌபதி அம்மனை ஸ்தாபிதம் செய்து சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. 5ஆம்தேதி காலை தாய் வீட்டு சீர்வரிசையும், 10 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. 

    முக்கிய விழாவான நேற்று 12 மணிக்கு மகாபாரத உபன்யாசமும், மாலை 4 மணிக்கு அம்பாள் வீரசபதம் நிறைவேற்றி, அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதியூலா வந்து தீமிதி வைபவமும், இரவு அம்பாள் வீதியூலா காட்சி நடைபெற்றது. 

    இன்று மதியம் கஞ்சிவார்த்தலும், மாலையில் புஷ்ப அலங்காரமும், ஊஞ்சல் உற்சவமும், நாளை தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று விழா நிறைவடைந்தது. 

    விழாவிற்கான ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோயில் பக்தர்கள், தர்ம கர்த்தாக்கள் செய்து வருகின்றனர்.

  • Rasi Palanagal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   சுபம் 
    ரிஷபம் – பிரயாசை 
    மிதுனம் – முயற்சி
    கடனம் – ஆதாயம் 
    சிம்மம் – தொல்லை
    கன்னி – விவேகம் 
    துலாம் –   கவலை
    விருச்சிகம் – ஆர்வம்  
    தனுசு – போட்டி
    மகரம் –   அனுகூலம் 
    கும்பம் – நலம் 
    மீனம் – பொறுமை   
    சந்திராஷ்டமம்    – மகம்,பூரம்
     

  • Indraya Naal Eppadi

    மார்ச் 7
    விளம்பி வருடம் – மாசி 23
    07-மார்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    11.46
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    இ    8.59
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Angallamman koil mayana kollai

    மாசி அம்மாவாசையான இன்று  பிரசித்திப்பெற்ற   மயான கொள்ளையில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து கொண்டு ஆடு, கோழிகளை வாயில் கடித்தப்படி ஆக்ரோஷமாக  ஆடியப்படி மயனம் நோக்கி  வந்த்து  பொதுமக்களிடையே  பரவசம் ஏற்படுத்தியது. நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்..