மார்ச் 15 – காரடையான் நோன்பு
விளம்பி வருடம் – பங்குனி 1
காரடையான் நோன்பு
15-மார்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சூன்ய
திதி நேரம் : நவமி இ 9.20
நட்சத்திரம் : திருவாதிரை இ 11.44
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Author: லிங்கேஷ்
-
March 15 Karadayan Nonbu
-
Karadyan nonbin palangal
காரடையான் நோன்பு முறையை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும், அன்னோன்னியமும் அதிகரிக்கும்.
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்கை பெண்களுக்கு கிடைக்கும்.
காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, திடநம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மனிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள்.
அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று வசந்தமாக்குவோம்
-
Karadayan nonbu merkollum murai
இவ்விரத நாளன்று பெண்கள் நித்திய கடன்கள் முடித்து நீராடி பூஜை அறையை அலங்கரிக்கின்றனர்.
காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றர்.
மஞ்சள் அல்லது பூக்களைக் கட்டிய நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைக்கின்றனர்.
இலையில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்த உப்பு மற்றும் வெல்ல அடைகளையும், உருகாத வெண்ணையையும் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.
வழிபாட்டின் போது ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் நீ எனக்கு மாங்கல்யப் பாக்கியம் தா’ என வேண்டிக் கொண்டு காமாட்சி அம்மன் படத்திற்கு ஒரு நோன்பு கயிற்றினை சாற்றிவிட்டு பெண்கள் தங்கள் கழுத்தில் நோன்புக் கயிற்றினைக் கட்டிக் கொள்கின்றனர்.
வழிபாட்டின் முடிவில் அடைகளை பிரசாதமாக உண்டு வழிபாட்டினை நிறைவு செய்கின்றனர்.
-
Savithri viradham
காரடையான் நோன்பு…. இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இவ்விரதம் மேற்கொள்வதால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிப்பதோடு அவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை அம்மன் வழங்குவதாக் கருதுகின்றனர்.
வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் இந்த விரதம் பின்பற்றப்படுகிறது.
இவ்விரத வழிபாட்டின் போது கார்காலத்தில் விளைந்த நெல்லினைக் கொண்டு அடை செய்து சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வழிபாட்டில் கவுரி ஆகிய காமாட்சி அம்மனை வைத்து வழிபடுவதால் கவுரி விரதம், காமாட்சி விரதம் என்றும், சாவித்திரி வழிபட்டதால் சாவித்திரி விரதம் என்றும் இவ்விரத முறை அழைக்கப்படுகிறது.
இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பெருமை
மிதுனம் – நட்பு
கடனம் – லாபம்
சிம்மம் – புகழ்
கன்னி – தெளிவு
துலாம் – ஈகை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – உயர்வு
மகரம் – வெற்றி
கும்பம் – திடம்
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை -
March 14 Indraya Nalla Neram
மார்ச் 14 …. இன்றைய நல்ல நேரம்
விளம்பி வருடம் – மாசி 30
14-மார்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 11.10
நட்சத்திரம் : மிருகசீரிடம் இ 12.47
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Ammavaru App
திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான படங்கள் குறித்து பக்தர்கள் விளக்கம் பெறுவதற்காக "பத்மாவதி அம்மவாரு ஆப்' என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள தோட்டத்தில், தாயாரின் அவதாரம் குறித்த விளக்கப்படங்கள் தற்போது வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின்மூலம், தாயாரின் அவதாரம் குறித்த புராணத் தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்தப் படங்கள், விரைவில் செயலி வடிவத்துக்கு மாறும் எனத் தெரிவித்தார்.
இந்தச் செயலிக்கு, `பத்மாவதி அம்மவாரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியில், தாயாரின் புகைப்படங்களைத் தொட்டால், அந்தப் படங்கள்குறித்த தகவல்களை அறியலாம். மேலும், கோயில் மண்டபத்திலுள்ள சிலைகள்குறித்த விவரங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். `பத்மாவதி அம்மவாரு' செயலி, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோயில் மண்டபங்களில் உள்ள சிலைகள் குறித்த தகவல்களையும் இந்தச் செயலியில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை தேவஸ்தானம் விரைவில் அறிமுகம் செய்யும் என்றார் அவர்.
-
Pateeswaram Durgai amman
ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள் தான் துர்கை அம்மன். பட்டீஸ்வரத்தில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம்.
முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.
களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள். ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.

தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி. இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர். இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்து வருகிறாள்.
ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள். எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.
பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பகை
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – வரவு
கடனம் – மகிழ்ச்சி
சிம்மம் – திடம்
கன்னி – அமைதி
துலாம் – களிப்பு
விருச்சிகம் – நஷ்டம்
தனுசு – பாராட்டு
மகரம் – அலைச்சல்
கும்பம் – ஆதரவு
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம் -
March 13 – Suba muhurthanaal
மார்ச் 13 – சுபமுகூர்த்த நாள்
விளம்பி வருடம் – மாசி 29
13-மார்-2019 புதன் ரஜப்5
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 12.38
நட்சத்திரம் : ரோகிணி இ 1.34
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்