Author: லிங்கேஷ்

  • Dhavanthri peedaathi abishegam

    வாலாஜா ஸ்ரீ தன்வந்தரி ஆரோக்கிய  பீடத்தில் உலக நன்மை வேண்டி  1008 கலச அபிஷேகளுடன் 1000 நாதஸ்வர மேலதாலங்களுடன்    16 தெய்வங்களுக்கு திருகல்யானம்  உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் பிரோஹித் கலந்துகொண்டு வழிப்பாடு செய்தார். 
     
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி யாக பீடத்தில் மஹோத்சவம் 2019 என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழித்தோங்க பருவகால மழையை வேண்டியும் 16 தெய்வங்களுக்கு ஒரே  முகூர்த்தத்தில் ஒரே மேடையில் திருக்கல்யாணமும் மற்றும் தன்வந்திரி யாக பீடத்தின் பதினைந்தாம் ஆண்டு கல்வெட்டு திறப்பு விழாவும் மேலும் தன்வந்திரியாக பீடத்தை 58வது ஜெயந்தி விழா என்பன உள்ளிட்ட முப்பெரும் விழா கலந்த நிகழ்ச்சி வெகுவிமற்சியாக நடைபெற்று வருகிறது.

     இதில்  1008 கலச அபிஷேகம் செய்தும் ஆயிரம் நாதஸ்வர இசையும் மேலதாளங்கல் முழங்க 16 தெய்வங்களுக்கு திருமண நிகழ்ச்சியானது துவங்கியது மேலும் இந்த ஐந்தாம் ஆண்டு தெய்வங்களின் திருமண நிகழ்ச்சியின் நினைவையொட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டு  திறக்கப்பட்டது இதில் தமிழக ஆளுனர். பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கல்வெட்டினை திறந்து வைத்தார் மேலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமிகளை வழிபட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமிய கலைஞர்கள் ஆனா நாதஸ்வர கலைஞர்களை பாராட்டி சான்றுகள் வழங்கினர் .பின்னர் பேசிய ஆளுனர் . மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி  2016 ம் ஆண்டு யோக ,சித்தா ,ஆகிய துறைகளை மக்கள் நன்மைக்கு துவைக்கி வைத்தார் .என பேசினார் .இவ் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   இன்சொல்
    ரிஷபம் – பரிவு
    மிதுனம் – முயற்சி
    கடனம் – தெளிவு
    சிம்மம் – அனுகூலம் 
    கன்னி – சுகம் 
    துலாம் –   உதவி
    விருச்சிகம் – மகிழ்ச்சி
    தனுசு – கோபம் 
    மகரம் –   பெருமை 
    கும்பம் – சுபம் 
    மீனம் – வெற்றி
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்
     

  • March 17 subamugurthanaal

    மார்ச் 17  –  வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – பங்குனி 3
    17-மார்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    5.02
    நட்சத்திரம்    :    பூசம்    இ    8.43
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Kogazhi Anda gurumanidhan

    கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க ….
    இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற  வரியாகும். இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப் பட்டருக்கிறது.

    கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும். நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது. சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட ஒரு  சொல் உண்டு . 

    இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர். எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள். 

    சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையான சகஸ்ராரம் என்று உட்ப்பொருள் கூறப் படுகிறது . அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் . குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும் முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column எனும் முதுகு எலும்பே ஆகும் .

    தேகத்தின் அரசன் ஆன்மா …
    எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன் 
    கோ –அரசன் , கழி —கோல் குருமணி —ஒளிபடைத்தவன் 
    எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் , இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது. இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும் இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது. தகுந்த ஞான குரு தந்து தான் இதைப் பெறவேண்டும் .

    குரு தரும் அனுபவ முறை இந்த ஞானம் குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த ஆற்றலை மேலே கொண்டு வரவேண்டும். இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் . இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !

    இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள் இருக்கின்றன . மனிதன்அஞ்ஞானியாக இருக்கும் போது,அறியாமையில் வாழும் நிலையில் இருக்கும் போது இடகலை பிங்கலை எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடமாட்டம் நடை பெறுகிறது .

    அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி , சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது. அப்போது தான் அந்த நாடி திறக்கிறது , பாதையும் திறக்கப் படுகிறது அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும். ஈசரை மாணிக்க வாசகர் ஆருரன் என்கிறார் . திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் . 

    மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து திருப்பெருந்துறைக்கு அதாவது ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி . இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன்.

    இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு. இதன் பெருமையை திரு மூலர்
    "கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி 
    வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".
    என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33 எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து நிற்க செய்கிறது. இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள் யாழ் எனும் இசைக் கருவியை அமைத்தனர் . அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு பரிச்சயம் ஆகி இருந்தது .

     

    ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக தனது முதுகு எலும்பை தந்ததாக புராண கதை இருந்தது. இந்தக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான கதையாக இருந்திருக்கிறது . 

    எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக் குறிப்பிட்கிறார். எனவே இந்த முதுகுத்தண்டைப் பற்றிய அறிவும் நிலைப்பெற்று இருந்திருக்கிறது. மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில் இருந்தது. என்பதற்கு ஆதாரமாக ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள் அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும் அக்க மாலை 33 எண். தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி. இந்த 33 என்ற எண்ணும் குறிப்பிடத்தக்க முறையில் புழக்கத்தில் இருந்திருக்கிறது . 

    எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் . ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன . கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது உட்கார்ந்து தான் போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உடகார்ந்து போவதையே குறிப்பதாக எண்ணுகிறேன் .

    எனவே கோகழியாண்ட குருமணி தன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக கொள்ளலாம் .

    கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

    – அண்ணாமலை சுகுமாரன்

  • Aryapadamal kathu kidakkum Siddhargal

    சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச்  சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான்  இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

    சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்பன்னர்கள்.சித்தர்கள் என்போர் வெறும் மருத்துவர்கள் மட்டுமல்லர். வெற்று வேதாந்தம் பேசும் வறட்டுப் புலவர்களும் அல்லர். வெந்ததைத் தின்று விதி வந்ததும் போகச் சொல்லும் கர்மவினையைப் போதிக்கும் வைதீக சமயக் கும்பலைச் சேர்ந்தவரும் அல்லர்.

    அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை, மண்ணிலேயே விண்ணைக் காணச் சொன்னவர்கள். தற்போது கிடைத்த உடலைக் கொண்டே, அதைக் கற்பங்கள் பல உண்டு, பல காலம் வாழும் வழி அறிந்து, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள். கர்ம வினையை வாழும் போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள். பிறத்தலின் பயன் முடியும் வரை இங்கேயே வாழக் கற்றவர்கள். 

    பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே! விரும்பும் வரை இறப்பைத் தள்ளிவைக்கும் வித்தை கற்றவர்கள். இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் காண்கின்ற எல்லையற்ற பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை உணர்ந்தவர்கள். சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். 

    எந்த மதத்தில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள். சொல்லப் போனால் மனித குலத்தில் யார ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள்?
    இறப்பு இல்லாத மனிதர்கள் யார்?
    மூப்பு இல்லாத மனிதர்கள் யார்?
    நோய் இல்லாத மனிதர்கள் யார்?

    புத்தர் இறப்பு, மூப்பு, நோய் முதலிய மனிதனின் துக்கங்களைப்  பார்த்துத்தானே அதற்கு வழி காணத் துறவு பூண்டார் என்று கதைகள் கூறுகின்றன. ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்தத் துயரங்களுக்கு விடிவு வந்ததா? யாராவது, எந்த மதமாவது, இது செய்தால் இறப்பு, மூப்பு, நோய் வராது என்று அறுதி இட்டுக் கூறி, வழியைக் கூறி இருக்கிறார்களா?

    ஆனால் சித்தர்கள் அனைவரும் மானுடத்தின் இத்தகைய ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறார்கள். அதுவும் ஒரே மாதிரி கூறியிருக்கிறார்கள். மரணமில்லாப் பெருவாழ்வே, அவர்கள் லட்சியம். வாழும் இதே உடலில் இருந்தே முக்தி பெறும், விடுதலை பெறும் ஆர்வம் கொண்டவர்கள்.

    வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் விடையைக் கண்டவர்கள். அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ, உண்மைகளோ எதுவும் இல்லை எனலாம். ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர், மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர். அவர்களின் அறிவுப் பாதையில் வெறும் வேதாந்த, சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இல்லை. கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள். 

    வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள். வினையைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள்.தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர். தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள் .இனி அவர்கள் சிந்தையில் மலர்ந்த அறிவியல் உண்மைகள் சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

    தொடரும் …..

    இந்தக்கட்டுரை 2011 இல் வல்லமை மின் இதழில் வெளிவந்தது. நண்பர்களின் மீள் வாசிப்பிற்க்காக இங்கு பதிகிறேன்.

    நன்றி திரு கமலக்கண்ணன் அவர்களின் 
    ஞானக் கனல் 

    -அண்ணாமலை சுகுமாரன் 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பகை 
    ரிஷபம் – களிப்பு   
    மிதுனம் – பரிவு
    கடனம் – தனம்  
    சிம்மம் – உறுதி 
    கன்னி – உதவி 
    துலாம் –   சினம் 
    விருச்சிகம் – பகை
    தனுசு – ஆக்கம் 
    மகரம் –   தோல்வி 
    கும்பம் – பெருமை
    மீனம் – அச்சம்
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • March 16 Indraya Nalla neram

    விளம்பி வருடம் – பங்குனி 2
    16-மார்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.15
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    இ    10.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Dhyanam Seivadhal Nanmaigal

    மூளையின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகின்றது

    மன அழுத்தம் மட்டுமன்றி இரத்த அழுத்தம் குறைகின்றது.

    பல்வேறுபட்ட நோய்கள் நீங்குகின்றன.

    உறக்கத்தில் கிடைக்கும் ஓய்வை விடக் கூடிய ஓய்வினைப் பெறலாம்.

    உடல் உள்ளம் ஆற்றல் பெருகும்.

    குறுகிய காலத்தில் பெரிய வேலைகளைச் செய்ய முடிதல்.

    தெய்வீகச் சக்தி பெருகும்.

    முகம் ஒளி பெறும்

    கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களின் செயற்பாடு அதிகரிக்கும்.

    மனம் அமைதியடையும்

    சிந்தனைத்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கும்

    உள்மனத்தை விழிப்படையச் செய்யும்.

    மேலும் அன்பு, அமைதி, ஒற்றுமை சகோதரத்துவ உணர்வு, அறிவு தன்னம்பிக்கை, நடைமுறை வாழ்க்கையில் சத்தியம், தர்மம் இவைகளை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
     

  • Palani Panguni uthiram

    பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. 
    அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

    சிறப்பு வாய்ந்த இந்ததிருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு திரு ஆவினன்குடி கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா, புனிதமண் எடுத்தல், கிராமசாந்தி பூஜை போன்றவை நடைபெற்றது.தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடி பட பூஜை நடந்தது. 

    இதையடுத்து காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடி கம்பத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது கோவிலில் எழுந்தருளிய வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோஹரா கோ‌ஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.20 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா வந்து அருளாசி வழங்குவார். 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆர்வம் 
    ரிஷபம் – ஆக்கம்  
    மிதுனம் – சோர்வு
    கடனம் – அச்சம் 
    சிம்மம் – தடை
    கன்னி – இன்பம் 
    துலாம் –   சினம் 
    விருச்சிகம் – பிரிவு
    தனுசு – பக்தி
    மகரம் –   உறுதி 
    கும்பம் – தனம் 
    மீனம் – மறதி
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்