இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஓய்வு
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – உழைப்பு
கடனம் – உற்சாகம்
சிம்மம் – எதிர்ப்பு
கன்னி – லாபம்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – செலவு
தனுசு – தனம்
மகரம் – பிரிவு
கும்பம் – சுகம்
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி
Author: லிங்கேஷ்
-
Rasi Palangal
-
March 21 Panguni uthiram
விளம்பி வருடம் – பங்குனி 7
பரமக்குடி முத்தலம்மன், திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் தேர்
21-மார்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி கா 7.41
நட்சத்திரம் : உத்திரம் ம 2.29
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Panguni Uthiram viradham
பங்குனி உத்தரம் என்பது முருக பெருமானுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி.
நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.
வேலை உள்ளவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல்,நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.
-
Kailasanatha car festival
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று காலை கைலாசநாத சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் இசைக்க , நாதஸ்வரம், மேள, தாள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. தேரினை அமைச்சர் கமலக்கண்ணன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரானது தெருவில் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பாரதியார் சாலை, கென்னடியார் வீதி, மாதா கோயில் ரோடு வழியாக சுற்றி வரும் தேர் இன்று மாலை மீண்டும் நிலையை வந்தடையும்.
அடுத்ததாக நாளை பங்குனி உத்திர தீர்த்தவாரியும், வரும் 24ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. இதையடுத்து கைலாசநாதசுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
-
Mayilam Murugan therottam
திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து அரோகரா முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
-
Iyyanar appan Oonjal Urchavam
புதுச்சேரியில் உள்ள அருள்மிகு ஐயனாரப்பன் அவதாரத் திருநாளையொட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி , எல்லைபிள்ளைச்சாவடி பகுதியில் பூரணி பொற்கலை உடனுறை அருள்மிகு ஐயனாரப்பன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஐயனாரப்பன் அவதாரத் திருநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக ஆலய வளாகத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஐயனாரப்பன், பூரணி பொற்கலை அம்மன்களை பல்வேறு வண்ண ஆபரணங்கள் மற்றும் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நேர்மை
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – ஆதரவு
கடனம் – ஆதாயம்
சிம்மம் – தேர்ச்சி
கன்னி – நட்பு
துலாம் – பொறுமை
விருச்சிகம் – சிந்தனை
தனுசு – நன்மை
மகரம் – விருத்தி
கும்பம் – களிப்பு
மீனம் – மேன்மை
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
-
March 20 – Full Moon Day
மார்ச் 20 – பவுர்ணமி
விளம்பி வருடம் – பங்குனி 6
பவுர்ணமி
ஹோலி, திருச்சுழி திருமேனி நாதர், நாங்குநேரி பெருமாள் தேர்
20-மார்-2019 புதன்
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : சதுர்த்தசி கா 10.02
நட்சத்திரம் : பூரம் ம 3.56
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Panjaloga Kumbabishega vizha
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள செல்வகணபதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் உள்ள சிவ சுப்பிரமணிய சுவாமிக்கு நூதன பஞ்சலோக கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளர் நகரிலுள்ள ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ முத்துமாரியம்மன் சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை.விழாவையொட்டி யாகசாலை. பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு ஸ்ரீ வள்ளி தேவசேனா சுவாமிக்கு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் பக்தவச்சலம் செயலாளர் பொருளாளர் தண்டபாணி ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது…..
-
Pateeswarar koil car festival
கோவை பே௫ர் பட்டீசுவரர் தி௫க்கோவில் தி௫த்தேரோட்ட தி௫விழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது
பங்குனி உத்திரத் தி௫விழா 10 நாட்கள் நடைபெறும் இதனையொட்டி இன்று தி௫த்தேரோட்டத்தை மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தார் வடம்பிடித்து துவக்கிவைத்தனர் மேலும் பட்டக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டடோர் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.
பிரம்மன்,விஷ்ணு, ஆதிமூர்க்கம்மன்,காலவமுனிவர் ஆகியோர்களுக்கு ஆனந்த நடனம் தரிசனம் கொடுத்த பங்குனி உத்திரத் தி௫நாள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெ௫விழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.மேலும் இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன.
முதலில் பட்டீசுவரசுவாமி தி௫க்கோவில் தேரை வடம்பிடித்து கோவில் வலம்வந்துவிட்டு பிறகு இரண்டாவது பச்சைநாயகி அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து செல்வார்கள் இது இக்கோவிலின் ஜவிகம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டக்காரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.