Iyyanar appan Oonjal Urchavam

புதுச்சேரியில் உள்ள அருள்மிகு ஐயனாரப்பன் அவதாரத் திருநாளையொட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

புதுச்சேரி , எல்லைபிள்ளைச்சாவடி பகுதியில் பூரணி பொற்கலை உடனுறை அருள்மிகு ஐயனாரப்பன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின்  ஐயனாரப்பன் அவதாரத் திருநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

முன்னதாக ஆலய வளாகத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில்  ஐயனாரப்பன், பூரணி பொற்கலை அம்மன்களை பல்வேறு வண்ண ஆபரணங்கள் மற்றும் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *