Author: லிங்கேஷ்

  • Ponneri thiruvizha

    செங்குன்றம் அருகே அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீ மிதி திருவிழா. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபாடு.

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தின் 54ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த நிலையில் திருவிழாவின் இறுதி நாளான இன்று கோவிலின் எதிரே தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
     

  • OM Dhyanam

    “ஓம்” காரம் மிகச் சக்தி வாய்ந்த ஒலி வடிவமாகும். இதன் ஒலி அதிர்வுகள் உடலிலுள்ள கோளங்கள், கலங்கள் அனைத்துக்கும் சென்று அவற்றை சக்தி வாய்ந்ததாக மாற்றமடையச் செய்து மன சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அமைதியையும் மன ஒருமைப்பாட்டையும் உருவாக்கும். தியானம் சிந்திக்க உதவும்.

    இதற்கு “ஓம்” பிரணவ மந்திரத்தை சுவாசத்தோடு இணைத்துச் செய்யவும். அதாவது மூச்சை உள் இழுக்கும் போது “ஓ” என்னும் உச்சரிப்பையும் சுவாசத்தை வெளிவிடும் போது “ம்” என்னும் உச்சரிப்பையும் நினைத்து அதில் மனதைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

    இதனைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்வது சிறப்புடையதாகும். இதனை நாம் தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுதோ, கடற்கரை, பூந்தோட்டம் போன்றவற்றில் உலாவும் போதோ மேற்கொள்ளலாம். தொடர்ந்து செய்துவர உங்களை அறியாமலே சுவாசத்தோடு “ஓம்” காரம் இணைந்து செயல்படுவதைக் கண்டு நீங்களே அதிசயப்படுவீர்கள். மனம் அமைதியடைந்து நிச்சயம் தியான நிலை உருவாகும். கவலை, துன்பங்கள் மறையும்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நிறைவு
    ரிஷபம் – மேன்மை 
    மிதுனம் – ஆதாயம் 
    கடனம் – அசதி 
    சிம்மம் – நற்செயல்
    கன்னி – உயர்வு 
    துலாம் –   வரவு 
    விருச்சிகம் – ஆக்கம் 
    தனுசு – அனுகூலம் 
    மகரம் –   நட்பு 
    கும்பம் – நஷ்டம்  
    மீனம் – ஜெயம் 
    சந்திராஷ்டமம்    – அசுவினி,பரணி
     

  • Indraya naal eppadi

    மார்ச் 25 – இன்றைய நாள் எப்படி 
    விளம்பி வருடம் – பங்குனி 11
    25-மார்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    1.17
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    11.44
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thiruparankundram car fest

    ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான மக்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனிப் பெருவிழா விற்கான கொடியேற்றம் 12ஆம் தேதி நடைபெற்றது விழாவினையொட்டி தினமும் தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும் மாலையில் தங்க மயில் வாகனம் அன்ன வாகனம் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது
    இன்று தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு கருப்பண்ண சுவாமி சன்னதியில் எழுந்தருளினர். அங்கு பூஜை செய்யப்பட்டு 5 .45 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார் 

    .சரியாக ஆறு இருபத்தி ஐந்து மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க கோயில் வாசல் நிலையிலிருந்து தேர் புறப்பாடு ஆனது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்து கிரிவலப் பாதை வழியாக சென்றனர். தேருக்கு முன்பாக விநாயகர் சிறிய சட்டத்தேரில் புறப்பாடு ஆனார்.

     தேரோட்ட திருவிழாவையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கியும் காவடி எடுத்தும் முருகப் பெருமானே வணங்கினர் விழாவில் நிறைவு நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது
     

  • Dhyanam 3

    அதிக வெளிச்சம் குறைந்த தனியறையில் வசதிக்கேற்ப சுகமாக, உடல் இறுக்கமற்ற நிலையில் நிமிர்ந்து உட்காருக, இதற்கு வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் என்பவற்றைப் பயன்படுத்தலாம்.

     எவ்வாறு உட்கார்ந்து இருப்பினும் முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க. தியானம் சித்திக்க இது உதவும்.

    தியானம் செய்வதில் சுயநலம் இருக்கக் கூடாது. உலகத்துக்காக, சமாதானத்துக்காக, மக்களின் நன்மைக்காக தியானம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தியானம் செய்ய ஒதுக்கி அதனைப் பயன்படுத்தும் போது மனம் பழக்கப்பட்டு இலகுவில் தியானநிலை சித்திக்கும். 

    வடக்குப் பக்கம் பார்த்து தியானம் செய்வது சிறப்பானதாகும். சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறைந்த பின்னரும் வெறும் வயிற்றில் தியானம் செய்வது மிகப் பொருத்தமுடையதாக இருக்கும்.
     

  • Lemon bid

    முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சம் பழம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு ஏலம் போனது

     விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இங்கு இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 

    தினமும் சுவாமி வீதியுலாவும், 18 ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 20 ம் தேதி தேரோட்டமும், 21 ம் தேதி காவடி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. 11 ம் நாளான நேற்று (22.03.2019 வெள்ளி) நள்ளிரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இந்த பூஜையில் திருவிழா காலங்களில்  கருவறையில் உள்ள வேலில் சொருகப்படும் எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடப்பட்டன.  

    மொத்தம் 9 பழங்கள் 12 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையிலான 9 நாள் பழங்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டது. நள்ளிரவு 11 மணிக்கு துவங்கிய ஏலத்தில் முதல்நாள் பழம் ரூ.41 ஆயிரத்திற்கு ஏலம் போனது. 2 ம் நாள் பழம் ரூ. 22 ஆயிரத்திற்கும், 3 ம் நாள் பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 4 ம் நாள் பழம் ரூ. 8 ஆயிரத்து 100 க்கும், 5 ம் நாள் பழம் ரூ.16 ஆயிரத்திற்கும், 6 ம் நாள் பழம் ரூ.10 ஆயிரத்திற்கும், 7 ம் நாள் பழம் ரூ.21 ஆயிரத்திற்கும், 8 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும், 9 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு 9 பழங்களும் ஏலம் போனது

    கடந்த ஆண்டு 9 பழங்களும் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 900 க்கு ஏலம் போனது. பழத்தை ஏலம் எடுக்க  உள்ளூர் காரர்களுக்கே உரிமை என்பதால் அவர்களை உடன் வைத்துக்கொண்டே ஏலம் கேட்கப்பட்டது. வெளியூர்காரர்களுக்கு ஏலம் கேட்க உரிமை இல்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பதால் போட்டிபோட்டுக்கொண்டு பழத்தை ஏலம் எடுத்தனர். பழத்தை ஏலம் எடுத்த தம்பதியர்,  குளித்துவிட்டு ஜோடியாக ஈரத்துணியுடன் சாமி முன்னால் மண்டியிட்டு பழத்தை வாங்கிச்சென்றனர்.. 

    பின்னர் அவர்களுக்கு *இடும்பனுக்கு வைத்து படைக்கப்பட்ட கருவாட்டு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏலம் முடிந்தவுடன்  கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் கருவாட்டு சாதம் வழங்கப்பட்டது ஏலத்தை நாட்டாமை பாலகிருஷ்ணன் ஆணி தைத்த செருப்பின் மீது ஏறி நின்று  நடத்தினார். 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   புகழ் 
    ரிஷபம் – இன்பம்  
    மிதுனம் – உதவி  
    கடனம் – பொறுமை 
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – ஏமாற்றம்
    துலாம் –   வெற்றி
    விருச்சிகம் – சோதனை  
    தனுசு – அலைச்சல்
    மகரம் –   மேன்மை 
    கும்பம் – சுபம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி
     

  • march 24 Indraya naal eppadi

    மார்ச் 24 – சங்கடஹர சதுர்த்தி
    விளம்பி வருடம் – பங்குனி 10
     சங்கடஹர சதுர்த்தி 
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    24-மார்-2019 ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    1.48
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    11.53
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Murugan thiru kalyanam

    ஆறு படை வீடுகளில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாணம் இன்று நடைபெற்து.

    மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது .

    திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடந்தது திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் .வந்தடைந்தனர். 

     அதற்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மணக்கோலத்தில் தெய்வானையுடன் குளக்கரையில் பெற்றோர்களை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது .

    பின்பு சுவாமி கோயில் முழுக்க மண்டபத்தில் எழுந்தருளி கண்ணூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது அதனைத் தொடர்ந்து கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிகள் எழுந்தருளினர் அங்கு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றது யாகசாலை பூஜை முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது அதனை தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் திருமண சம்பிரதாயங்களும் நடந்தன திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்