Thiruvannamalai Maha sivarathiri

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், 5 மணி முதல் பகல் 12 மணிவரை அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். 

மாலை 6 மணியளவில், கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகிய இடங்களில் தீபங்கள் ஏற்ற பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *