Author: லிங்கேஷ்

  • Rama namathin magimaigal

    ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன . ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமம் ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்

    ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார். . அதற்கு ஆஞ்சநேயர, “ ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும்” என்றாராம்

    அவ்வளவு சக்தி வாய்ந்தது ராமநாமம்.!!

    ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம்.
    பாவங்களில் இருந்து கரை சேருவோம் .

  • Ramanavami viradham

    இலங்கை வேந்தனான ராவணனின் அதர்மப் போக்கையும், ஒழுக்கமற்ற வாழ்வையும் அழிக்கும் பொருட்டுதான் மகாவிஷ்ணு, பூமியில் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாக ராமர் என்ற பெயரில் பிறப்பெடுத்தார். அவ்வாறு ராமர் பிறப்பெடுத்த தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமி திதியில் நண்பகல் நேரத்தில் ராமர் பிறந்தார். பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.

    இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்' என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

  • Rama Navami Viradha Vazhipadu

    ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. சித்திரைமாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.

    ராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.

    ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு.

    ஸ்ரீராமர் பிறந்ததை, தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

    ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.

    ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம்உச்சரிக்கலாம்.

    ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு.

  • April 17 2024 Ramanavami

    ஏப்ரல் 17 – ஸ்ரீ ராமநவமி
    குரோதி வருடம் – சித்திரை – 4
    ஏப் 17, 2024
    புதன்
    ஸ்ரீ ராமநவமி, ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : நவமி
    திதி நேரம் :  நவமி மா 6.59
    நட்சத்திரம் :  பூசம் கா 8.51
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • April 17 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நட்பு
    ரிஷபம்         – ஆதரவு
    மிதுனம்     – செலவு
    கடகம்         –  கோபம்
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  நன்மை
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    சுபம்  
    கும்பம்         –      பயம்
    மீனம்         –      நிறைவு
    சந்திராஷ்டமம்    –       கேட்டை

  • April 16 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – எதிர்ப்பு
    ரிஷபம்         – களிப்பு
    மிதுனம்     – நோய்
    கடகம்         –  திடம்  
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    சிக்கல்
    துலாம்         –     பயம்    
    விருச்சிகம்     –  வெற்றி  
    தனுசு         –     வரவு
    மகரம்         –    கவலை
    கும்பம்         –      தாமதம்  
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –       அனுஷம்

     

  • April 16 2024 Indrayanaal

    ஏப்ரல் 16 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – சித்திரை – 3
    ஏப் 15, 2024
    செவ்வாய்
    ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 2.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி மா 5.46
    நட்சத்திரம் :  புனர்பூசம் கா 7.13
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • April 15 2024 Subamuhurthanaal

    ஏப்ரல் 15 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – சித்திரை – 2
    ஏப் 14, 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 4.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி மா 5.01
    நட்சத்திரம் :  திருவாதிரை அ.கா 5.55
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • April 15 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    கவலை  
    துலாம்         –     ஆதரவு   
    விருச்சிகம்     –  அமைதி
    தனுசு         –     துன்பம்
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      செலவு
    மீனம்         –      தாமதம்
    சந்திராஷ்டமம்    –       விசாகம்

     

  • Tamil Newyear namakkal anjaneyar

    தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தங்ககவச அலங்காரம்! -ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில், அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோயில் குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எதிரில் 18 அடி உயரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. மேற்கூரை இல்லாமல் நரசிம்மரை வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.

    உலகபுகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1008 வடைமாலை சாற்றிய பிறகு 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் காப்பு, பஞ்சாமிருதம், நெய், தேன், பழ வகைகள், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் பல் வகை வாசனை மலர்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து. ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.

    இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.