Author: லிங்கேஷ்

  • Kundrathur car festival

    குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா கோலாகலம்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

    பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் சென்னை அடுத்த  குன்றத்தூரில் கட்டப்பட்ட  நாகேச்சர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நவகிரக ஸ்தங்களில் ராகு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

    தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இந்த பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று திருத்தேர் விழா நடந்தது. காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.

    தேர் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிலையத்தில் புறப்பட்ட தேரை  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக பவனி சென்றது. தேரின் நான்கு சக்கரமும் நன்கொடையாளர்கள் மூலம் இரும்பு சக்கரமாக அன்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தேர் இயக்குவதற்கு எளிதாக இருந்தது.

    தேர் சென்ற வழிநெடுக்கிலும் அன்னதானம், மோர், குளர்பானம் வழக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குன்றத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

  • Sattanadhar koil thirukalyanam

    சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்  பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், முத்து சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    ஆறாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது .திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வேத விற்பனர்கள் மந்திரம் ஓதி யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக    மாப்பிளை அழைப்பு பெண் அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு  நடைபெற்றது.

    தொடர்ந்து திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர்  திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபத்தை கண்டு களித்தனர்.

  • April 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – இன்பம்
    ரிஷபம்         – நிறைவு
    மிதுனம்     – தனம்
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    போட்டி  
    துலாம்         –     பெருமை   
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     சுபம்
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      வெற்றி  
    மீனம்         –      ஆதரவு
    சந்திராஷ்டமம்    –        பூராடம், உத்திராடம்

  • April 20 2024 Indrayanaal

    ஏப்ரல் 20 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – சித்திரை – 7
    ஏப் 20, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  துவாதசி முழுவதும் 0.00
    நட்சத்திரம் :  பூரம் ம 3.50
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • April 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – புகழ்
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   ஆதரவு   
    கன்னி         –    செலவு  
    துலாம்         –     கோபம்   
    விருச்சிகம்     –  பெருமை
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      நிறைவு
    மீனம்         –      நற்செய்தி
    சந்திராஷ்டமம்    –        மூலம் , பூராடம்

  • April 19 2024 Sarva Egadasi

    ஏப்ரல் 19 – சர்வ ஏகாதசி
    குரோதி வருடம் – சித்திரை – 6
    ஏப் 19, 2024
    வெள்ளி
    சர்வ ஏகாதசி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி இ 10.28
    நட்சத்திரம் :  மகம் ம 1.18
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • April 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – பெருமை
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – செலவு
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   சுகம்  
    கன்னி         –    நிறைவு
    துலாம்         –     வெற்றி  
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    அமைதி
    கும்பம்         –      பயம்
    மீனம்         –      கோபம்
    சந்திராஷ்டமம்    –       கேட்டை, மூலம்

  • April 18 2024 Indrayanaal

    ஏப்ரல் 18 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – சித்திரை – 5
    ஏப் 18, 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி இ 8.35
    நட்சத்திரம் :  ஆயில்யம் கா 10.55
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • Muthumaariamman koil therottam

    மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது – மேளதாளம், தப்பாட்டம் முழங்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் – கிராமம் முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்பட்ட கோலாகலம்.

    மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.

    பெரிய தேரில் முத்துமாரியம்மனும்,  அய்யனார் ஒரு தேரிலும், முருகன் ஒரு தேரிலும் மொத்தம் 3 தேர்கள் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. மேளதாளம், தப்பாட்டம் முழங்க, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் தாயே முத்துமாரியம்மா என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.

    இந்த தேர்த்திருவிழாவை காண பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அருள்மிகு முத்துமாரியம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டு கோலாகலமாக நடந்தது.

  • Thirupathy sri ramanavami

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சீதா ராமர் லட்சுமணர், அஞ்சேனயருக்கு நடைபெற்ற திருமஞ்சனம்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில்   ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா, ராமர்  லட்சுமணர், ஆஞ்சனேய சுவாமி உற்சவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில்  அர்ச்சகர்கள் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம்  செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் சுவாமி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு  கோதண்டராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் ஏழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். நாளை இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.