Tag: Thirupathy

  • Thirupathy Free Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு  மத்திய அரசு ஊரடங்கு தளர்வு செய்த பிறகு ஜூன் 11 தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதியில் தினந்தோறும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

    இந்நிலையில் திருப்பதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.இருப்பினும் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் மட்டும் தினந்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் மீண்டும் திருப்பதி அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, திருப்பதி பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது. மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது தொடங்கப்பட்டாலும்  டிக்கெட் பெறுவதற்கு மட்டும் பக்தர்களிடையே ஆர்வம் குறைந்த அளவிலேயே முதல் நாளான இன்று  காணப்பட்டது . 
     

  • Thirupathy ezhumalayan jewels

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நகைகள் விரைவில் டிஜிட்டல் வடிவில் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் பார்வைக்கு கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

    உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல மாமன்னர்கள், பேரரசர்கள் தங்கள் வெற்றிக்கு கிடைத்த காணிக்கையாக ஏழுமலையானை தரிசனம் செய்து பல வைர, வைடூரிய, மாணிக்கங்கள், பொருத்தப்பட்ட விலை மதிப்புமிக்க நகைகளை ஆபரணங்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு கிருஷ்ணதேவராயர் மைசூர் மகாராஜா உள்பட பல மாமன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள்  ஆட்சியிலும் தற்பொழுதும் பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

    அவ்வாறு வழங்கப்பட்ட ஆபரணங்களில் 450 க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் சுவாமிக்கு தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்களுக்கு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. விலை மதிப்பு மிக்க இந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் இருந்து வந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானமும் எடுத்து வந்தது. 

    ஆனால் சுவாமிக்கு அலங்கரிக்க கூடிய விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பக்தர்கள் பார்வைக்கு வைப்பது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகம விதிகளுக்கு முரணானது என்று ஆகம ஆலோசகர்களும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சுவாமியின் நகைகளை முப்பரிமாண வடிவில் டிஜிட்டல் முறையில் வடிவமைத்து பக்தர்கள் பார்வைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெக் மகேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தேவஸ்தானம் இதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. 

    ஆறு மாதம் முதல் ஓரு ஆண்டுக்குள் திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் ஏழுமலையானுக்கு அலங்கரிக்க கூடிய ஆபரணங்கள் முப்பரிமாண வடிவில் பக்தர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலமாக ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எவ்வாறு உள்ளது, பாதுகாப்பாக உள்ளதா என்ற சந்தேகங்கள் இல்லாமல் முழு திருப்தி அடைய செய்யும் விதமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும்    தொடங்கப்பட்டு  ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த 30 நாட்களில் 2.63 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து, 15.80 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஜூன் எட்டாம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

    அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு தளர்வு வழங்கி எட்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டும்,  திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள்  என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலை ஒட்டி நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 15.80 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    ஒரு லட்சம் பக்தர்கள் வரை மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினந்தோறும் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Garuda vaganathil thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்….

    Posted by shakthionline.com on Monday, July 6, 2020

    முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் துணை செயல்அலுவலர் ஹரிந்திரநாத்,  சிறப்பு அதிகாரி சேஷாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Thirupathy July Dharshan Ticket

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 
       
    திருப்பதியில் இந்த மாதத்துக்கு ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக நேற்று ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல்  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் தேவஸ்தனம் நேற்று வெளியிட்டுள்ளது. 

    அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன. அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருநாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 17 நாட்களாக சோதனை அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 800 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதனால், நாளொன்றுக்கு 12,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதில், சர்வ தரிசனத்தில் 3,000 பக்தர்களும், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களில் 9,000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

    அதன் படி, ஆன்லைனில் நாளொன்றுக்கு மூன்று ஆயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

     சுமார் 6000 பக்தர்கள் வரை தற்போது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இன்று முதல் 12,750 பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஜூன் 30 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy VIP Dharshan Ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில் 24 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் டிக்கெட் வழங்கும் கோட்டாவை இன்று தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். 

    இதன்மூலம் பத்தாயிரம்  ரூபாய் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தங்களுக்கு உரிய தேதியில் விஐபி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 500 டிக்கெட்டிற்கு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • June 21 thirupathy dharshan cancel

    சூரிய கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 

    ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.  இதனால் ஏழுமலையான்  கோயிலில் 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட உள்ளது. 

    ஜூன் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு  மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர். 

    இரவு  8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே ஜூன் 21 அன்று ஏழுமலையான்  கோயிலை பக்தர்களுக்கு அன்றைய தினம் முழவதும் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கோயிலில் பக்தர்களை  கல்யாண உற்சவ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிரகணத்தின் போது  தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற எந்தப் இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கபடாது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Dharshan

    ஏழுமலையான் கோவிலில் 79 நாட்களுக்கு பிறகு  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வருகையை அடுத்து கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக  பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 79 நாட்களுக்கு பிறகு  இன்று முதல் அனுமதி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் குடும்பத்தினர் 6000 பேர் என இன்றும் நாளையும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைதொடர்ந்து.

    புதன்கிழமை அன்று திருமலையில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு. பதினோராம் தேதி வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைக்க உள்ளது. இதற்காக இன்று காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிமாநில பக்தர்கள் ஆந்திர மாநில அரசின் மூலம் வழங்கப்படும் மாநில எல்லையில் நுழைவதற்கான இ பாஸ் கட்டாயம் பெறவேண்டும்.   

    தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறை, அன்னப் பிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கப்பட்டு சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது. கை கழுவுவதற்கு குழாய்களின் மீது  கைகளை வைக்காமல் கால்களில் அழுத்தினால் தண்ணீர் வரும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
     

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. முதலில் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் உள்ளூர் பக்தர்கள் 10-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
     
    11-ம் தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டு 3000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

    முன்பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.