Blog

  • August 6 Sasti Viradham

    ஆகஸ்ட் 6 – சஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – ஆடி 21
    06-ஆக-2019 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    7.28
    நட்சத்திரம்    :    சித்திரை    அ.கா    4.34
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Danvantri Peedathil Varalakshmi Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 09.08.2019 வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு விரத நாளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  சுமங்கலிப் பெண்களின் நலன் கருதியும், கன்னிப் பெண்களின் நலன் கருதியும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியை அனுஷ்டிக்கும் விதத்திலும் பாக்யலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது.

    சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் லக்ஷ்மிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    மேற்கண்ட யாகத்தில் பங்கேற்பதின் மூலம் அஷ்ட லக்ஷ்மியாக திகழும் மஹாலக்ஷ்மியின் அருளினால் இல்லத்தில் செல்வம் கொழிக்கும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார், பெண்களின் மறைமுக நோய்கள் நீங்கும், மாங்கல்ய பலம் கூடும், செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெறுவர், சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும், பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரத நாளில் யாகத்தில் கலந்து கொண்டு பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    மேலும் அன்னபூரணியின் அருள் கிடைத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் சேரும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும், குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும், விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தைரிய லட்சுமி குடியேருவாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு வரலக்ஷ்மி எனும் வர மஹாலக்ஷ்மியை வழிபட்டு நன்மைகளை பெறுவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033 
     

  • Thirumana Thadai Neenga

    தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டு வருகிறதா? இதை சரியாக்குவது எப்படி? இந்த தடைகள் நீங்கி திருமணம் சிறப்பாக நடக்க என்ன செய்யணும் என்று தெரியுங்களா?

    சரியான வயதில்… சரியான நேரத்தில் திருமணம் நடப்பதுதான் வாழ்வின் அடுத்தக்கட்டமாக இருக்கும். ஆனால் பலருக்கு அதுபோல் நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் பதில் வரும். பலரும் பலவிதமாக தொடர்ந்து திருமணத் தடைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னையும் தொழிலில் முன்னேற்றம் இன்றி தடைப்பட்டு வந்தவர்களுக்கு ஒரே மாதத்தில் தீர்வு ஏற்பட்டு பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

    பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை ஆகியவையும் சித்தர்கள் அருளுடன் ஒரே மாதத்தில் தீர்வாகி வருகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 6374772550 , 77081 24727

    திருமணத் தடைகள் எதனால் ஏற்படுகிறது. இதிலிருந்து நிவர்த்தி பெறுவது எப்படி? நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு பெறுவது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள். இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள சென்னை சூளைமேட்டில் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை தெரிந்து கொள்ளலாம். வாருங்கள். விபரங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

    பிரச்னைகள் நிவர்த்தியாகி சந்தோஷமாக மனம் போல் மண வாழ்வு அமைய என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
     

  • Atthi Varadhar August 8 Dharisnam

    காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 36 வது நாளான இன்று, இளஞ்சிவப்பு  நிற பட்டாடை அணிந்து காட்சி தரும் அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிகிறார் அத்தி வரதர். 

    அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

    இளஞ்சிவப்பு நிற பட்டு வஸ்திரத்தில் அத்தி வரதர்  இன்று வண்ண வண்ண மலர்களால் ஆன மாலையை சுற்றப்பட்டு மலர் கிரீடத்தில் காட்சி அளிக்கின்றார். நேற்று 35 வது நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கீர்த்தி 
    ரிஷபம் – சுபம் 
    மிதுனம் – அமைதி
    கடனம் – அன்பு
    சிம்மம் – உயர்வு 
    கன்னி –  சுகம் 
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – இரக்கம் 
    மகரம் –   பிரீதி 
    கும்பம் – பக்தி    
    மீனம் – பாசம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி

  • August 5 Garuda Panjami

    ஆகஸ்ட் 5 – கருட பஞ்சமி
    விகாரி வருடம் – ஆடி 20
    கருட பஞ்சமி
    05-ஆக-2019 திங்கள்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    9.34
    நட்சத்திரம்    :    உத்திரம்    கா    7.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Siddhar Peedathi aadi pooram

    வேலூர் மாவட்டம் ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் திரு ஆடிப்பூரம் உற்சவம்  ஸ்ரீ மோகனானந்த ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. 

    அதில் கலந்துக்கொண்ட பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக 1500 பால்குடம், 501 தீச்சட்டி மற்றும் அலகு குத்திக்கொண்டு மங்கள இசை சண்டிமேளம் முழுங்க சிவகாளி சக்தி கரகத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 

    பின்னர் சொர்ணகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி அருள் பெற்றனர்

  • Atthi Varadhar Video

    காஞ்சி அத்தி வரதர் நீல மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் இன்று காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் அத்தி வரதர்  35 வது நாளில் நீலம் மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 

    34 நாட்களில் 51 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று இலவச தரிசனத்தில் தரிசிக்க 6 மணி நேரம் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இன்று 3 மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

  • Vinayakar koil Ganapathy Homam

    அரக்கோணத்தில் ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது..

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீபகவான் மகாவீரர் தெருவில்  அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமற்சையாக நடைபெற்றது. 

    இதில் உலக அமைதிக்காகவும்  மழை வேண்டியும்  பூஜைகள் செய்யப்பட்டது.வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழுங்க சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Nellaiappar Koil Mulaikattu Vaibavam

    ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்தாம்  திருநாளில் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் முளைக்கட்டு வைபவம் நடைபெற்றது. 

    அருள்மிகு சுவாமி  நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 28-ஆம் தேதி மதியம் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  10-ஆம் நாளான சனிக்கிழமை இரவு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.